மொத்த சொத்தையும் விற்றால்தான் இந்த பைக்கை வாங்க முடியும் போல! இதுல ஃபேன்சி நம்பர் பிளேட் வேற!
பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சூப்பர்பைக், ஆர்1300 ஜி.எஸ்.ஏ டிராபி (R1000 GSA Trophy) ஆகும். இந்த விலையுயர்ந்த சூப்பர் பைக்கிற்கான முன்பதிவுகள் (Bookings) நடைபெற்றுவரும் நிலையில், இந்த பைக்கை புக் செய்த வாடிக்கையாளர்களுள் முதல் வாடிக்கையாளருக்கு பைக் டெலிவிரி (Bike Delivery) செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான படங்களை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், மஹாராஷ்டிராவின் புனேவில் டெலிவிரி செய்யப்பட்டுள்ள இந்த முதல் பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ்ஏ பைக்கை ஸ்பெஷலான நம்பர் பிளேட் (Number Plate) உடன் இந்த கஸ்டமர் வாங்கி உள்ளார்.

'0001' என்கிற மிகவும் ஃபேன்சியான நம்பர் பிளேட்டை இந்த நபர் வாங்கியுள்ளார். இதற்காக நிச்சயம் இவர் கூடுதலாக சில லட்ச ரூபாய்களை செலவு செய்திருப்பார் என நினைக்கிறோம். எங்களுக்கு தெரிந்தவரையில், ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இந்த ஒரு பிஎம்டபிள்யூ பைக்கில் மட்டும் இந்த நபர் செலவழித்து இருப்பார் என கருதுகிறோம்.
இவ்வளவு விலை கொண்ட பைக்கை குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் புனேவில் பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூமுக்கு (Dealership Showroom) வந்து இந்த நபர் டெலிவிரி பெற்றுள்ளார். ஆர்1300 ஜி.எஸ்.ஏ பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இதனை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் பவர்ஃபுல்லான அட்வென்ச்சர் பைக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆர்1300 ஜிஎஸ்ஏ பைக்கின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Prices) ரூ.23.35 லட்சமாக உள்ளது, இதற்கடுத்துள்ள ஸ்டைல் ட்ரிபிள் பிளாக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.40 லட்சமாக தற்சமயம் உள்ளது.
ஆனால், இவை இரண்டையும் தற்போது புனேவில் பைக்கை டெலிவிரி பெற்றுள்ள இந்த நபர் வாங்கவில்லை. இவர் வாங்கி இருப்பது, பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜிஎஸ்ஏ பைக்கின் டிராபி வேரியண்ட்டை ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.65 லட்சமாகவும், ஆன்-ரோடு விலை (On-road Price) எப்படியிருந்தாலும் ரூ.30.37 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல், ஸ்டைல் ஆப்ஷன் 719 என்கிற வேரியண்ட்டிலும் இந்த அட்வென்ச்சர் பைக் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.26.65 லட்சமாக உள்ளது. இந்த பவர்ஃபுல்லான பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கில் 1,300சிசி, ட்வின்-சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 145 பிஎச்பி மற்றும் 149 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியத இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலமாகவே அட்வென்ச்சர் பைக்குகளுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. மக்கள் பலரும் ஆஃப்-ரோடுகளுக்கும் கொண்டு செல்லக்கூடிய அட்வென்ச்சர் பைக்குகளை வாங்க விரும்புகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கை வாங்கி இருப்பது ஏரியாவில் இந்த நபரை தனித்து காட்டும்.


Click it and Unblock the Notifications









