ரூ.1,200 சம்பளம் வாங்கும்போதே இப்படியா... பாலிவுட்டை கலக்கிய வெளிநாட்டு நடிகை வாங்கிய கார்!!
ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் செல்வந்தர்கள் விரும்பக்கூடிய கார் நிறுவனம் என்றால் அது ரோல்ஸ்-ராய்ஸ் ஆகும். பிரிட்டிஷ் (British) கார் நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸின் கார்களை சில நடிகர், நடிகைகளும் வைத்துள்ளனர். இந்தியாவில் அத்தகைய நடிகர், நடிகைகள் தற்சமயம் ஏராளமானோர் உள்ளனர். பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) உள்பட ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கு நிறைய சினிமா (Cinema) பிரபலங்கள் ஓனர்களாக உள்ளனர். ஆனால், 1950ஆம் காலக்கட்டத்திலேயே ஒரு இந்திய நடிகை (Actress) ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கினார் என்றால் நம்ப முடிகிறது.
அவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை வைத்திருப்பதே தனி சிறப்பு தான். ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படும் ரூ.10 கோடி விலையில் ஃபெராரி (Ferrari), பெண்ட்லீ (Bentley) உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், ரோல்ஸ்-ராய்ஸ் காரை வைத்திருப்பது தனி அடையாளம் ஆகும்.

ஏனெனில், அந்த அளவிற்கு பிரம்மாண்டமானதாக, எவரொருவரையும் எளிதில் கவரக்கூடியவைகளாக ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த கோட்டையை ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இன்றோ அல்லது நேற்றோ கட்டி எழுப்பிவிடவில்லை. சுமார் 120 வருடங்களாக ரோல்ஸ்-ராய்ஸ் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் மற்றும் கண்டுப்பிடிப்புகளின் வெளிப்பாடே தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஆகும். உலகையே கட்டி ஆண்ட பிரிட்டிஷ்காரர்களின் உயரிய காராக ரோல்ஸ்-ராய்ஸ் விளங்குகிறது.
இத்தகைய நிறுவனத்தின் காரை 1950ஆம் காலக்கட்டத்திலேயே வாங்கி பயன்படுத்திய இந்திய நடிகையின் பெயர், நதிரா (Nadira) ஆகும். தென்னிந்திய மொழி சினிமாவில் வட இந்திய நடிகைகள் என்றாலே தூக்கி வைத்து கொண்டாடப்படுவர். அதுவே, பாலிவுட் (Bollywood) சினிமாவில் வெளிநாட்டு நடிகைகள் என்றாலே விரைவாகவே பிரபலமாகிவிட முடியும் என்கிற கருத்து பரவலாக உள்ளது. அவ்வாறான வெளிநாட்டில் பிறந்த நடிகை தான், நதிரா ஆவார்.
ஈராக் (Iraq) நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் 1932ஆம் ஆண்டில் பிறந்தவரான நதிராவின் உண்மையான பெயர், எசிகேல் (Ezekiel) ஆகும். 1950, 1960களில் பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருந்த இவருக்கு, சில நடிகை கதாபாத்திர வாய்ப்புகள் வந்தாலும், நதிராவை அதிகமாக துணை நடிகை கதாபாத்திரங்களில் தான் பார்க்க முடிந்தது. நடிகைகள் மாறினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் துணை நடிகை என்றாலே நதிரா தான் என பாலிவுட் மாறியது.
தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்காத நடிகை நதிரா 1975இல் வெளிவந்த ஜூலி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் (Flimfare) விருதை வாங்கினார். இவர்தான் 1950ஆம் காலக்கட்டத்திலேயே ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கி மொத்த பாலிவுட்டையும் அதிரவிட்டவர். அந்த சமயத்தில் நதிராவுக்கு 20 வயது தான் இருக்கும். ஒரு திரைப்படத்திற்கு அவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் ரூ.1,200 ஆகும்.
அந்த சமயத்தில் பாலிவுட்டில் இது மிகவும் அதிக சம்பளம் ஆகும். கேரியரின் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்திற்கு நடிகை நதிரா ரூ.3,600 சம்பளம் பெற்றார். இவர் அந்த சமயத்திலேயே ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கினார் என்கிற தகவல் மட்டுமே உள்ளதே தவிர்த்து, என்ன மாதிரியான ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கினார் என்பது தெரியவில்லை. ஏனெனில், அவரது ரோல்ஸ்-ராய்ஸ் காரின் எந்த படமும் நமக்கு கிடைக்க பெறவில்லை.
பாலிவுட்டில் முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கிய தற்கால மாடர்ன் நடிகை பிரியங்கா சோப்ரா ஆவார். இவரிடம் இருப்பது ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 1 (Ghost Series 1) கார் ஆகும். சில்வர் மற்றும் கருப்பு என 2 நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டதாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரை பிரியங்கா சோப்ரா வைத்துள்ளார். இந்த காரை பெங்களூரில் தற்சமயம் பிரியங்கா சோப்ரா நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட்டில் இன்னும் எத்தனை நடிகை வேண்டுமாயின் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்கலாம். ஆனால், முதல் ஆள், நடிகை நதிரா ஆவார். அவரது ரோல்ஸ்-ராய்ஸ் காரின் படம் ஏதேனும் ஒன்றாவது கிடைத்திருந்தால் அதனை பற்றி கூறியிருப்போம். மேலே நாங்கள் பதிவிட்டு இருப்பது நடிகை நதிராவின் ரோல்ஸ்-ராய்ஸ் காரின் படம் அல்ல.


Click it and Unblock the Notifications








