சென்னையை ஓவர்டேக் செய்யும் பெங்களூர்!! வெளிநாடுகள் தோற்று போகும்... ஒருமுறையாவது இதில் போய் பாருங்கள்!
பொருளாதாரத்தில் இந்தியா கடந்த சில வருடங்களில் அடைந்திருக்கும் உயரம் பெரியது. குறிப்பாக, கர்நாடகா தலைநகர் பெங்களூர் தென்னிந்திய அளவில் பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான காரணம், பெங்களூர் இந்தியாவின் மென்பொருள் தலைநகர் ஆகும். உலகளவிலான மென்பொருள் முன்னேற்றத்தினால் பெங்களூரும் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த நிலையில், பார்ப்போரை மயக்கக்கூடிய டபுள்-டக்கர் மேம்பாலம் பெங்களூரில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வட இந்தியாவுக்கு டெல்லி என்றால், தென்னிந்தியாவுக்கு பெங்களூர் என சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி, ஆட்டோமொபைல், உணவு என அனைத்து துறைகளிலும் கர்நாடக மாநில தலைநகர் சமீப காலங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு கர்நாடக மக்கள் மட்டும்தான் காரணம் என கூற முடியாது. ஏனெனில், பெங்களூரில் கர்நாடக மக்களுக்கு இணையாக கேரள மற்றும் நம் தமிழ் மக்களும் இருப்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.

1970, 80ஆம் காலக்கட்டத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் வளர்ச்சியில் மும்பை எவ்வாறு கோடிகளில் திளைத்ததோ அதேபோன்று தென்னிந்திய மக்கள் கூடும் சங்கமமாக தற்சமயம் பெங்களூர் விளங்குகிறது என கூறினால் அதில் மிகையில்லை. பெங்களூருக்கு வட இந்திய மக்கள் வருகை தருவதும் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அதிகமாகினாலே அந்த இடத்தில் சாலை போக்குவரத்தும் தானாக அதிகரித்துவிடும்.
இந்த வகையில், பெங்களூரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் நெரிசல் மிகுந்ததாக மாறி வருகிறது. இன்னும் சொல்லப் போனால், சாஃப்ட்வேர் டெக்னாலஜிக்கு அடுத்து பெங்களூரில் ஃபேமஸ் எதுவென்று கேட்டால், எல்லாரும் சொல்வது போக்குவரத்து நெரிசலை தான். பெங்களூரில் இருந்து டெல்லிக்கு செல்ல விமானத்தில் 2 மணிநேரங்கள், ஆனால் பெங்களூர் விமான நிலையத்திற்கு செல்ல 3 மணிநேரம் என மீம்ஸ்களை பார்த்திருப்பீர்கள்.
அந்த அளவிற்கு கேலி, கிண்டல்களுக்கு உள்ளான பெங்களூர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் பெங்ளூர் மாநகராட்சி தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தெற்கு பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான சாலைகளில் டபுள்-டக்கர் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதாவது, கீழே சாலை, அதற்கு மேலே வாகனங்களுக்கான சாலை, அதற்கு மேலே மெட்ரோ இரயில் மேம்பாலம் என இரண்டு அடுக்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த டபுள்-டக்கர் மேம்பாலம் பார்ப்பதற்கு எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளதோ அந்த அளவிற்கு வேலை பளுவை கொண்டதாகவும், நேர விரயத்தை கொண்டதாகவும் உள்ளது. 3.3 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுவரும் இந்த மேம்பால பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளதாக பெங்களூர் மெட்ரோ இரயில் கார்ப்பிரேஷன் லிமிடெட் (BMRCL) தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மையில், இந்த டபுள்-டக்கர் மேம்பால பணிகள் 2021 அக்டோபர் மாதத்திலேயே நிறைவடைய வேண்டியது. ஆனால், பல்வேறு காரணங்களினால் கிட்டத்தட்ட 3 வருடங்கள் தாமதமாகி உள்ளது. தெற்கு பெங்களூரை மென்பொருள் தொழிற்நுட்ப மையங்களான வைட்ஃபீல்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி உடன் இணைக்கும் விதமாக இந்த டபுள்-டக்கர் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய மேம்பாலம் ஆனது தரையில் இருந்து 8 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதில் இருந்து 2வது மேம்பாலமும் சரியாக 8 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், சாலையில் இருந்து 16 மீட்டர் உயரத்தில் மெட்ரோ இரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, எச்.எஸ்.ஆர் லேஅவுட் மற்றும் பிடிஎம் லேஅவுட் போன்ற பெங்களூரின் முக்கியமான பகுதிகளை இந்த மேம்பாலம் கடந்து செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெட்ரோ இரயில் மேம்பாலத்திற்காக அமைக்கப்பட்ட அதே தூண்களில் வாகனங்கள் செல்வதற்கான மேம்பாலம் என்பது உண்மையில் அருமையான டிசைன் ஆகும். இத்தகைய மேம்பாலங்களை கட்டுவதற்கான செலவு குறைவு என்பது மட்டுமின்றி, இடமும் நிறைய மிச்சமாகும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, தெற்கு பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு இந்த டபுள்-டக்கர் மேம்பாலம் பெரிதும் உதவியாக இருக்கும்.
Source: Money Control


Click it and Unblock the Notifications








