மும்பைக்கு வந்தது முதல் டபுள் டக்கர் ஏசி எலெக்ட்ரிக் பஸ்... சென்னைக்கு எப்போ வரப்போகுது தெரியுமா?
மும்பையில் எலெக்டரிக் ஏசி டபுள் டக்கர் பஸ் அறிமுகமாகியுள்ளது. ஸ்விட்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பஸ் குறித்த விரிவான மற்றும் தெளிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

டபுள் டக்கர் பஸ்கள் இந்தியாவிற்கு ஒன்றும் புதிதல்ல 90களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட்டது. அதாவது மாடி பஸ்கள், கீழே வழக்கமான பஸ்ஸாகவும், மேலே செல்ல படுகட்டுகளுடன் மேல வேறு மேலும் சீட்களுடன் இந்த பஸ்கள் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த பஸ்கள் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்த்தது.

அன்று பெருநகரங்களை பார்க்க வந்த பலர் இந்த டபுள் டக்கர் பஸ்களில் செல்ல விரும்பினர். ஆனால் இந்த ரக பஸ்களை தொடர்ந்து நெரிசல் நிறைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ள பகுதிகளில் இயக்குவது முடியாத காரியமாக இருந்ததால் மெல்ல மெல்ல இந்த பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டன. இறுதியாக பெங்களூருவில் கடந்த 2014ம் ஆண்டு இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது.

ஆனால் இன்றைய போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஒரே பஸ்சில் அதிகமான பயணிகள் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படியான பஸ்கள் இன்று வரப்பிரசாதமாக அமையும் என பலரால் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு போக்குவரத்து துறை மூலம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ள சாத்தியகூறுகளை ஆய்வு செய்தது.

அதன்படி அசோக்லேண்ட் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான ஸ்விட்ச் நிறுவனம் இதற்கான பணிகளை துவங்கியது. இந்நிலையில் மும்பையில் செயல்படுத்துவதற்கா டபுள் டக்கர் பஸ்களை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனம் முழுவதுமாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் வகையில் இந்த பஸ்சை தயாரித்துள்ளது EiV 22 எனய பெயர் இந்த மாடல் பஸ் முற்றிலும் ஏசி பஸ்ஸாக பயன்பாட்டிற்கு வருகிறது.

இந்த ஸ்விட்ச் EiV 22 பஸ் என்பது உலகின் முதல் செமி ,லோ ஃப்ளோர் பஸாக அறிமுகமாகியுள்ளது. இது முற்றிலும் ஏசி பஸாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்சின் பின்புறம் பெரிய கதவு கொடுக்கப்பட்டுள்ளது. மேல் ஏறும் படிக்கும், கீழ் தளத்திற்கும் ஒரே கதவாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் முழுவதும் லைட் வெயிட் அலுமினியம் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் வடிவமைக்கப்படும் போதே அதிகமான பயணிகளை கொண்டு குறைவான செலவில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

இந்த EiV 22 பஸ்சில் சாதாரண பஸ்சை விட இரண்டு மடங்கு சீட் எண்ணிக்கை அதிகம் பஸ்சின் எடையை பொருத்தவரை சாதாரண பஸ்சை விட 18 சதவீதம் மட்டுமே எடை அதிகம். இந்த பஸ்சில் மேல் பகுதிக்கு ஏற இரண்டு இடங்களில் படிகள் இருக்கிறது. எமர்ஜென்ஸி கதவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 65 பேர் பயணம் செய்யலாம். இது இருக்கைகளின் எண்ணிக்கை மட்டும் மற்றும் நின்று கொண்டு பயணிப்பவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் 100ஐ தாண்டும். இந்த ஸ்விட்ச் EiV 22 பஸ்சை பொருத்தவரை 231 kwh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 2 ஸ்டீங், லிக்யூடு கூல்டு,அதிக அடர்த்தி கொண்ட என்எம்சி கெமிஸ்ட்ரி பேட்டரிபேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் டூயல் கன் சார்ஜிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 250 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த பஸ் FAME II திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு இந்நிறுவனத்திடம் முதற்கட்டமாக 200 பஸ்களுக்கான ஆர்டரை வழங்கியுள்ளது. இதை மும்பையில் இயக்க முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து இந்த திட்டம் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விஸ்தரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்த எலெக்டரிக் ஏசி டபுள் டக்கர் பஸ் சென்னைக்கும் வரும் என நம்பலாம். இதன் மூலம் பொது போக்குவரத்தால் ஏற்படும் மாசு பெரும் அளவில் குறைவும் இது மட்டுமல்லாமல் போக்குவரத்திற்கான செலவும் குறையும்.


Click it and Unblock the Notifications