இந்த கார் ரோட்டுல ஓட அனுமதி கிடைச்சாச்சு! இப்பவே இந்த காரை புக்கிங் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க
உலகின் முதன் முறையாக பறக்கும் காருக்கு சாலையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பார்க்கவே வித்தியசமாக இருக்கும் இந்த காரை இனி வாங்கி சாலையில் யார் வேண்டுமானாலும் ஓட்டிச் செல்லலாம். ஆனால் இந்த காரில் பறந்து செல்ல இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது உலகில் பல நிறுவனங்கள் பறக்கும் கார்களுக்கான ஆய்வுகளை செய்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் பறக்கும் கார்களை நாம் பார்த்து விடுவோம். அது செயல்பாட்டிற்கு வந்துவிடும் என நம்பலாம். அந்த அளவிற்கு மிக வேகமாக அதன் பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. இப்படியாக பறக்கும் காரை தயாரித்து வரும் நிறுவனம் தான் அஸ்கா.

இந்த அஸ்கா நிறுவனம் ஏ5 என்ற பறக்கும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த கார் ஏரோ டைனமிக்ஸ் முறையில் 4 சீட்டர்களுடன் இவிடிஓஎல் எனப்படும் வெர்டிக்கல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க அரசிடம் தற்போது பொது சாலையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் சேர்மன் மாகி கல்ப்லின்ஸ்கை கூறும் போது : "நாங்கள் வெற்றிகரமாக 480 கிலோ மீட்டர் வரை இந்த வாகனத்தை சாலையில் டிஎம்வி நம்பர் பிளேட் உடன் டெஸ்ட் செய்துள்ளோம். கலிஃபோர்னியா சாலைகளில் பறக்கும் கார்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளோம். எங்கள் இவிடிஓஎல் தொழிற்நுட்பத்திற்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்." என கூறினார்.

இந்த கார் ஒரு எஸ்யூவி காரின் அளவிலேயே சாலையல் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் இதன் டிரைவிங் போஸிஷனும் உயரமான போசிஷனாக இருக்கும். இதனால் டிரைவருக்கு நல்ல விசிபிளிட்டி கிடைக்கும். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸூம் கிடைக்கும். இதில் குறைவான தூரத்திற்கு டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்கும் செய்யும் வாய்ப்புகளும் உள்ளது.
இந்த அஸ்கா ஏ5 பறக்கும் கார் 400 கி.மீ வரை பறக்கும் திறன் கொண்டது. இந்த பறக்கும் கார் அமெரிக்காவின் விமான துறையிடம் பறக்கும் திறன் கொண்ட வாகனம் என்ற சான்றை பெற்றுள்ளது. ஆனால் இந்த சான்று கமர்ஷியல் ரீதியாக இந்த காரை பறக்கும் காராக பயன்படுத்தலாம் என்பதற்கான சான்று கிடையாது. இந்த காரின் புரோட்டோ டைப்பை சோதனை செய்வதற்காக கிடைத்த கிரீன் சிக்னல் தான்.

இந்த பறக்கும் காருக்கு ஏற்கனவே ஆர்டர்கள் குவித்துவிட்டது ஏற்கனவே 60 பேர் இந்த காருக்காக ஆர்டர் செய்துவிட்டனர். இன் மூலம் இந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் இப்பொழுதே வருமானமாக கிடைத்துவிட்டது. இந்நிறுவனத்தின் வெப்சைட்டில் இந்த ஏ5 2026ம் ஆண்டு முழு செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறக்கும் கார்களின் சோதனை தற்போது இந்தியாவிலும் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை ஐஐடியில் இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் விரைவில் பறக்கும் கார்கள் செயப்பட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் சென்னை அல்லது பெங்களூரு ஆகிய நகரங்கள் தான் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.
பறக்கும் கார்கள் உலகில் பல இடங்களில் டெஸ்ட் செய்யப்பட்டு விட்டன. பல சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. கமர்ஷியல் ரீதியிலாக எந்த நிறுவனத்திற்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. சோதனை கட்டத்திலேயே பல நிறுவனங்கள் பறக்கும் கார்களை முழுமையாக வடிவமைத்து சாதனைகளை படைத்துவிட்டனர். விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பறக்கும் கார்களுகள் விரைவில் செயல்பாட்டிற்கு வருவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கிவிட்டன. ஒரு காலத்தில் சயின்ஸ் ஃபிக்ஷனாக கருதப்பட்ட இந்த பறக்கும் கார் தற்போது உண்மையிலேயே வரப்போகிறது. வெகு சீக்கிரமே இந்த பறக்கும் கார்கள் இந்தியாவிற்கும் வரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









