BMW ஸ்கூட்டரில் யாருக்கும் தெரியாம வந்துட்டு போனது இவரா? ஹெல்மெட்டை கழட்டி இருந்தா மொத்த ரோடும் காலி!!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) தேவை நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சாலையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாகவே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கடந்த சில வருடங்களில் உயர்ந்துள்ளது. பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பிஸ்னஸில் இறங்கி உள்ளன.
புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே 2-வீலர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனங்களில் இருந்து பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் வரையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கின்றன.

ஆனால், இதில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் விற்பனை செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சற்று வித்தியாசமானவைகளாகவும், விலை உயர்ந்தவைகளாகவும் உள்ளன. குறிப்பாக, பிஎம்டபிள்யூ சிஇ 02 (CE 02) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது தோற்றத்தில் முற்றிலும் விசித்திரமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த இ-ஸ்கூட்டரை பார்ப்பவர்களுக்கு இது எந்த மாதிரியான வாகனம் என்பதே பெரிய குழப்பமாக இருக்கும்.
அந்த அளவிற்கு வேறுப்பட்ட தோற்றத்தை கொண்டிருப்பது மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையும் சுமார் ரூ.4.5 லட்சம் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிர ரூபாய்கள் அதிகமாக வரும். இத்தகைய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முதல்முறையாக சினிமா நடிகர் (Cinema Actor) ஒருவர் வாங்கி இருப்பது கவனத்தை ஈர்த்தது.

அந்த நடிகரின் பெயர், குணால் கெமு (Kunal Khemu) ஆகும். ஜம்மூ & காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் பிறந்தவரான 42 வயதான குணால் கெமு, இவரை விட 5 வயது மூத்தவரான நடிகை சோஹா அலி கானின் கணவர் ஆவார். இந்த சோஹா அலி கான் வேறு யாருமில்லை... பிரபல பாலிவுட் (Bollywood) நடிகர் சைஃப் அலி கானின் சகோதரி ஆவார்.
1990ஆம் காலக்கட்டத்தில் இருந்தே சினிமாவில் நடித்துவரும் குணால் கெமு, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பொதுவாகவே, பாலிவுட் சினிமாகாரர்கள் விலையுயர்ந்த பைக் & கார்களை வாங்கி குவிப்பதை வாடிக்கையாக கொண்டவர்களாவர். அதில் நடிகர் குணால் கெமுவும் விதிவிலக்கு அல்ல. இவரது கலெக்ஷனில் புதியதாக பிஎம்டபிள்யூ சிஇ 02 இணைந்துள்ளது.
2024 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது வாங்கிய கையோடு, அதனை நடிகர் குணால் கெமு சாலைக்கு கொண்டுவந்துள்ளார். விசித்திரமான தோற்றம் கொண்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நடு ரோட்டில் குணால் கெமு ஓட்டி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹெல்மெட் அணிந்தப்படி தனது புதிய சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி சென்றதினால், நடிகர் குணால் கெமுவை சாலையில் சென்றவர்களால் அடையாளம் காண முடியவில்லை. இல்லையென்றால், நடிகரை பார்க்க பெரிய கூட்டம் கூடியிருக்கும். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். பிஎம்டபிள்யூ சிஇ 02 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 3.92kWh பேட்டரி பேக்கை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 108கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, சினிமா ஸ்டார்கள் விலையுயர்ந்த கார்களில் தான் பொது வெளியில் காட்சி தருவார்கள். ஆனால், நடிகர் குணால் கெமு முற்றிலும் வேறுப்பட்டவர் ஆவார். இவர் பெரும்பாலும் 2-சக்கர வாகனங்களில் தான் காட்சி தந்துள்ளார். இப்போவாவது பரவாயில்லை எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் காட்சி தந்துள்ளார்... இதற்குமுன் ஒருமுறை, நின்று கொண்டு ஓட்டக்கூடிய ஸ்கேட் போர்டு போன்றதான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சாலையில் காட்சி தந்து இருந்தார்.


Click it and Unblock the Notifications








