ரோல்ஸ் ராய்ஸின் இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தானாம்? அந்த அம்பானி, அதானி கிடையாதுங்க..
இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் பலரின் பிரியமான சொகுசு கார் மாடலாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) உள்ளது. இது ஆடம்பர அம்சங்கள் நிரப்பப்பட்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலை முதன் முதலில் வாங்கிய இந்தியர் யார் என்கிற தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. நம்மில் பலர் அம்பானி, அதானி இவர்களில் யாரேனும் ஒருவரே இந்த காரை முதல் ஆளாக வாங்கியிருப்பார்கள் என கண்மூடித் தனமாக நம்பலாம். ஆனால், இவர்கள் யாரும் அந்த காரை முதல் ஆளாக வாங்கவில்லை.
மாறாக, இந்தியரும், துபாயில் மிகப் பெரிய தொழிலதிபராகவும் வளர்ந்திருக்கும் சோஹன் ராய் என்பவரே கல்லினன் காரை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டபோது முதல் இந்தியராக வாங்கியிருக்கின்றார். ஏரீஸ் குழுமத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான இவர் இந்த காரை தன்னுடைய மனைவி அபினி சோஹனுக்கு பரிசாக வழங்கவே வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தங்களின் திருமண நாள் நினைவாகவே இந்த காரை அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். சோஹன் ராய் தொழிலதிபர் மட்டுமல்ல, இவர் ஓர் திரைப்படத்தையும் டைரக்ட் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. வினய் நடிப்பில் வெளியாகிய 'டிஏஎம் 999' எனும் படத்தையே அவர் இயக்கி உள்ளர்.
இந்த படம் இந்தி, தெலுங்கி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் நபரே தன்னுடைய மனைவியை சந்தோஷப்படுத்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஆடம்பர எஸ்யூவி காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே கல்லின் கார் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இன்றைய நிலவரப்படி இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட் மட்டுமே ரூ. 7 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. தேர்வு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்ப்பை பொருத்து இந்த விலை மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இப்போதைய நிலவரப்படி இந்த கார் மிக அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் இந்தியராக முகேஷ் அம்பானி இருக்கின்றனர்.
அவருடைய வீட்டில் மட்டும் 10 யூனிட்டுகள் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடல் இருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும், கல்லினன் கார் மாடலை வாங்கிய முதல் இந்தியர் இவர் இல்லை என தெரிகின்றது. சோஹன் ராய், தன்னுடைய மனைவிக்கு ஓர் தனித்துவமான பரிசை தங்களின் 25ஆம் ஆண்டு திருமண நாளுக்கு வழங்க வேண்டும் என நினைத்திருக்கின்றார்.
அதன் அடிப்படையிலேயே அவர் கல்லினன் கார் மாடலை தேர்வு செய்திருக்கின்றார். ரோல்ஸ் ராய்ஸ்-இன் மிக முக்கியமான தயாரிப்புகளான கோஸ்ட் மற்றும் பேந்தம் ஆகியவற்றைக் காட்டிலும் அதிக சிறப்புகள் நிறைந்த கார் மாடலாக கல்லினன் எஸ்யூவி காட்சியளிக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜட் வி12 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 563 எச்பி பவரை 5,000 ஆர்பிஎம்மிலும், 850 என்எம் டார்க்கை 1,600 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடத்தில் கல்லினன் மட்டுமல்ல ரோல்ஸ் ராய்ஸின் பிற தயாரிப்புகளும் மிக மிக அதிக எண்ணிக்கையிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், கல்லினன் மிக அதிக எண்ணிக்கையுடன் ஆதிக்கம் செலுத்துகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் (இன்று) அதன் கல்லினன் கார் மாடலின் இரண்டு புதிய அவதாரங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கல்லினன் சீரிஸ் II (Cullinan Series II) ரூ. 10.50 கோடிக்கும், பிளாக் பேட்ஜ் கல்லினன் சீரிஸ் II (Black Badge Cullinan Series II) ரூ. 12.25 கோடிக்கும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இப்போது இந்த காரை எந்த இந்தியர் முதலில் வாங்குவார் என்கிற சந்தேகமே பலருக்கு எழும்பியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








