ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்க கூப்பிட்ட உடனே சென்னை வந்த கேரள தொழிலதிபர்! வைர வியாபாரியின் குடும்பம்!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். ஆனால், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கு தான் அம்பானி (Ambani), அதானி (Adani) போன்ற செல்வந்தர்களை மட்டுமே பிடித்துள்ளது. அத்தகையவர்களால் வாங்க கூடிய விலையில் மட்டுமே ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மிகவும் நுணுக்கமாக கவனத்துடன் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உருவாக்கப்படுவதால், இந்த விஷயத்தில் நாம் யாரையும் குறை சொல்ல முடியாது. சரி... விஷயத்திற்கு வருவோம். ரோல்ஸ்-ராய்ஸின் முதல் எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ கேரளா (Kerala)-இல் முதல் கஸ்டமர் வாங்கியுள்ளார்.

அது வேறு யாரும் இல்லை, சன்னி டைமண்ட்ஸ் (Sunny Diamonds) குடும்பத்தினர் ஆவர். தென்னிந்தியாவில் வைர ஆபரணங்கள் விற்பனையில் ஈடுப்படும் பல நிறுவனங்களுள் சன்னி டைமண்ட்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். மிகவும் தரமான, வெறும் 1%-க்கும் குறைவான குறைப்பாடுகளை கொண்ட வைர ஆபரணங்களை விற்பனை செய்வதினால், செல்வந்தர்கள் மத்தியில் சன்னி டைமண்ட்ஸ் நிறுவனத்திற்கு நல்ல பெயர் உள்ளது.

rolls-royce spectre first kerala customer

சன்னி டைமண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர், சுருக்கமாக பிபி சன்னி எனப்படும் பெங்கிபரம்பில் சன்னி (Pengiparambil Sunny) ஆவார். இவரும், இவரது குடும்பத்தினரும் சேர்ந்துதான் புதியதாக ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் காரை (Chennai)-இல் டெலிவிரி எடுத்துள்ளனர். சன்னி டைமண்ட்ஸ் குடும்பத்தினர் வசிப்பது கேரளாவில் என்றாலும், புதிய ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்குவதற்காக சென்னைக்கு வந்தனர்.

ஆர்டிக் வெள்ளை நிறத்தில் சன்னி டைமண்ட்ஸ் குடும்பம் வாங்கியிருப்பது ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் இவி (Spectre EV) ஆகும். பிரிட்டிஷ் (British) நாட்டை சேர்ந்த அல்ட்ரா-லக்சரி (Ultra-Luxury) கார் நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் நீண்ட கால ஆலோசனைகளுக்கு பின் அறிமுகம் செய்த அதன் முதல் எலக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் இவி ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.50 கோடியாக தற்சமயம் உள்ளது.

rolls-royce spectre first kerala customer

இப்படிப்பட்ட விலையுயர்ந்த காரை தான் சன்னி டைமண்ட்ஸ் குடும்பம் வாங்கியுள்ளது. கேரளாவில் இந்த ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் காரை வாங்கிய முதல் கஸ்டமர் (Customer) இவர்கள் ஆகும். இவர்களது ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் கார் வெளியில் கண்ணை கவரக்கூடிய பளபளக்கும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், காருக்கு உள்ளே நேவி நீல (Navi Blue) நிறத்தில் கேபின் (Cabin) அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

காருக்குள் டேஸ்போர்டில் அன்னை மாதாவின் திருவுருவ சிலை சிறிய அளவில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறிய சிலைக்காக மட்டுமே பல இலட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாம். ஏனெனில், இந்த சிலை ஆனது பிளாட்டினம், வைரம் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டது என்றும், இந்த சிலையில் அரிதான மாணிக்க கற்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால், புதிய ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காருக்காக சன்னி டைமண்ட்ஸ் குடும்பம் குறைந்தது ரூ.10 கோடியை செலவு செய்திருக்கும்.

rolls-royce spectre first kerala customer

இந்த குடும்பத்தினர் ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் இவி காரை ஆர்டிக் வெள்ளை நிறத்தில்தான் வாங்கியுள்ளனரா என்பதை இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை வைத்து உறுதியாக கூற முடியவில்லை. ஏனெனில், ஸ்பெக்டர் இவி கார் 10க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளை நிறங்களை பொறுத்தவரையில், இங்கிலீஷ் வெள்ளை மற்றும் ஆர்டிக் வெள்ளை நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது.

இங்கிலீஷ் வெள்ளைக்கும், ஆர்டிக் வெள்ளைக்கும் சிறிய வித்தியாசம் மட்டுமே. ஆர்டிக் வெள்ளை அளவிற்கு இங்கிலீஷ் வெள்ளை பளிச்சென்று இருக்காது. 4 இருக்கைகளை மட்டுமே கொண்ட அல்ட்ரா-லக்சரி காரான இதில் 102kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக சுமார் 530கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ரோல்ஸ்-ராய்ஸ் தெரிவிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்-ராய்ஸ் காரை எலக்ட்ரிக்கில் வாங்குவதற்கு தொழிலதிபர்கள் எத்தனை பேர் விரும்புவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், சன்னி டைமண்ட்ஸ் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். இத்தகைய காரை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என ஏங்குபவர்களுக்கு, காரினுள் பல இலட்ச ரூபாய் மதிப்பில் சிலை டூ மச்சாக தான் தெரியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 14, 2024, 8:00 [IST]
English summary
First kerala customer of rolls royce spectre ev ultra luxury electric car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X