பூஜை போட ஒன்றிற்கு 2 ஐயர்கள்... இந்தியாவிற்கு கப்பலில் வந்திறங்கிய கார்!! விற்பனைக்கு இல்லை - எதுக்கு தெரியுமா

லம்போர்கினி ரெவால்டோ (Lamborghini Revuelto) என்கிற சூப்பர் காரின் முதல் யூனிட் இந்தியாவிற்கு வந்துள்ளது. அதாவது, ஷோரூமில் காட்சிக்கு நிறுத்தி வைப்பதற்காக முதல் லம்போர்கினி ரெவால்டோ கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. காரை பயபக்தி உடன் பூஜை போட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஷோரூமுக்குள் கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ குறித்த கூடுதல் விபரங்களையும், இந்த மாடர்ன் லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லம்போர்கினியில் இருந்து இந்தியாவில் சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் ரெவால்டோ ஆகும். இந்த லம்போர்கினி சூப்பர்காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.89 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது என்றாலும், புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.

first lamborghini revuelto in bengaluru

லம்போர்கினி நிறுவனத்திற்கு பெங்களூரில் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமுக்கு கப்பல் மூலமாக வெளிநாட்டில் இருந்து ஒரு ரெவால்டோ கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விற்பனைக்கான ரெவால்டோ கார் கிடையாது; வெறும் டெமோ கார் மட்டுமே என கூறப்படுகிறது. டெமோ காராக இருப்பினும், விலையுயர்ந்த கார் என்பதால் மாலை அணிவித்து, பூஜை உடன் ஷோரூமினுள் கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கோவில் ஒன்றின் முன்பு இந்த லம்போர்கினி ரெவால்டோ கார் நிறுத்தப்பட்டு இருப்பதை காணலாம். ஒன்றிற்கு மேற்பட்ட கோவில் பூசாரிகள் இந்த லம்போர்கினி காருக்கு பூஜை செய்துள்ளனர். இந்த குறிப்பிட்ட ரெவால்டோ கார் கருப்பு கலந்த வெர்டே டர்பைன் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. காருக்கு உள்ளே லெதர்கள் ஆரஞ்ச் நிறத்தில் உள்ளதை காருக்கு வெளியே இருந்தே பார்க்க முடிகிறது.

first lamborghini revuelto in bengaluru

லம்போர்கினி ரெவால்டோ கார் முதல்முறையாக கடந்த 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரெவால்டோ கார்களை மட்டுமே விற்பனை செய்ய லம்போர்கினி திட்டமிட்டது. அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரெவால்டோ கார்களுக்கு மட்டுமே புக்கிங்குகள் துவங்கப்பட்டன.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2026ஆம் ஆண்டு வரையிலான ரெவால்டோ கார்கள் அனைத்தும் ஏற்கனவே புக் ஆகிவிட்டன. முன்பு விற்பனையில் இருந்த லம்போர்கினி அவெண்டேடார் காருக்கு மாற்றாக விலையுயர்ந்த லம்போர்கினி காராக ரெவால்டோ அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு பிளக்-இன் ஹைப்ரீட் சூப்பர்கார் ஆகும். இத்தகைய ஹைப்ரீட் டெக்னாலஜியை கொண்ட முதல் லம்போர்கினி காராக ரெவால்டோ கருதப்படுகிறது.

ரெவால்டோவில் 6.5 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் உடன் பொருத்தப்படுகிறது. காருக்கு முன்பக்கத்தில் 2 எலக்ட்ரிக் மோட்டார்களும், பின்பக்கத்தில் ஒரு மோட்டாரும் கொடுக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு ஆற்றலை வழங்க அவற்றிற்காக 3.8kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரில் வழங்கப்படுகிறது.

என்ஜின் + எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 1015 பிஎஸ் மற்றும் 807 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளன. 1015 பிஎஸ் என்பது மிகவும் அதிகமாகும். இதற்கேற்ப குறைவான எடையில் இந்த ஹைப்ரீட் கார் உருவாக்கப்படுவதால், 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடலாம். காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 350கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியர்களை பொறுத்தவரையில், எந்தவொரு நல்ல விஷயத்தை ஆரம்பித்தாலும் பூஜை போட்டு ஆரம்பிப்பது வழக்கம். புதியதாக வாங்கிய காருக்கும் நம் மக்கள் பூஜை போடுவார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான், என்றாலும் ஷோரூம் டெமோ காருக்கு கூட பூஜை செய்வார்கள் என்பதை இப்போதுதான் முதல்முறையாக அறிந்துக் கொண்டுள்ளோம். பல கோடி ரூபாய் மதிப்பிலான கார் என்பதினாலேயே இந்த பூஜை ஆகும்; அதுவே விலை குறைவான டெமோ காராக இருந்திருந்தால் பத்தோட 11 ஆக ஷோரூமிற்குள் கொண்டு சென்றிருப்பர்.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2024, 23:15 [IST]
English summary
First lamborghini revuelto super car arrived in bengaluru check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+