ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

Written By:

உலகின் அதிவேக தரை வழி போக்குவரத்து சாதனமாக ஹைப்பர்லூப் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த சாதனம் மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த ஹைப்பர்லூப் ஒன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

மத்திய அரசிடமும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஹைப்பர்லூப் போக்குவரத்து என்பது தற்போது ஆரம்ப கட்ட நிலையில் இருக்கிறது. அதேநேரத்தில், அடுத்த சில ஆண்டுகளில் இந்த போக்குவரத்தை நனவாக்கும் முயற்சிகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

ஹைப்பர்லூப் போக்குவரத்தை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு, அமெரிக்காவில் உள்ள நெவடா பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைக்கப்பட்டு வரும் வழித்தட அமைப்பு குறித்த படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

தற்போது 500 மீட்டர் நீளத்துக்கு ஹைப்பர்லூப் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. சோதனை ஓட்டத்திற்காக தயாராகி வரும் அந்த இடத்தை டெவ்லூப் என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். அந்த பகுதியில் பிரம்மாண்டமான ராட்சத குழாய்கள் கான்க்ரீட் தூண் மீது அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

அடுத்த சில மாதங்களில் இந்த 500 மீட்டர் தொலைவுக்கான தடத்தின் பணிகள் முடிவடைந்துவிடும். மொத்தம் 3 கிமீ தூரத்திற்கு இந்த சோதனை ஓட்ட தடம் அமைக்கப்பட உள்ளது. அதன் பிறகு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

சோதனை ஓட்டங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் அபுதாபி- துபாய் இடையே முதலாவது ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது. இது வணிக ரீதியிலான முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்தாக குறிப்பிடப்படுகிறது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

ஹைப்பர்லூப் வெற்றி பெற்றால், நிச்சயம் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சென்னை- மும்பை, மும்பை- டெல்லி, சென்னை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் ஹைப்பர்லூப் போக்குவரத்தை ஏற்படுத்த முடியும் என்று ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடங்களில் இந்த ஹைப்பர்லூப் சாதனத்தில் சென்றுவிட முடியுமாம். மேலும், புல்லட் ரயிலைவிட இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனத்திற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதலீடும் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தின் கட்டமைப்பு படங்கள் முதல்முறையாக வெளியீடு!

எனவே, இந்த போக்குவரத்து சாதனம் வெற்றியை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. விரைவில் இதற்கான தீர்வு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: First photos of Hyperloop test track.
Story first published: Thursday, March 9, 2017, 13:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark