மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயில்: மே 29ல் சோதனை ஓட்டம்!

By Saravana

மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயில் சோதனை ஓட்டம் வரும் 29ந் தேதி இந்தியாவில் துவங்கப்பட உள்ளது.

இதன்மூலமாக, இந்திய ரயில் போக்குவரத்தில் புதிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பணிமனையில்...

பணிமனையில்...

மும்பை துறைமுகத்துக்கு வந்திறங்கிய டால்கோ ரயில் பெட்டிகள் கன்டெய்னர் டிரக்குகள் மூலமாக தற்போது இஸாத்நகர் ரயில் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரயில் பெட்டிகளை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Photo Credit: ANI

முதல் சோதனை

முதல் சோதனை

வரும் 29ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் பெரில்லி நகரிலிருந்து மொராதாபாத் நகருக்கு இடையில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையிலான 90 கிமீ தூர வழித்டத்தில் மணிக்கு 115 கிமீ வேகம் வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

Photo Credit: ANI

 இரண்டாவது சோதனை ஓட்டம்

இரண்டாவது சோதனை ஓட்டம்

இதைத்தொடர்ந்து, டெல்லி- ஆக்ரா இடையிலான முக்கிய வழித்தடத்தில் அமைந்திருக்கும் பால்வல் மற்றும் மதுரா இடையிலான வழித்தடத்தில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது.

மூன்றாவது சோதனை ஓட்டம்

மூன்றாவது சோதனை ஓட்டம்

டெல்லி- மும்பை இடையிலான வழித்தடத்தில் மூன்றாவது கட்டமாக சோதனை நடத்தப்பட உள்ளது. அப்போது மணிக்கு 200 கிமீ வேகம் வரை இயக்கி சோதனை செய்யப்படும். ரயில்வே துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் குழு டால்கோ ரயில்களில் சோதனை செய்ய உள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயிலை இழுத்துச் செல்வதற்கு WDP-4 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும், WAP-5 மின்சார ரயில் எஞ்சின் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

Photo Credit: BCMTouring

ஆக்சில்

ஆக்சில்

டால்கோ ரயில்களின் ஆக்சில் ரயில் தடத்தின் அகலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றுவதற்கான விசேஷ தொழில்நுட்பம் கொண்டது. எனவே, இந்திய வழித்தடங்களுக்கு தேவையான அளவில் ஆக்சிலில் உள்ள சக்கரங்களின் இடைவெளியை மாற்றி அமைக்க முடியும்.

சராசரி வேகம்

சராசரி வேகம்

டெல்லி- மும்பை இடையில் மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரை டால்கோ ரயில் இயக்கப்படும். இதன்மூலமாக, இந்த ரயில் சராசரியாக மணிக்கு 125 கிமீ வேகத்தில் செல்லும்.

சராசரி வேகம்

சராசரி வேகம்

தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 130 கிமீ வேகம் வரை இயக்கப்படுகின்றன. இதன் சராசரி மணிக்கு 85 கிமீ வேகம் என்ற அளவில் உள்ளது. ஆனால், டால்கோ ரயில்கள் மணிக்கு 125 கிமீ சராசரி வேகத்தை கொண்டிருக்கும்.

பயண நேரம்

பயண நேரம்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட டால்கோ ரயில்களின் வேகம் சராசரி வேகம் மணிக்கு 40 கிமீ வரை அதிகரிப்பதால், டெல்லி- மும்பை இடையிலான பயண நேரம் 19 மணி நேரம் என்ற தற்போதைய நிலையிலிருந்து 12 மணி நேரமாக குறையும்.

 கட்டணம் அதிகரிக்கும்

கட்டணம் அதிகரிக்கும்

டால்கோ ரயில்கள் 30 சதவீதம் வரை மின்சார சிக்கனத்தை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலைவிட கட்டணம் சற்று அதிகமாகவே இருக்குமாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
First Talgo train Trail Run start In India on May 29.
Story first published: Wednesday, May 25, 2016, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X