கம்பத்தில் மோதினாலும் கல்லு மாதிரி நின்ற டாடா டியாகோ கார்... !!

Written By:

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியோகா கார் ஒன்று விபத்தில் சிக்கிய புகைப்படங்கள் ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

ஊட்டி அருகே நடைபெற்றதாக கருதப்படும் இந்த விபத்தில் கம்பத்தில் மோதிய டாடா டியாகோ கார் சேதமடைந்தாலும், பயணித்தவர்களுக்கும் பெரிய ஆபத்து இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கம்பத்தில் மோதிய கார்

கம்பத்தில் மோதிய கார்

கோவையை சேர்ந்த டாடா டீலரிடமிருந்து இந்த கார் டெலிவிரி பெறப்பட்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வாங்கிய இந்த கார் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கியிருக்கிறது.

சம்பவம்

சம்பவம்

ஊட்டி அருகே கம்பத்தில் இந்த கார் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 60 கிமீ வேகத்தில் கம்பத்தில் மோதியதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

கல்லு மாதிரி நின்ற டியாகோ

கல்லு மாதிரி நின்ற டியாகோ

காரின் முன்பக்கம் சேதமடைந்தாலும், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஏர்பேக்குகள் விரிவடைந்து ஓட்டுனரையும், சக பயணியையும் காப்பாற்றியிருப்பது படங்களின் மூலமாக தெரிய வருகிறது.

கிராஷ் டெஸ்ட்

கிராஷ் டெஸ்ட்

மேலே நாடுகளில் மணிக்கு 64 கிமீ வேகத்தில் கார்கள் கிராஷ் டெஸ்ட் செய்யப்படுகின்றன. அந்த வேகத்திற்கு இணையான வேகத்தில்தான் இந்த புதிய டாடா டியோகா காரும் மோதியிருக்கிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் பெரிய காயங்கள் இன்றி தப்பியதாக நம்பப்படுகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கார் பரிசோதனை மையத்தில்தான் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக சோதனை செய்யப்படுவதாகவும், அதனால், டாடா டியோகா கார் சிறப்பான கட்டுமானம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி

புத்தம் புதிய டாடா டியோகா கார் விபத்தில் சிக்கியது கெட்ட செய்தியாக அமைந்தாலும், இந்த காரின் கட்டுமானம் பற்றிய விஷயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும், இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்ல செய்தியாகவே இருக்கக்கூடும்.

கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல் கிடைத்தால், இந்த செய்தியில் சேர்க்க விழைகிறோம்.

 Source

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
First Tata Tiago Car Accident Pictures surfaced Online.
Story first published: Tuesday, May 31, 2016, 15:00 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos