Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி
- Movies
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இவர்கள்தான் யூஸ்டு கார்களை அதிகமாக வாங்குகின்றனர்... புதிய ஆய்வு என்ன சொல்லுது தெரியுமா?
பயன்படுத்தப்பட்ட கார்களை அதிகமாக வாங்குவது யார்? என்பது தொடர்பாக புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே இந்தியாவில் தற்போது கார்களின் விற்பனை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்து வருவதை காண முடிகிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், புதிய கார்கள் விலை அதிகம் என்பதாலும், விலை குறைவான பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த சூழலில் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், முதல் முறை கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர், புதிய கார்களுக்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதையே விரும்புவதாக, தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூஸ்டு கார் லீசிங் செக்மெண்ட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பம்பம்பம் (PumPumPum) இந்த ஆய்வை நடத்தியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை உள்பட மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் பெரும்பாலானோர், முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அவர்களின் சதவீதம் 55. அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் 41 சதவீதம் பேரின் குடும்பத்தில் ஏற்கனவே கார்கள் இருக்கின்றன. ஆனால் கார்களை மாற்றுவதற்காக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதம்தான்.

பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கு மலிவான விலையே முக்கியமான காரணம் என ஆய்வில் பங்கேற்ற பலரும் கூறியுள்ளனர். அதே சமயம் பயன்படுத்தப்பட்ட கார்களை மக்கள் வாங்குவதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த கார் கிடைப்பது மற்றும் கார் ஓட்டி பழகுவது ஆகியவை முக்கியமான காரணங்களாக உள்ளன.

அதே சமயம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் தேவைக்காக, இரண்டாவதாக ஒரு பயன்படுத்தப்பட்ட காரை ஒரு சிலர் வாங்குகின்றனர். பிராந்திய அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களை அதிகம் கொண்டிருப்பது வட இந்தியாதான் (36 சதவீதம்). இதற்கு அடுத்த இடங்களில் மேற்கு (27 சதவீதம்), தெற்கு (26 சதவீதம்) மற்றும் கிழக்கு (11 சதவீதம்) உள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக வரும் மாதங்களில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை இன்னும் பெரும் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கான தயக்கம் மற்றும் புதிய கார்களின் அதிகப்படியான விலை ஆகியவை இதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கலாம்.
Note: Images used are for representational purpose only.