கங்கை நதியில இப்படி ஒரு படகு ஓட போகுதா!.. இதில் பயணிக்க மக்கள் கூட்டம் அலை மோதபோகுது!
இந்தியாவிலேயே முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாட்டர் டாக்சி தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டாக்சி பயன்பாட்டிற்கு வந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் மற்றும் இதை இந்தியாவில் களமிறக்குவதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் போலவே விரைவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் இந்த உலகை ஆளுகைச் செய்ய இருக்கின்றன. இப்போதே அவை தன்னுடைய வளர்ச்சி பாதையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. எனவே விரைவில் ஹைட்ரஜன் வாகனங்கள் இந்த உலகை ஆக்கிரமிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலில் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் மட்டுமல்ல படகுகளும் இந்த உலகத்தை ஆள இருக்கின்றன என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இரண்டு ஹைட்ரஜனில் இயங்கும் படகுகள் சவாரி சேவைக்காக களமிறக்கப்பட்டு இருக்கின்றன.
இவை விரைவில் காசியில் சோதனையோட்டமாக தங்களுடைய பயணத்தைத் தொடங்கும். அதாவது, விரைவில் இந்த ஹைட்ரஜனில் இயங்கும் படகுகள் வாட்டர் டாக்சியாக இயங்க இருக்கின்றன. கங்கை நதியிலேயே வாட்டர் டாக்சியாக அது பயன்படுத்தப்பட இருக்கின்றது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே காசியில் சொகுசு க்ரூஸ் கப்பல்கள், ரோ-ரோ கப்பல்கள் மற்றும் சிஎன்ஜியால் இயங்கும் படகுகள் உள்ளிட்டவை பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் கப்பல் கங்கை நதியில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இது, நாட்டிலேயே முதல் முறையாகும்.
தற்போது முன்னோடி திட்டமாக மட்டுமே இது செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. விரைவில் இதனை நாடு முழுவதிற்கும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆகையால், எங்கெங்கெல்லாம் நீர் நிலை சார்ந்து கப்பல் போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றதோ அங்கெல்லாம் விரைவில் ஹைட்ரஜன் படகு டாக்சியாக பயன்படுத்தப்படும் என தெரிகின்றது.
கங்கை நதியைத் தொடர்ந்து, மதுராவில் உள்ள யமுனா நதி மற்றும் ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரஜன் படகுகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. முதற்கட்டமாக இரண்டு ஹைட்ரஜனில் இயங்கும் படகுகள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றிற்கு சார்ஜேற்ற மற்றும் ஹைட்ரஜனை நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகையால், அடுத்த ஒரு சில தினங்களில் இந்த படகு சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி வரும் ஜூன் 15 ஆம் தேதி இந்த டாக்சி சேவைய பயன்பாட்டிற்கு வரும் என தெரிகின்றது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் படகுகளைக் காட்டிலும் ஹைட்ரஜனில் இயங்கும் படகுகளைப் பராமரிக்க குறைவான செலவே ஏற்படும் என கூறப்படுகின்றது.
ஆகையால், இதில் பயணிக்க குறைவான கட்டணமே வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுதவிர, எரிபொருளில் இயங்கும் கொண்ட படகுகளைப் போல் அல்லாமல் இது துளியளவும் மாசை ஏற்படுத்தாது. இந்த முக்கிய காரணத்திற்காகவே இந்தியாவின் முக்கிய நீர் வழித்தடங்களில் ஹைட்ரஜன் படகுகளைக் களமிறக்கும் முயற்சியில் அரசு களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக விரைவில் இந்தியா மாசற்ற நாடாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் நம்முடைய தமிழக அரசு 200 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அரசு பணியாளர்களுக்கு களப்பணியாற்ற வழங்கியது. இந்த மாதிரியான சூழலிலேயே மாசை குறைக்கும் விதமாக ஹைபிரிட் வாட்டர் டாக்சிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









