முதலாம் திருமண நாளுக்கு கணவர் கொடுத்த பரிசை மறக்கவே மாட்டார்! கார் பார்க்க தான் சின்னது, ஆனா விலை ரூ.50 லட்சம்
திருமண பந்தத்தில் இணைந்தவர்களுக்கு முதலாம் திருமண நாள் எப்போதுமே ஸ்பெஷல். அன்றைய தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சி அடைவர். ஒரு சிலர் விலையுயர்ந்த வைர ஆபரணங்களை மனைவிக்கு வழங்கி மகிழ்ந்த செய்திகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், இங்கு ஒருவர் வைர நெக்லஸுக்கு பதிலாக சிறிய அளவிலான க்யூட்டான விலையுயர்ந்த காரை மனைவிக்கு திருமண நாள் பரிசாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார். யார் இவர்? என்ன மாதிரியான விலையுயர்ந்த காரை மனைவிக்கு வழங்கி சிறப்பித்துள்ளார்? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
சரத் சங்கர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் மனைவி மற்றும் குடும்பத்தார் உடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், திருமண நாளை முன்னிட்டு மனைவிக்கு பரிசாக காரை அவர் வழங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவர்கள் உடன் அவர்களது குடும்பத்தினரும் இருந்தனர்.

இந்த காரை சரத் சங்கர் சர்பிரைஸ் கிஃப்ட் ஆக மனைவிக்கு வழங்கியுள்ளார் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிகிறது. திருமண நாள் பரிசாக ஒன்றை வழங்க போகிறேன் என வீட்டின் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு குடும்பத்துடன் மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போதே அவரது மனைவிக்கு புரிந்திருக்கும் ஏதோ கார் அல்லது பைக்கை தான் பரிசாக வழங்க போகிறார் என்று.
கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தவுடன் அது கார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், என்ன கார் என்று தெரிய வேண்டுமென்றால், அதனை மூடியிருக்கும் துணியை அகற்ற வேண்டும். மூடப்பட்ட காரை பார்த்தவுடனே சரத் சங்கரின் மனைவியின் முகம் ஆனந்தத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டது. பின்னர் கணவர் கூற, துணியை நீக்கி பார்த்தவருக்கு முன்னால் பளபளப்பான சிவப்பு நிறத்திலான மினி கூப்பர் (Mini Cooper) கார் ஒன்று பார்ப்போர் எவரையும் கவரக்கூடிய தோற்றத்தில் நின்றுக்கொண்டு இருந்தது.

காரின் நம்பர் பிளேட் பகுதியில் 'முதலாம் திருமண நாள் வாழ்த்துக்கள்' என்கிற பலகை இருப்பதை காணலாம். பின்னர் கணவன்- மனைவி இருவருமாக சேர்ந்து கேக் வெட்டி அந்த இனிமையான தருணத்தை கொண்டாடினர். சரத் சங்கரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கொஞ்சம் புரட்டி பார்த்தால், அவரது லக்சரியான வாழ்க்கை முறையை காண முடிகிறது.
அவரது பிரம்மாண்டமான வீட்டையும் அவரது கேரேஜையும் காட்டியுள்ளார். சரத் சங்கரின் வீட்டு கேரேஜில் ஒரு ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார், ஒரு பழைய மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனம், ஒரு டுகாட்டி (Ducati) பைக், ஒரு சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) பைக் உள்ளிட்டவை நிற்கின்றன.
இதில், டுகாட்டி பைக்கை கடந்த 2023ஆம் ஆண்டில் வாங்கியுள்ளார். சிவப்பு நிறத்திலான சுஸுகி ஹயபுஸா பைக்கை கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில்தான் வாங்கியுள்ளார். அதற்குள்ளாக மனைவிக்காக விலையுயர்ந்த மினி காரை வாங்க வேண்டி இருந்துள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், ஹயபுஸா பைக் மற்றும் மினி கூப்பர் என இரண்டையும் ஒரே நேரத்தில்தான் சரத் சங்கர் புக் செய்திருப்பார்.
மினி கூப்பர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 3 கதவுகளை மட்டுமே கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். முதலாம் திருமண நாள் பரிசாக மனைவிக்கு சரத் சங்கர் வாங்கி கொடுத்திருக்கும் மினி கூப்பர் கார் ஆனது முந்தைய 3ஆம் தலைமுறை வெர்சன் ஆகும். இதனை 2014ஆம் ஆண்டில் மினி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.44.90 லட்சம் மற்றும் ரூ.55.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் 4ஆம் தலைமுறை மினி கூப்பர் காரும் பார்க்க சூப்பராக இருக்கும் என்றாலும், பழைய 3ஆம் தலைமுறை கூப்பர் கார் இந்தியாவில் ரசிகர்களை உருவாக்கியது. கடந்த 2024 ஜூலை மாதத்தில்தான் 4ஆம் தலைமுறை மினி கூப்பர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதால், இப்போதும் சில ஷோரூம்களில் 3ஆம் தலைமுறை கூப்பர் காரை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








