முடியாதுனு சொன்னவங்க எல்லாருக்கும் பதில் சொல்லிட்டார்! ஆட்டோவில் ஷோரூமுக்கு வந்தவர், வீட்டிற்கு பைக்கில்!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட பைக், எக்ஸ்பல்ஸ் 210 (Xpulse 210) ஆகும். ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்குகளுக்கு கடந்த சில வருடங்களாகவே சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ளும் விதமாக எக்ஸ்பல்ஸ் 210 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் இருந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் அப்டேட் வெர்சனாக எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ்பல்ஸ் 200 ஆனது 200சிசி பைக் ஆகும். அதுவே, எக்ஸ்பல்ஸ் 210 ஆனது 210சிசி பைக் ஆகும்.
சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கின் டெலிவிரிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. இந்த நிலையில், பெண் ஒருவர் புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், இவர்தான் இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை டெலிவிரி பெற்ற முதல் பெண் கஸ்டமராக இருப்பார்.

பொதுவாகவே, அட்வென்ச்சர் ரக பைக்குகள் ஆண்களுக்கு தான் ஏற்றவை என்கிற கருத்து பரவலாக உள்ளது. ஏனெனில், அட்வென்ச்சர் பைக்குகளை கண்ட்ரோல் செய்வது சற்று சிரமம். இருப்பினும், அதை பற்றி எல்லாம் கவலையே படாமல் இந்தியாவிலேயே முதல் பெண் கஸ்டமர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை டெலிவிரி பெற்றுள்ளார்.
இவரது பெயர் ரோஷினி நாராயணன் ராவ் (Roshini Narayanan Rao) ஆகும். உடற்பயிற்சி சார்ந்த மாடலிங் துறையை சேர்ந்தவரான ரோஷினி, 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு அழகி போட்டியில் 6வது இடத்தை பிடித்தவர் ஆவார். இவர் வாங்கிய முதல் பைக் இந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 ஆகும். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பைக் வாங்குவதை மட்டுமின்றி, பைக் டெலிவிரி பெறும் நாளில் காலையில் இருந்து பைக் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெறுவது வரையிலான காட்சிகளையும் தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். ஆட்டோ ரிக்ஷாவில் ஹீரோ டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்றவர், பின்னர் அங்கிருந்து பிராண்ட்-நியூ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் வீட்டிற்கு ஓட்டி சென்றார்.
வீட்டிற்கு வந்தவுடன், கோயிலுக்கு சென்று பைக்கிற்கு பூஜை போட்ட பின், ரோஷினியின் தாய், தந்தை இருவரும் ஆசையாக பைக்கை ஓட்டி பார்ப்பதை வீடியோவில் காணலாம். ரோஷினி நாராயணன் ராவ் வசிப்பது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால், இந்த புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக் குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் தான் நிறுத்தப்படும்.

எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதில் பொருத்தப்படும் 210சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 24.2 பிஎச்பி மற்றும் 20.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
அட்வென்ச்சர் பைக் என்பதால், முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 18 இன்ச்சிலும் ஸ்போக் சக்கரங்களாக வழங்கப்படுகின்றன. இந்த பைக்கின் சிறப்பம்சங்களாக, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி உடன் 4.2-இன்ச் டிஎஃப்டி திரை, ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், பெரிய அளவிலான விண்ட்ஸ்க்ரீன், பயணத்தின்போது கை விரல்களை பாதுகாப்பான் மற்றும் பின்பக்கத்தில் லக்கேஜ் ராக் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ரூ.1.75 லட்சம்- ரூ.1.85 லட்சம் வரையில் உள்ளன. ஆன்-ரோடு விலைகள் இன்னும் பல பத்தாயிர ரூபாய்கள் அதிகமாக வரும். இத்தகைய அட்வென்ச்சர் பைக்கை தான் இந்த முதல் பெண் கஸ்டமர் வாங்கியுள்ளார். எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை காட்டிலும் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை ஹேண்ட்லிங் செய்வது சற்று சிரமம் ஆகும். அதனை சமாளிக்க முடியும் என நம்பியதன் மூலமாக இந்த பைக்கை ரோஷினி நாராயணன் ராவ் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications









