உடற்பயிற்சியாளர் ஆக துவங்கிய வாழ்க்கை... கொஞ்ச வருஷத்துக்கு முன்ன இந்த காரை நெனைச்சி பார்த்திருக்கவே மாட்டார்!
லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் டிஃபெண்டர் (Defender) கார்கள் உலகளவில் பிரபலமானவை ஆக உள்ளன. கம்பீரமான தோற்றம், பவர்ஃபுல்லான என்ஜின் உடன் பலரது கனவாக டிஃபெண்டர் கார்கள் உள்ளன. இதனாலேயே, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கொஞ்சம் அதிக பணம் சேர்ந்த உடனே டிஃபெண்டர் காரை வாங்கி விடுகின்றனர்.
குறிப்பாக, பாலிவுட் சினிமா (Bollywood Cinema) துறையை சேர்ந்தவர்கள் மாதத்திற்கு ஒருத்தர் டிஃபெண்டர் காரை வாங்கும் அளவிற்கு மும்பையில் டிஃபெண்டர் கார்களாக தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் அதன் மூலம் அதிகம் சம்பாதித்து டிஃபெண்டர் உள்ளிட்ட விலையுயர்ந்த கார்களை வாங்குவதையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.

அந்த வகையில், ஹரியானாவை சேர்ந்த உடற்பயிற்சி ஆர்வலர் (Fitness Enthusiast) அன்கிட் பாய்யன்புரியா (Ankit Baiyanpuria) புதியதாக பிராண்ட்-நியூ லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கி உள்ளார். இதுதொடர்பான தகவல்களை அன்கிட் பாய்யன்புரியா அவர்களே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் டெலிவிரி (Delivery) பெற்று இருப்பது, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் ஆகும்.
இந்தியாவில் 90, 110 மற்றும் 130 என்கிற மூன்று விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படும் டிஃபெண்டர் கார்களுள் டிஃபெண்டர் 110 மாடலை அன்கிட் பாய்யன்புரியா வாங்கியுள்ளார். டொயோட்டா ஹிலுக்ஸ் (Toyota Hilux) என்கிற பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனத்தில் லேண்ட் ரோவர் ஷோரூமுக்கு வந்து டிஃபெண்டர் 110 காரை இவர் டெலிவிரி பெற்றுள்ளார்.

டிஃபெண்டர் 110 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.32 கோடியில் இருந்து துவங்குகின்றன. அதேநேரம், ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30.40 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் இந்த வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) என்பதை மறந்து விடாதீர்கள்.
அப்படியென்றால், அன்கிட் பாய்யன்புரியா எந்த அளவிற்கு சொகுசு வாழ்க்கையில் திழைக்கிறார் என்பதை யோசித்து பாருங்கள். வெறும் உடற்பயிற்சி கூடம் நடத்தி மட்டும் இவ்வளவு பணம் சம்பாதிப்பது கஷ்டம் ஆகும். சமூக வலைத்தளங்கள் தான் சமீப காலமாக அன்கிட் பாய்யன்புரியாவின் பிரதானமான வருவாய் கிடைக்கும் வழியாக உள்ளது.

டிஃபெண்டர் 110 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 5 கதவுகளை கொண்ட எஸ்யூவி (SUV) ரக காராக விளங்குகிறது. அன்கிட் பாய்யன்புரியா இந்த டிஃபெண்டர் காரை கருப்பு நிறத்தில் வாங்கி உள்ளார். 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் மற்றும் 3 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்கள் உடன் டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலைத்தளங்கள் மூலமாக கடந்த சில வருடங்களில் பலரது வாழ்க்கை மாறி உள்ளது என்பதற்கு உடற்பயிற்சி ஆர்வலர் அன்கிட் பாய்யன்புரியாவின் வாழ்க்கை சிறந்த உதாரணம் ஆகும். வாழ்க்கையின் இந்த சிறப்பான தருணத்தை இவர் மறக்கவே மாட்டார். அன்கிட் பாய்யன்புரியாவின் கடின உழைப்பிற்கு சரியான வெகுமதி லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் எனலாம்.


Click it and Unblock the Notifications









