என்ன தவம் செஞ்சிபுட்டோம், அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்... ஷோரூமில் 4 கார்களை லைனா நிறுத்தி வெச்சது இதுக்குதானா?
டொயோட்டா (Toyota) கார்களின் விற்பனை இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார்களின் அடிப்படையில் டொயோட்டா கார்களை உருவாக்க ஆரம்பித்தது ஆகும். அவ்வாறு, மாருதி சுஸுகியின் ஃபிரான்க்ஸ் (Fronx) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா டைசர் காருக்கும் ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனை வெளிக்காட்டும் வகையில், இங்கு ஒருவர் ஒரே நாளில் நான்கு டொயோட்டா டைசர் கார்களை டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதைவிட ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இந்த 4 டைசர் கார்களை யாருக்காக அவர் வாங்கி உள்ளார் என்பது ஆகும்.

துஷார் கெய்க்வாட் (Tushar Gaikwad) என பெயர் கொண்ட இந்த நபர் மும்பையை சேர்ந்த உடற்பயிற்சியாளர். தனது கட்டுக்கோப்பான உடலமைப்பை சிறு வயதில் இருந்தே பராமரித்து வருபவரான துஷார் கெய்க்வாட், சர்வதேச அளவில் இந்தியா சார்பில் கலந்துக் கொண்டு ஆசிய ஆணழகன் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றவர் ஆவார். அதுமட்டுமின்றி, உலக ஆணழகன் போட்டி ஒன்றிலும் 5வது இடத்தை பிடித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொஞ்சம் வயதாகி விட்டதால், உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார். இவர்தான் தற்போது ஒரே நாளில் நான்கு டொயோட்டா டைசர் கார்களை டெலிவிரி (Car Delivery) பெற்று ஆச்சிரியப்படுத்தி உள்ளார். யாருக்காக இவர் இத்தனை டைசர் கார்களை வாங்கியுள்ளார் என பார்த்தால், அவரது 4 சகோதரிகளுக்காக ஆகும்.

திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்றுவிட்ட நடுத்தர வயதுடைய சகோதரிகளுக்கு துஷார் கெய்க்வாட் ஆளுக்கு ஒரு டைசர் கார்களை பரிசாக வழங்கி உள்ளார். டொயோட்டா ஷோரூமுக்கு சகோதரிகள் உள்பட குடும்பத்தாருடன் சென்று நான்கு பிராண்ட்-நியூ டைசர் எஸ்யூவி கார்களை ஒரே நேரத்தில் டெலிவிரி பெறுவதை வீடியோவாக காட்சிப்படுத்தி துஷார் கெய்க்வாட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த 4 டைசர் கார்களில் இரு கார்களை வெள்ளை நிறத்திலும், ஒரு காரை கருப்பு நிறத்திலும், ஒரு காரை சில்வர் நிறத்திலும் சகோதரிகளுக்காக துஷார் கெய்க்வாட் வாங்கியுள்ளார். இந்த சிறப்பான நிகழ்விற்கு காரணமாக அமைந்துள்ள டைசர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே கூறியதுபோல் இது மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் ஆகும்.
அதாவது, அடிப்படையில் இது ஃபிரான்க்ஸ் கார் ஆகும். ஆனால், டொயோட்டா நிறுவனம் தனது பிராண்ட்டிற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரான்க்ஸ் காரின் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1 லிட்டர், 3-சிலிண்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில்தான் டொயோட்டா டைசர் காரும் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய தரமான காரை ஆளுக்கு ஒன்றாக துஷார் கெய்க்வாட் வாங்கி கொடுத்ததும், அவரது சகோதரிகளுக்கு ஷோரூமிலேயே ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. அந்த மகிழ்ச்சி உடன் தான் அவர்கள் தங்களது கார்களை டெலிவிரி பெற்று சென்றுள்ளனர். டொயோட்டா டைசர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.74 லட்சத்தில் இருந்து ரூ.13.06 லட்சம் வரையில் உள்ளன.
Source: Tushar Gaikwad's Instagram Post (https://www.instagram.com/tushargaikwadfitness_model/)


Click it and Unblock the Notifications








