பிரிட்டன் இரயில்களே தோற்றுவிடும்... நம் நாட்டு இரயில்கள் இப்படியெல்லாம் இருக்கா!!
விமானங்களில் பயணிப்பது என்பது நம் நாட்டில் பெரும்பாலானோர்க்கு இன்னமும் இயலாத காரியமாகவே உள்ளது. இதனாலேயே இரயில் போக்குவரத்தை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேநேரம் சிலர் ஒவ்வொரு ஊரையும் சுற்றி பார்ப்பதற்காகவே இரயிலை போக்குவரத்திற்கு தேர்வு செய்கின்றனர்.

அதாவது அத்தகையவர்களிடம் விமானத்தில் பயணிப்பதற்கு வசதி இருக்கும். இருப்பினும் இரயிலில் பயணம் செய்ய ஆசைப்படுவர். அத்தகையவர்களுக்காகவே அட்டகாசமான சவுகரிய வசதிகளை கொண்ட இரயில்களும் பரவலாக இயக்கப்படுகின்றன. அத்தகைய லக்சரி இரயில்களுள் முக்கியமான ஐந்தினை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. தி டெக்கான் ஒடிசி (The Deccan Odyssey)
பிரபலமான தாஜ் க்ரூப் ஆஃப் ஹோட்டல்ஸால் நிர்வகிக்கப்படும் சொகுசு இரயில். 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மஹாராஜாக்களின் வாழ்க்கையையும், அவர்களது உணவருந்தும் பழக்கத்தையும் வெளிக்காட்டும் விதத்தில் இந்த இரயிலின் கேபின் அலங்கரிக்கப்படுகிறது.

டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்தின் பாரம்பரியங்களையும், கலாச்சாரத்தையும் அறிய அந்த மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கு தி டெக்கான் ஒடிசி இரயில் மிக ஏற்றதாக இருக்கும். மும்பை- டெல்லி இடையே இந்த சொகுசு இரயிலில் சேவை தற்சமயம் உள்ளது.

2. மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ்
இந்திய பராம்பரியம் & கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டதே மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ஆகும். சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் மஹாராஜாக்கள் அவர்களது குடும்பத்துடன் அமர்ந்து பேசும் மேசை & இருக்கைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை பறைச்சாற்றும் விதமாக இந்த இரயிலின் உட்பகுதி வடிவமைக்கப்படுகிறது.

5 நட்சத்திரங்களை பெற்ற மிகவும் பிரீமியம் தரத்திலான இரயில் இதுவாகும். தனி ஓய்வறைகள், படுக்கையறைகள், வாஷ் ரூம்கள் மற்றும் மிருதுவான துணி & லெதரால் அலங்கரிக்கப்பட்ட டைனிங் பகுதி உள்ளிட்டவை மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸில் உள்ள பகுதிகளாகும். வட இந்தியாவில் டெல்லியில் இருந்து தெற்கில் கேரளா தலைநகர் திருவனந்தப்புரம் வரையில் இதன் சேவை உள்ளது.

Image Courtesy: SlideServe
3. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்
ராஜஸ்தான் மாநிலத்தின் உயர்நிலை கலாச்சாரத்தை வெளிக்காட்டும் விதமாக டிசைன் செய்யப்பட்டதே ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் இரயில் ஆகும். அதற்கேற்ப இந்த இரயிலின் உட்புற கேபின் பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய அழகில், ராஜஸ்தான் கலாச்சாரத்தின் ஹைலைட்களுடன் வடிவமைக்கப்படுகிறது.

இந்த இரயிலில் இரு உணவக பெட்டிகளும், நினைவு சின்னங்களை கொண்ட பெட்டி மற்றும் ஸ்பா பெட்டிகளும் உள்ளன. மேற்கூறப்பட்ட மற்ற இரயில்களை போல ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் இரயிலிலும் மிகுந்த ராயல் உணர்வு கிடைக்கும் என்பது உறுதி. இந்த இரயில் சேவையும் நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்தே துவங்குகிறது.

4. பேலஸ் ஆன் வீல்ஸ்
ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் இரயிலை போல, பேலஸ் ஆன் வீல்ஸ் இரயிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சார சிறப்புகளை வெளிக்காட்டுவதாக இயக்கப்படுகிறது. இது ராஜஸ்தான் மாநில சுற்றுலா மேம்பாட்டு துறையின் முதல் பாரம்பரியம் மிக்க லக்சரி இரயில் ஆகும்.

இந்த இரயில் சேவை ஆனது ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் துவங்குகிறது. ஜெய்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் பழமையான இராஜங்க ஆட்சி நடைபெற்ற பகுதிகள் வழியாக பேலஸ் ஆன் வீல்ஸ் இரயில் இயக்கப்படுகிறது. அதாவது ராஜஸ்தானின் முக்கியமான பகுதிகள் அனைத்திற்கும் செல்லும் வகையில் இந்த இரயில் சேவை உள்ளது.

5. தி ராயல் ஒரியண்ட்
தி ராயல் ஒரியண்ட் இரயில் பயணம் ஆனது குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது இந்த மாநிலங்களில் உள்ள உதய்பூர், அகமாதபாத், ஜெய்பூர், ஜூனாகத் மற்றும் பலிடானா உள்ள பகுதிகளை இந்த இரயில் சேவை கவர் செய்கிறது.

ஆனால் இந்த இரயிலின் சேவை துவங்குவது என்னவோ தலைநகர் டெல்லியில் இருந்தே ஆகும். டெல்லி காண்டன்மெண்ட் இரயில் நிலையத்தில் இருந்து வருடத்தின் இறுதி மற்றும் துவக்க மாதங்களில் இந்த இரயில் இயக்கப்படுகிறது. அதாவது செப்டம்பர்-ஏப்ரல் மாதங்களில் ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமையில் தி ராயல் ஒரியண்ட் இரயிலின் பயணம் துவங்கப்படுகிறது.
Note: Unable to find images of The Royal Orient
ஆக, இவை தான் இந்தியாவின் மிகவும் லக்சரியான இரயில்கள் என சொல்ல வேண்டும். இவற்றில் எதில் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








