கோடி ரூபாய் கொடுத்தாலும் சரி, விமானப் பணிப்பெண்கள் டிப்ஸ் வாங்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?
விமான பணிப்பெண்களின் வேலையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதில் ஒரு விஷயத்தைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
Recommended Video
விமானத்தில் பணியாற்றும் பணிப்பெண்கள் பயணிகள் அவர்களது பணிக்காக டிப்ஸ் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். ஏன் தெரியுமா? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நாம் சாப்பிடுவதற்காக ஓட்டலுக்குச் சென்றால் அங்கு நமக்கு உணவு பரிமாறுபவருக்கு நாம் சாப்பிட்டு முடித்துவிட்டு பில் கொடுக்கும் போது அவருக்கு டிப்ஸ் கொடுப்போம். பலருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. ஆனால் நீங்கள் விமானத்தில் செல்லும் போது விமானப் பணிப்பெண்களுக்கு நீங்கள் டிப்ஸ் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள் ஏன் தெரியுமா? வாருங்கள் விரிவாகக் காணலாம்.

பொதுவாக நேரடியாகச் சேவை பிரிவில் பணியில் இருப்பவர்களுக்குச் சம்பளம் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் தங்களுக்குச் சிறப்பான சேவை வழங்கினால் அதைப் பாராட்டும் விதமாக வாடிக்கையாளர்கள் ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்குவார்கள். ஆனால் விமானங்களில் நமக்காகச் சேவை செய்யும் பெண்கள் டிப்ஸ் வாங்கி நாம் பார்த்திருக்க மாட்டோம். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்த டிப்ஸ் வாங்குவதைத் தடை செய்துள்ளது. இதனால் நீங்கள் விமானப் பணிப்பெண்களுக்கு டிப்ஸ் வழங்கினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு விமான நிறுவனங்கள் தனியான விளக்கம் அளிக்கின்றனர்.

பொதுவாக விமானப் பணிப்பெண்கள் என்பவர்கள் பயணிகளுக்குச் சேவை செய்யும் ஊழியர்கள் மட்டுமல்ல அவசரக் காலத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பும் அவர்களிடம் இருக்கிறது. விமான நிறுவனங்கள் எல்லா பயணிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டது.

ஒருவேலை விமானப் பணிப்பெண்கள் டிப்ஸ் வாங்கிவிட்டால் அவர்கள் டிப்ஸ் கொடுத்தவர்களுக்கு ஒருவிதமாகவும் டிப்ஸ் கொடுக்காதவர்களுக்கு ஒரு விதமாகவும் சேவை வழங்கக் கூடும், அல்லது டிப்ஸ் கொடுக்காத பயணிக்கு அப்படியான எண்ணத்தைக் கூட ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க விமான நிறுவனங்கள் இவ்வாறான ரூல்ஸ் ஒன்றை வைத்துள்ளனர்.

இது மட்டுமல்ல அவசரக் காலத்தில் சில பயணிகளை மட்டும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் விமானப் பணிப்பெண்கள் தனக்கு டிப்ஸ் கொடுத்த பயணியை மட்டும் காப்பாற்றினால் அது நியாமான நடைமுறையாக இருக்காது. அதனால் பெரும்பாலான விமான நிறுவனங்கள் விமானப் பணிப்பெண்கள் டிப்ஸ் வாங்கத் தடை விதித்துள்ளனர்.

இதற்கு விமானப் பணியாள்கள் சங்கம் ஆதரவைத் தெரிவித்து வருகிறது. இந்த தடையை எல்லா நிறுவனங்களும் விதிக்கவில்லை ஆனால் பெரும்பாலான நிறுவனங்களில் டிப்ஸ் தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுத் வெஸ்ட் விமான நிறுவனம் தடை செய்ய வில்லை. ஆனால் டிப்ஸ் வாங்க வேண்டாம் என அறிவுறுத்துகிறது.

ஆனால் ஃபிரண்ட் லைனர் விமானம் மாற்ற நிறுவனங்களிடமிருந்து மாற்றாக அவர்கள் பயணிகளிடம் விமானப் பணிப்பெண்களுக்கு டிப்ஸ் வழங்குவதை ஊக்குவிக்கின்றனர். ஃபிரண்ட்லைனர் விமான நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்குக் குறைந்த சம்பளம் கொடுப்பதற்காகவே டிப்ஸ் வழங்குவதை அங்கீகரிப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

சிலர் விமான பயணத்தில் நமக்காகச் சேவை செய்பவர்களுக்குச் சிறிய அளவு டிப்ஸ் வழங்குவதில் தவறில்லை எனச் சொல்கிறார்கள். சிலர் விமானப் பணியாளர்கள் டிப்ஸ் வாங்குவது மோசமான பழக்கம் எனச் சொல்கிறார்கள். இது ஒவ்வொரு தனி நபரையும் பொருத்து மாறுபடும்.

சரி அப்பொழுது விமான பணிப்பெண்களுக்கு எப்படி தனது நன்றியைத் தெரிவிப்பது எனப் பயணிகள் கேட்டால் விமான நிறுவனங்கள் கூறும் பதில் நீங்கள் விமானத்திலிருந்து இறங்கிச் செல்லும் போது அவர்களுக்கு நன்றி என மனதார சொல்லுங்கள் அதுவே அவர்களைப் பெரிதாக ஊக்கப்படுத்தும், அதையும் தாண்டி செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்காக நன்றி சொல்லி ஒரு நோட் ஒன்றை எழுதிக் கொடுங்கள், உங்கள் அனுபவம் குறித்துக் குறிப்பிட்ட விமானப் பணிப்பெண்ணின் பெயர் உடன் டிவிட்டரில் பதிவிடுங்கள் விமான நிறுவனங்களுக்கு இமெயில் செய்யுங்கள் இப்படியாக யோசனை சொல்கிறது. உங்கள் கருத்து என்ன விமானங்களில் விமானப் பணிப்பெண்களுக்கு டிப்ஸ் வழங்கலாமா? கூடாதா? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications