விமானத்தை கிளீன் பண்ண எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? சீக்கிரமாக கிளீன் பண்ண இப்படி ஒரு டெக்னிக் இருக்குதா?
நாம் விமான பயணம் செய்யும்போது விமானத்திற்குள் ஏறும் போது முழு விமானமும் சுத்தமாக நல்ல நறுமணத்துடன் இருக்கும். இதற்காக விமானத்தை அவ்வப்போது துப்புரவு பணியாளர்கள் வந்து சுத்தம் செய்து செல்கிறார்கள். இப்படியாக ஒரு விமானத்தை சுத்தம் செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது? என்னென்ன வகையிலான சுத்தங்களை எல்லாம் செய்கிறார்கள் என விரிவான விபரங்கள் உங்களுக்கு தெரியுமா இதோ காணலாம் வாருங்கள்.
விமானம் என்பது தற்போது உலக அளவில் பிரீமியம் சேவையாக இருக்கிறது. விமான பயணம் என்பது அதிக சொகுசு வசதிகள் நிறைந்த பயணம் என்பதால் இதில் சுத்தம் என்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் சுத்தம் என்பதுதான்.

நீங்கள் எப்பொழுது விமானத்திற்குள் சென்றாலும் விமானம் என்பது சுத்தமாக இருக்கும். எந்த விதமான அழுக்கும் இல்லாமல் எந்த விதமான குப்பைகளும் இல்லாமல் சுத்தமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் அவ்வப்போது துப்புரவு பணியாளர்கள் வந்து விமானங்களை சுத்தம் செய்கிறார்கள். இப்படியாக விமானங்களை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என்னென்ன முறைகளை கையாளுகிறார்கள் என்பதை பற்றி தான் இங்கே காண போகிறோம்.
பொதுவாக விமான சுத்திகரிப்பு என்பதை இரண்டு விதமாக பிரிக்கலாம். குறுகிய தூர பயண விமானம் மற்றும் நீண்ட தூர பயண விமானம் என பிரிக்கலாம். குறுகிய தூர பயண விமானம் என்பது ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று முறை பயணம் செய்யும் விமானம் ஆகும். இதில் ஒரு பயணம் முடிந்து மற்றொரு பயணம் தொடங்குவதற்கு இடையே மிகக் குறுகிய நேரம் தான் இருக்கும்.
இந்த நேரத்தில் விமானத்திற்குள் செல்லும் துப்புரவு பணியாளர்கள் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகள் ஆகியவற்றை அகற்றி கண்ணுக்கு புலப்படும் வகையிலான அழுக்குகளை நீக்கி விமானத்தை சுத்தப்படுத்துவார்கள். இதே நேரத்தில் விமானத்தில் பயணிக்க போகும் பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், மெடிக்கல் உபகரணங்கள் எல்லாம் ரீபில் செய்யப்படும்.
இதை செய்வதற்கு அதிகபட்சம் 20 நிமிடங்கள் மட்டுமே விமான நிறுவன ஊழியர்கள் எடுத்துக் கொள்வார்கள். இதற்குள் முழு விமானமும் அடுத்த பயணத்திற்கு தயாராகி விடும். இது குறுகிய தூரம் மட்டும் பயணம் செய்யும் விமானங்களில் செய்யப்படும் துப்புரவு பணியாகும். இதுபோக குறிப்பிட்ட கால இடைவெளியில் டீப் கிளீனிங் எனப்படும் முழுமையாக விமானத்தை சுத்தம் செய்யும் பணி நடக்கும்.
அடுத்ததாக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் நீண்ட தூரம் என்றால் முழு இரவு பயணிக்கும் விமானம் நாடு விட்டு நாடு நீண்ட நேரம் பயணிக்கும் விமானங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறை பறப்பது என்பதே பெரிய விஷயமாக இருக்கும். இதனால் விமானம் தரை இறங்கிய பின்பு விமான நிலையத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு விமானத்தை சுத்தம் செய்ய போதிய நேரம் கிடைக்கும்.
இதனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் டீப் கிளீனிங் செய்து விடுவார்கள். நீண்ட தூர பயணம் என்பதால் அதிகமான குப்பைகள் இருக்கும். மக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பதால் அந்த இடத்தை ஒவ்வொரு முறையும் வீட்டில் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அதனால் ஒவ்வொரு முறையும் வேக்கம் கிளீனர் மற்றும் சோப்பு கொண்டு முறையாக சுத்தம் செய்து விடுவார்கள். முக்கியமாக கழிவறையும் சுத்தம் செய்து விடுவார்கள்.
நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் என்றாலும், சரி குறுகிய தூரம் பயணிக்கும் விமானம் என்றாலும், சரி குறிப்பிட்ட கால இடைவெளியில் டீப் கிளீனிங் செய்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நீண்ட தூரம் பயணிக்கும் விமானத்தை சுத்தம் செய்ய அதிகபட்சம் மூன்று மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். சில விமானங்களில் அளவைப் பொறுத்து அதிகபட்ச நேரங்கள் இன்னும் அதிகமாக கூட மாற வாய்ப்பு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானம் அடுத்து எந்த நேரத்தில் தயாராக வேண்டும் தற்போது விமான நிலையத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? விமானங்களில் எண்ணிக்கை எவ்வளவு என்பதை பொறுத்து அதற்கு ஏற்றார் போல் டீம்கள் தயார் செய்யப்பட்டு துப்புரவு பணி என்பது நடைபெறும். ஆனால் நிச்சயம் துப்புரவு செய்யப்பட்ட பின்பே அடுத்து விமானத்தில் பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications








