ரொம்பநாளா இப்படி ஒரு ரூல்ஸ் வரனும்ன்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க! இப்ப வந்துடுச்சு!
விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டால் இனி பயணிகள் நீண்ட நேரம் விமானத்தில் உள்ளேயே காத்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும், பயணிகளை தாராளமாக புறப்பாடு கேட் வழியாகவே வெளியே அனுப்பலாம் எனவும், தற்போது புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
விமானங்கள் என்னதான் விரைவான மற்றும் சொகுசான பயணத்தை தந்தாலும், விமானங்களில் இருக்கும் பிரச்சனை காலதாமதம் என்பதுதான் பல நேரங்களில் விமானம் காலதாமதமாக பயணம் செய்கின்றன. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. விமானங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் என பல்வேறு காரணங்களால் விமானம் தாமதம் ஆகிறது.

இதில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒரு விமானத்தில் பயணிகள் எல்லாம் ஏற்றப்பட்ட பின்பு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விமானம் தாமதமானால் விமானம் எவ்வளவு நேரம் தாமதம் ஆனாலும் அவ்வளவு நேரமும் விமானத்தின் உள்ளே ஏறிய பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அவர்களை மீண்டும் வெளியே அனுப்ப விதிமுறைகள் இதுவரை இல்லை.
இதனால் கடைசி நேரத்தில் விமானிகள் விமானத்தில் ஏறுவதில் சிக்கல் ஏற்பட்டால் விமானத்திற்கு உள்ளே ஏறிய பயணிகள் பலர் பல மணி நேரம் விமானத்துக்கு உள்ளேயே அடுத்த விமானிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போதுதான் நடக்கிறது என்றாலும், இந்த நேரத்தில் விமானத்திற்குள் இருக்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுவதால் புதிய விதிமுறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கண்காணிப்பதற்காக இந்த அமைப்புதான் பயணிகள்படும் இந்த சிரமத்தை கண்காணித்து இதற்கான புதிய விதிமுறை ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி இனி விமானம் நீண்ட நேரம் காலதாமதம் ஆனால் விமானத்துக்கு உள்ளே பயணிகள் ஏறி விட்டாலும் அவர்களை மீண்டும் புறப்பாடு கேட் வழியாகவே வெளியே அனுப்பி காத்திருக்க வைக்க விதிமுறை ஒன்றை வகுத்துள்ளது.
பெரும்பாலும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் பல்வேறு விமானங்களில் மாறி மாறி பயணம் செய்ய நினைப்பவர்கள். இப்படியானவர்களுக்கு இப்படி நீண்ட நேரம் விமானத்திற்கு உள்ளே அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். இனி அப்படியாக அமர வேண்டிய தேவை இல்லை. பயணிகள் தாராளமாக அவர்கள் வந்த வழியாகவே வெளியே சென்று விமான நிலையத்தில் காத்திருக்கலாம். மீண்டும் அவர்களுக்கு போர்டிங் என்பது நடக்கும்.

பொதுவாக விமானத்தில் போர்டிங் என்பது மிகப்பெரிய பணியாக இருக்கும் ஒவ்வொரு பயணியையும் சரியாக கண்காணித்து அவரை போர்டு செய்து விமானத்திற்குள் சரியாக அவரது இருக்கையில் அமர வைப்பது என்பது விமான நிறுவன ஊழியர்களுக்கு மிகப்பெரிய பணியாக இருக்கிறது. விமானம் காலதாமதம் ஆனால் அவர்களை மீண்டும் டிபோர்டு செய்து மறுபடியும் போர்டு செய்வது அவர்களுக்கு இரட்டை வேலையாக அமையும்.
இருந்தாலும் விமானத்திற்கு உள்ளேயே நீண்ட நேரம் மனிதர்களால் அமர்ந்திருப்பது என்பது சாத்தியமில்லாதது. இதனால் பயணிகள் சிரமம் இருக்கிறது. அவர்களுக்கு இது பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதால் அவர்களது நலம் கருதியை இந்த விதிமுறை என்பது கொண்டுவரப்பட்டுள்ளதாக தற்போது ஏவியேஷன் துறை தெரிவித்துள்ளது.
அடிக்கடி விமானம் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு பெரும் நிம்மதியை ஏற்படுத்தும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறிய நிறுவனங்கள் நடத்தி வரும் விமான சேவையில் இப்படியான பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த புதிய விதிமுறை என்பது தற்போது அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு இது எவ்வளவு முக்கியமான பிரச்சனை என்பது நிச்சயம் புரியும். விமானத்தில் பயணிகளை போர்டிங் செய்துவிட்டு விமானம் கிளம்ப தாமதமானால் விமானத்திற்குள் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் அதன் காரணமாகவே உடல் நிலை பிரச்சனை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது.


Click it and Unblock the Notifications









