அவசர காலங்களில் விமானங்களிலிருந்து பயணிகள் வெளியேறும் போது லக்கேஜ்களை எடுக்கனுமா? வேண்டாமா?

அவசர காலங்களில் விமானங்களில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக திரையரங்கும் போது அவர்கள் தங்களது லக்கேஜை எடுக்காமல் தங்கள் உயிரைக் காப்பாற்ற உடனடியாக வெளியேறுவார்கள். இப்படியாக வெளியேறிய பின்பு அவர்கள் விமானத்திலேயே விட்டுச் சென்ற உடைமைகள் என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதைப் பற்றி தான் நாம் இங்கே காண போகிறோம்.

விமான பயணம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிசயங்கள் நிறைந்ததோ அதே அளவுக்கு ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. பல நேரங்களில் விமானத்தில் பயணிகள் பயணம் செய்யும்போது அவசர கால தரை இறக்கம், அவசரமாக விமானங்களில் இருந்து பயணிகளை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இப்படியான சம்பவங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இன்று வரை இந்த சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

flight emergency evacuation rules

இப்படியாக விமானங்கள் அவசர காலத்தில் தரையிறக்கப்பட்டு அதிலுள்ள பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தால் விமானத்தில் உள்ள அத்தனை பயணிகளும் 90 வினாடிக்குள் வெளியேற்றும்படி விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றார் போல் எமர்ஜென்சி எக்ஸிட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் திட்டமிடப்பட்டு தான் ஒரு விமானம் என்பது வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மொத்தம் உள்ள எக்ஸிட்களில் பாதிக்கும் மேல் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தாலும், மீதி பாதியிலேயே அனைத்து பயணிகளும் 90 வினாடிக்குள் வெளியேறிவிட முடியும். அப்படியாக தான் ஒரு விமானம் என்பது வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்படியாக விமானங்களில் இருந்து அவசர அவசரமாக பயணிகள் வெளியேறும் போது விமானிகள் தங்கள் உடமைகளை விமானத்திலேயே விட்டு வர வேண்டும் என்பதுதான் விதிமுறை.

flight emergency evacuation rules

ஆனால் பல நேரங்களில் இப்படியாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டவுடன் விமானிகள் தங்கள் உடமைகளை மேலே உள்ள கேபினில் இருந்து எடுக்க தான் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். இதனால் விமானத்திற்குள் இருக்கும் பயணிகளை வெளியேற்றுவது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தின் போது அதிக நபர்கள் இதனால் காயமடையும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

ஆனால் விமான நிலையிலிருந்து அவசர காலமாக பயணிகள் வெளியேறும் போது எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக விரிக்கப்பட்டுள்ள பலூன் வழியாக ஸ்லைடாகி தான் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்பொழுது பயணிகள் கையில் ஏதாவது லக்கேஜ் இருந்தால் அது கீழே விரிக்கப்பட்டுள்ள பலூனை சேதப்படுத்தி பஞ்சராக்கி விட கூடும் என்பதால் விமானங்களில் இருந்து இறங்கும்போது பயணிகள் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

அவசர காலமாக விமானிகள் வெளியேற்றப்பட்டால் பயணிகள் தங்கள் உடமைகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைவது என்பது முற்றிலும் சுயநலம் கொண்ட எண்ணமாகும். இது அறிவில்லாமல் செய்யும் செயலாக கருதப்படுகிறது. சரி அப்படி என்றால் விமானங்களில் உள்ள இந்தப் பொருட்கள் எப்படி எல்லாம் எப்படி பயணிகள் கைக்கு வரும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பொருட்கள் வேகமாக வாய்ப்பிருக்கிறதா என்றும் பலர் கேட்கிறார்கள்.

இப்படியாக விமானத்தில் அவசர காலமாக தரையிறக்கம் செய்யப்பட்டாலும் அல்லது டேக் ஆப் செய்யும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டாலும் அவர்களது உடைமைகள் என்பது விமானம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பின்பு உள்ளே விமான நிலைய ஊழியர்கள் சென்று அனைத்து உடைமைகளையும் எடுத்து நேராக டெர்மினல் கொண்டு வந்து விடுவார்கள் அங்கு உரிய உடைமைகளை உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் பணி நடக்கும்.

இதற்காக விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் போன் நம்பரை தொடர்பு கொண்டு எங்கு எப்படி இந்த லக்கேஜ்கள் எல்லாம் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்ற தகவலை அளிப்பார்கள். இப்படித்தான் உடைமைகளை மீண்டும் பயணிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை விதிமுறையாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் விமானம் என்பது மிக ஆச்சரியமான வாகனமாக இருந்தாலும் ஆபத்து நிறைந்த வாகனமாக இருக்கிறது. இதில் பயணிக்கும் போது பயணிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஆபத்துகளில் இருந்து அதிகமான நபர்கள் காப்பாற்றப்படுவார்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். இதனால் நீங்கள் பயணிக்கும் போது அவசர காலமாக வெளியேற்றப்பட்டால் உங்கள் உடமைகளை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, February 15, 2024, 16:27 [IST]
English summary
Flight evacuation rules passengers belongings left aircraft
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+