உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை: காந்தாஸ் அறிமுகப்படுத்துகிறது

Written By:

டெல்லியிலிருந்து அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை அண்மையில் ஏர் இந்தியா நிறுவனம் துவங்கியது. மிக வெற்றிகரமாக இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதைவிட கூடுதல் தூரம், நேரம் பயணிக்கும் விமான சேவையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காந்தாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த விமானம் 17.5 மணிநேரம் இடைநில்லாமல் பறந்து இந்த இரு நகரங்களையும் இணைக்க இருக்கிறது.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

இந்த நீண்ட தூர பயணத்திற்கு போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை காந்தாஸ் நிறுவனம் பயன்படுத்த இருக்கிறது. இதற்காக ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் அடுத்த ஆண்டு டெலிவிரி பெறப்பட உள்ளன.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

பெர்த்- லண்டன் இடையிலான 14,466 கிமீ தூரத்திற்கு இந்த விமானம் இடைநில்லாமல் பயணிக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விமான சேவைக்கான முன்பதிவு துவங்கப்படும். 2018ம் ஆண்டு இந்த விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

இந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவெனில், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதே. இதன்மூலம், நீண்ட தூரம் பறக்கும் விமானமாக இதனை அறிமுகம் செய்தனர். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறும் வகையில், இலகு எடை கொண்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டன.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

அதாவது, இந்த விமானத்தின் 80 சதவீத பாகங்கள் இலகு எடை கொண்ட கலப்பு உலோக பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் உறுதிமிக்க அலுமினியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட இருக்கும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்பட்சத்தில் 15,190 கிமீ தூரம் பறந்து செல்லும் திறன் கொண்டது. அதிக எரிபொருள் சிக்கனம் தருவதால், கட்டணமும் நியாயமாக நிர்ணயிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஜிஇ எலக்ட்ரிக் அல்லது ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த விமானமானது மணிக்கு 945 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. சராசரியாக 903 கிமீ வேகத்தில் பறந்து செல்லும்.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

அதிக எரிபொருள் சிக்கனம், சொகுசான பயணத்தை வழங்கும் இந்த விமானங்கள் இந்த நீண்ட தூர பயண வழித்தடத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. போயிங் 787 விமானத்தில். 242 பயணிகள் முதல் 335 பயணிகள் வரை செல்வதற்கான இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கின்றன. இரண்டு பைலட்டுகள் இந்த விமானத்தை இயக்க முடியும்.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

இன்றைய மதிப்பில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,500 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. வசதிகள், இருக்கை அமைப்பு, எஞ்சின் தேர்வு உள்ளிட்டவற்றை பொறுத்து விலையில் மாறுபாடுகள் இருக்கிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு உலகின் மிக நீண்ட தூர விமான சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை!

சிங்கப்பூர்- நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 16,500 கிமீ தூரத்தை 19 மணிநேரத்தில் இந்த விமானம் கடக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விமான சேவையை துவங்குவதற்கான திட்டம் உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Flight From Australia to London Will Be The Longest In The World.
Story first published: Monday, December 12, 2016, 14:09 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos