விமானம் தரையிறங்கும் முன்பே லேண்டிங் கியர் கீழே வருகிறது ஏன் தெரியுமா?
விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியர் என்ற கருவி மிக சீக்கிரமாகவே கீழே இறக்கப்பட்டு விடுகிறது. ஆனால் டேக் ஆப் ஆனவுடன் லேண்டிங் எல்லாம் உள்ளே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? ஏன் லேண்டிங் ஆகும்போது மட்டும் மிக விரைவாகவே லேண்டிங் கீழே எடுக்கப்படுகின்றன என்ற விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இன்றளவும் நாம் வானில் விமானம் பறந்தால் அண்ணாந்து வியந்து பார்க்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு விமானம் என்பது நமக்கு எல்லாம் மிக ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கிறது. இவ்வளவு ஆச்சரியங்கள் நிறைந்த விமானங்களில் பல அறிவியல்களும் நிறைந்துள்ளன. இப்படியாக விமானங்கள் தரையில் இருந்து விண்ணுக்கு பாய்வதற்கும் விண்ணிலிருந்து தரையில் தரையிறங்குவதற்கும் மிக முக்கியமான கருவியாக இருப்பது லேண்டிங் கியர்.

லேண்டிங் கியர் என்பது விமானத்திற்கு கீழே உள்ள வீல்கள் தான். நாம் விமானம் தரையிறங்குவதையும் டேக் ஆப் ஆவதையும் பார்த்திருந்தால் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்து இருப்போம் .விமானம் டேக் ஆஃப் ஆன ஒரு சில நொடிகளில் லேண்டிங் கியர் என்பது விமானத்திற்கு உள்ளே சென்று விடும். ஆனால் விமானம் லேண்ட் ஆகும் போது இந்த லேண்டிங் கியர் மிக முன்னதாகவே கீழே இறக்கப்பட்டு விடும்.
பலரும் இதை கவனித்திருப்பார்கள். ஆனால் இதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. இந்த இரு சம்பவங்களுக்கும் ஒரே காரணம்தான் பிரதானமாக இருக்கிறது. இரண்டுக்கும் காரணம் பாதுகாப்பு தான் விமானத்தின் பாதுகாப்புக்காக தான் இந்த இரண்டும் செய்யப்படுகிறது. விமானம் டேக் ஆஃப் ஆகும்போது காற்றை கிழித்துக்கொண்டு பறக்கும்.

விமானம் டேக் ஆஃப் ஆகும்போது ஏற்படும் காற்றழுத்தத்தின் காரணமாக விமானத்திற்கு அடியில் செல்லும் காற்று லேண்டிங் கியர் கீழே இருந்தால் அதை சேதப்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் விமானம் டேக் ஆஃப் ஆன அடுத்த ஒரு சில நொடிகளில் அதை உள்ளே எடுத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தேவையில்லாமல் தவிர்க்கப்படும்.
அதே நேரம் விமானம் லேண்டிங் ஆகும்போது மிக சீக்கிரமாகவே லேண்டிங் கியரை கீழே இறக்கி விடுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் விமானம் கிட்டத்தட்ட ஒரு பாதைக்கு அருகில் வரும்போது லேண்டிங் கீயரை கீழே இறக்குவதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மீண்டும் விமானத்தை டேக் ஆப் செய்வது என்பது கடினமான காரியமாக இருக்கும். சில நேரங்களில் இதனால் விபத்து கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மிக முன்னரே லேண்டிங் கியரை கீழே இறக்கி விட்டு விடுவார்கள்.

விமானம் கடல் நீர்மட்டத்தில் இருந்து சுமார் 1000 முதல் 2000 அடி உயர்த்தி பறக்கும்போதே இந்த லேண்டிங் கியர் கீழே இறக்கப்பட்டு விடும். மேலும் விமானம் கீழே இறங்கும் போது பெரும்பாலும் காற்றை கிழித்துக்கொண்டு சென்றாலும் காற்று விமானத்தின் மேல் பகுதியில் தான் அதிகமாக செல்லும். அதனால் கீழ் பகுதியில் இருக்கும் லேண்டிங் கியருக்கு பெரிய அளவில் பிரச்சினை கிடையாது.
இது மட்டுமல்ல விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் ஏதாவது அவசர கால சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டால் உடனடியாக லேண்டிங் கியர் என்பது தானாக கீழே இறங்கி விடும். இதை பைலட் தான் கீழே இறக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. இதனால் விமான பாதுகாப்பாக திரையிறங்க முடியும் என்பதால் இப்படியான ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒரு விமானத்தில் லேண்டிங் கியர் என்பது விமானத்தின் மிக முக்கியமான கருவியாக இருக்கிறது. எப்படி வாகனத்திற்கு பிரேக் என்பது முக்கியமான கருவியோ அதே போல லேண்டிங் கியரும் விமானத்துக்கு முக்கியமான கருவி இதனால் இதை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதன் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு விட்டால் விமான விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலருக்கும் விமானத்தில் பயணிக்கும் ஆசை இருந்தாலும் அதன் பின்னால் உள்ள அறிவியல் தெரிவதில்லை. விமானத்தை வேடிக்கை பார்த்த போல இந்த விஷயத்தை பலமுறை பார்த்திருந்தாலும் இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் இருந்திருப்பார்கள். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான் இப்படியாக விமானங்களில் ஏகப்பட்ட அறிவியல் அம்சங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications









