மூட்டை மூட்டையா கட்டி எடுத்துட்டு போக முடியாது! விமான லக்கேஜ்களுக்கு வருது புதிய கட்டுப்பாடு!
இந்தியாவில் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இனி இந்தியாவில் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் கையில் ஒரு பையை மட்டுமே லக்கேஜாக கொண்டு செல்ல முடியும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானங்களில் பயணம் செய்து வருகிறார்கள். இதற்காக நூற்றுக்கணக்கான விமானங்கள் தினமும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த விமான பயணத்தின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் குறித்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் ,அதில் புதிய கட்டுப்பாடு ஒன்று தற்போது அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.

விமானங்களில் கொண்டு செல்லும் லக்கேஜ்களை பொறுத்தவரை இரண்டு விதமான லக்கேஜ்களாக பிரிக்கப்படுகின்றன. கையில் எடுத்துச் செல்லும் ஹேண்ட் பேக்கேஜ் ஒரு வகையாகவும், விமானத்தில் உள்ளே சரக்கு வைக்கும் இடத்தில் எடுத்துச் செல்லும் லக்கேஜ் ஒரு விதமாகவும் என இரண்டு விதமான லக்கேஜுகள் ஒரு பயணியால் எடுத்துச் செல்ல முடியும்.
ஒரு பயணி எந்த வகுப்பில் விமான டிக்கெட் புக் செய்துள்ளார் என்பதை பொறுத்து அவர் எவ்வளவு லக்கேஜை கொண்டு செல்ல முடியும் என்ற விதிமுறை தற்போது அமலில் இருக்கிறது. சரக்கு பெட்டியில் போடக்கூடிய லக்கேஜிற்க்கு குறிப்பிட்ட எடை அளவும் கையில் எடுத்துச் சொல்லக்கூடிய லக்கேஜிற்கு குறிப்பிட்ட எடை அளவும் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவிலான விமான பயணிகள் தற்போது விமானங்களில் பயணம் செய்து வருவதால் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இந்நிலையில் மத்திய சிவில் ஏவியேஷன் துறை இந்த லக்கேஜ் குறித்த புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதன்படி இனி விமானங்களில் பயணம் செய்யும்போது கையில் ஒரு லக்கேஜை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விமானிப் பயணிகள் கையில் இரண்டு மூன்று லக்கேஜ் எடுத்து சென்றாலும் அதன் ஒட்டுமொத்த எடை மட்டுமே கணக்கிடப்பட்டு அது அனுமதிக்கப்பட்ட எடையளவுக்கு விட குறைவாக இருந்தால் அனுமதிக்கப்பட்டு வந்தது. இனி இரண்டு மூன்று லக்கேஜ் எல்லாம் எடுத்துச் சொல்ல முடியாது. கையில் ஒரே ஒரு கைபை மட்டுமே எடுத்துச் சொல்ல முடியும் என்ற புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் கையில் ஒரு லக்கேஜை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் அதன் எடை அளவு பழைய எடையளவு போலவே கட்டுப்பாட்டுடன் தான் வழங்கப்படும். அதிகபட்சம் ஏழு கிலோ வரை கேபின் லக்கேஜை எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு பயணம் விமானத்திற்கும் வெளிநாட்டு பயண விமானத்திற்கும் பொருந்தும்.
இது மட்டுமில்லாமல் அந்த லக்கேஜிங் அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன அதன்படி 55 சென்டிமீட்டர் உயரம், 40 சென்டிமீட்டர் நீளம், 20 சென்டிமீட்டர் அகலம் வரை உள்ள லக்கேஜ்கள் மட்டுமே கையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். அதை தாண்டி அளவு கொண்ட லக்கேஜ்கள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நான்காம் தேதிக்கு முன்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்து தற்போது வரை பயணம் செய்யாமல் இருக்கும் பயணிகள் மட்டும் பழைய விதிமுறையின் படி லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பயணிகளுக்கெல்லாம் புதிய விதிமுறைப்படி தான் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் லக்கேஜ் பாலிசிகளை மாற்றி புதிய விதிமுறைக்கு ஏற்ப திருத்தம் செய்துள்ளார்கள். இனி ஒவ்வொரு விமான நிறுவனங்களும் தங்கள் லக்கேஜ் பாலிஸியை மாற்றி விரைவில் புதிய லக்கேஜ் பாலிஸியின் படி டிக்கெட்களை விற்பனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை நடைபெறும் போது அதிக லக்கேஜ்கள் இருந்தால் கூடுதல் நேரம் எடுக்கிறது என்பதை கணக்கிட்டு இப்படியான விதிமுறையை கொண்டு வந்துள்ளார்கள். இது பயணிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களுக்கு அதிக லக்கேஜ்கள் தேவைப்படும். இதை மனதில் வைத்து இந்த விதிமுறையை தளர்வு செய்ய வேண்டுமென மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









