விமானத்தில் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது! இதுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன?

விமானங்கள் டேக்ஆஃப் ஆகும்போதும் லேண்ட் ஆகும்போதும் ரன்வேயில் சிறிது தூரம் பயணம் செய்யும் இப்படியாக ரன்வேயில் விமானம் பயணம் செய்யும் தூரம் என்பது டேக்ஆஃப் செய்யும்போது அதிகமாகவும் லேண்ட் ஆகும்போது குறைவாகவும் இருக்கும். இப்படியாக ரன்வேயில் விமானம் பயணிக்கும் தூரத்தில் மாற்றம் ஏற்படுவது எதனால்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.

நீங்கள் விமானத்தில் இதுவரை பயணித்து உள்ளீர்களா? இப்படி பயணத்துள்ளீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயம் விமானத்தின் ரன்வே குறித்து தெரிந்திருக்கும். விமானம் டேக்ஆஃப் ஆகும்போதும் சரி லேண்ட் ஆகும் போதும் சரி ரன்வேயில் சிறிது தூரம் ஓடிய பின்பு தான் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் என்பது நடக்கத் துவங்கும். இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

flight runway science

ஆனால் இப்படியாக டேக்ஆஃப் ஆகும்போதும் சரி லேண்ட் ஆகும் போதும் சரி விமானம் பயன்படுத்தும் ரன்னிங் வே தூரம் என்பது மாறுபடுகிறது. மிக அதிகமான தூரம் ரன்வேயில் விமானம் பயணிக்கிறது. அதே நேரம் லேண்ட் ஆகும்போது விமானம் ரன் வேயில் மிகக் குறைவான தூரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு தனது முடிகிறது. அது ஏன் என தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் விமானம் டேக் ஆஃப் ஆக வேண்டும் என்றால் விமானம் 0 கிலோமீட்டர் வேகத்திலிருந்து மெல்ல மெல்ல அதன் வேகத்தை அதிகரிக்க வேண்டும். விமானத்தின் வேகம் அதிகமாவது என்பது சிறிது நேரமாகும் அந்த நேரம் விமானம் ரன்வேயில் ஓடி தான் ஆக வேண்டும். ஆனால் லேண்டிங் ஆகும்போது வேகம் குறைக்கப்பட வேண்டும். குறைக்கும் போது மிக விரைவாக வேகத்தை குறைக்க முடியும்.

flight runway science

இந்த இரண்டுக்கும் விமானத்தின் எடை என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. விமானம் அதிக எடை கொண்டதாக இருந்தால் ரன்வேயில் அதிக தூரம் பயணித்தால் தான் அதன் வேகம் என்பது கிடைக்கும். அதே நேரம் லேண்டிங் செய்யும்போது அதிக எடை காரணமாக மிக விரைவாகவே வேகம் குறைந்து விடும். இது ஒரு பக்கம் இருந்தாலும் இதற்குப் பின்னால் மற்றொரு காரணமும் இருக்கிறது.

விமானத்தின் இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்ட அடுத்த ஒரு சில நொடிகளில் அது பெயிலியராக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் விமானத்தின் இன்ஜின், விமானம் பறந்த பின்பு ஃபெயிலியர் ஆனால் அந்த விமானம் விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் விமானம் இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு அடுத்த ஒரு சில நொடிகள் தரையில் இருந்தால் விமானத்தின் இன்ஜின் ஃபெயிலியர் ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணிகளை காப்பாற்ற முடியும்.

இதனால் விமானத்தின் டேக்ஆஃப் நேரத்தில் முடிந்த அளவு ரன்வே முழுவதும் விமானத்தை ஓட்டி அதன் பின்பு டேக்ஆஃப் செய்ய தான் விமானிகள் முயற்சி செய்வார்கள். இதனால் அதிக நேரம் விமானம் பூமியில் இருக்கும் இன்ஜினில் எந்த பிரச்சனையும் இடையில் ஏற்பட்டாலும் விமானத்தை உடனடியாக நிறுத்த முடியும்.

அதே நேரம் விமானத்தை லேண்ட் செய்த போது முடிந்த அளவு குறைவான தூரத்திலேயே விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முயற்சி செய்வார்கள் ஏனென்றால் அதிக தூரம் சென்றாலோ அல்லது விமான நிலையத்தில் உள்ள ரன்வேயின் இறுதிவரை சென்றாலும் இறுதி கட்ட கட்டுப்பாடு இழப்பு காரணமாக விமானம் விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதை விமானிகள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

இதன் காரணமாக தான் விமானிகள் டேக்ஆஃப் செய்யும்போது ரன்வேயில் அதிக தூரத்தை பயன்படுத்துகிறார்கள். விமானத்தை லேண்ட் செய்யும் போது முடிந்த அளவு குறைவான தூரத்தை பயன்படுத்துகிறார்கள். இதுவே இரண்டும் விமானத்தில் உள்ள பயணிகளின் பாதுகாப்பிற்காக தான் பல விமானத்தில் பயணித்த பலருக்கும் இந்த ரகசியம் என்பது தெரியாமல் தான் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெகு சிலரே விமானத்தில் பயணம் செய்யும்போது டேக் ஆஃப் ஆகும்போது அதிக நேரம் ரன்வேயில் ஓடுவதையும் லேண்ட் ஆகும் போது குறைவான நேரத்திலேயே விமானம் லேண்ட்டாகி ரன்வேயிலிருந்து டாக்ஸி வேக்கு செல்வதையும் கவனித்திருப்பார்கள். அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 21, 2024, 17:15 [IST]
English summary
Flight runway science takeoff vs landing distance
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+