ஜெயிச்சிட்ட மாறா! சூரரைப் போற்று படம் போல கம்மி விலைக்கு விமான டிக்கெட் வரப்போகுது!
விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான டிஜிசிஏ என்ற அமைப்பு தற்போது விமான டிக்கெட் விற்பனையில் புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் தற்போது சூரரை போற்று படத்தில் வருவதைப் போல குறைந்த விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ய வழிவகை செய்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் விமானங்களின் டிக்கெட் விலை குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூரரை போற்று என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதையே கதாநாயகன் ஏழை மக்களுக்காக குறைந்த விலையில் விமான சேவையை அறிமுகப்படுத்த துடிப்பதும், அதை பெரிய விமான சேவை நடத்தி வரும் நிறுவனங்கள் தடுக்க நினைப்பதுமாக அமைந்திருந்தது.

இந்த படம் கேப்டன் ஜிஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவிய ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் குறைந்த விலையில் விமான சேவை வழங்க திரைப்படத்தின் கதாநாயகன் விமான சேவைகளில் வழங்கப்படும் தேவையில்லாத சில சேவைகளுக்கான கட்டணங்களை குறைத்து அந்த சேவைகளை வழங்கவில்லை என்றாலே விமான கட்டணம் குறையும் என வசனம் பேசி இருப்பார்.
இதைக் கேட்கும் போது நமக்கும் குறைவான பயண நேர பயணத்திற்கு தேவையில்லாமல் பல்வேறு விதமான சேவைகளை நாம் பெற்று அதற்காக அதிக பணத்தை செலவு செய்கிறோமோ என நமக்கும் எண்ணம் தோன்றும். இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் உள்ள விமான சேவைகளை கண்காணிக்கும் அமைப்பான டிஜிசிஏ என்ற அமைப்பு விமான டிக்கெட் விலையில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

தற்போது விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட் எடுக்கும் போது அந்த டிக்கெட் உடன் சேர்த்தே சில கூடுதல் சேவைகளையும் வழங்குவதற்காக கட்டணங்களையும் வசூல் செய்து வருகின்றன. இந்நிலையில் இப்படியான வசூல் முறையை செய்யக்கூடாது என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. கூடுதல் கட்டணத்தை பயணிகள் தேவைப்பட்டால் மட்டும் கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ளும் ஆப்ஷனை வழங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் விமான பயணத்திற்கான கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அடிப்படை விமான டிக்கெட்டின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. விமானத்தில் பயணிக்கும் பலருக்கும் விமான சேவை நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு விதமான சேவைகள் தேவைப்படுவதில்லை. இருந்தாலும் விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட் விலையில் இந்த சேவைகளுக்கான கட்டணத்தையும் சேர்த்து வசூலித்து வருகின்றன. இதை குறைத்தாலே டிக்கெட் விலை வெகுவாக குறையும்.

இதற்காக டிஜிசிஏ கொண்டு வந்துள்ள அறிவிப்பின்படி தற்போது விமானத்தில் சீட்டுகளை தேர்வு செய்வதற்காக தனி விலையை டிக்கெட் விலையுடன் சேர்த்து வசூல் செய்யப்படுவது தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான பயணத்தின் போது வழங்கப்படும் உணவுகளுக்கான விலையும் கட்டாயம் சேர்த்து வசூலிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுபோக விமான டிக்கெட் விலையில் பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கான கட்டணமும் சேர்ந்துதான் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை பயணிகள் லக்கேஜ் எதையும் கொண்டு வரவில்லை என்றால் அவர்களிடம் அந்த கட்டணத்தை வசூலிக்க கூடாது என தெரிவித்துள்ளது. இதனால் விமான டிக்கெட் எடுக்கும் போது அதில் லக்கேஜிற்கான எந்த விதமான கட்டிடத்தையும் வசூலிக்காமல் வாடிக்கையாளர்கள் தேவைப்பட்டால் அதை தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தற்போது விமான சேவை நிறுவனங்கள் இந்த லக்கேஜ் கட்டணத்தை குறைப்பதற்கு எந்த பயணி லக்கேஜ் இல்லாமல் வருகிறாரோ அவர் மட்டும் ஜீரோ லக்கேஜ் ஆப்ஷனை தேர்வு செய்து அதற்கான பணத்தை குறைத்துக் கொள்ளும் வழி இருக்கிறது. ஆனால் அது இல்லாமல் அடிப்படை விலையில் லக்கேஜிற்கான கட்டணம் இருக்கக் கூடாது, என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
இது போக விமான நிலையத்தில் உள்ள லாக்கேஜ்களை பயன்படுத்துவதற்காக தனி கட்டணமும் விமான டிக்கெட் உடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இனி இதுவும் தனியாக தான் வசூலிக்கப்பட வேண்டும். விமானம் டிக்கெட்டுடன் இதை சேர்த்து வசூலிக்க கூடாது என டிஜிசிஏ அதிரடியாக தெரிவித்துள்ளது.
இதுபோக விளையாட்டு வீரர்கள் பயணிக்கும் போது அவர்களது டிக்கெட் உடன் விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்லும் கட்டணம் இசை கருவிகளை எடுத்துச் செல்லும் கட்டணம் அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் எல்லாம் விமான டிக்கெட் விலையிலேயே சேர்க்கப்படுகின்றது.
ஆனால் அனைத்து பயணிகளும் இப்படியாக விளையாட்டு உபகரணங்கள் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதில்லை. அதனால் இப்படியாக எடுத்து செல்லாத பயணிகளிடம் அதற்கான கட்டணத்தை வசூலிப்பது முறையல்ல. அதனால் இதையெடுத்துச் செல்லும் பயணிகள் தேவைப்பட்டால் இதற்கான கட்டணத்தை செலுத்தி எடுத்துச் செல்வதற்கான ஆப்ஷனை தான் வழங்க வேண்டுமே தவிர டிக்கெட் விலையில் அனைத்தையும் சேர்க்கக்கூடாது என டிஜிசிஏ தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தியா சார்பாக விளையாட்டுப் போட்டிகளில் விளையாட செல்லும் வீரர்களுக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் கலைஞர்களுக்கும் அவர்களது இசைக்கருவி மற்றும் விளையாட்டு உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கான சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே இருக்கும் சட்டப்படி இதற்கான கட்டணத்தை அரசு செலுத்தி விடுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு விமான டிக்கெட்டின் விலை அதிகமாக இருப்பதற்கு இது போன்ற கட்டண சேர்ப்புகள் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. டிஜிசிஏ அமைப்பு இந்த கட்டணங்களை எல்லாம் தனியாக பிரித்து வசூல் செய்தால் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பலரது கனவுகள் நினைவாகும் தருணமாக மாறும் விமான டிக்கெட்டின் அடிப்படை விலை குறைவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









