நீங்க எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் சரி ஃபிளைட்டுல இந்த நேரத்துல மட்டும் சீட் மாறி உட்கார அனுமதிக்க மாட்டாங்க! ஏன்
விமானங்களில் பயணிக்கும் போது நீங்கள் பயணிக்கும் விமானத்தில் முழு சீட்டுகளும் புக்கிங் செய்யப்படாமல் பல சீட்டுகள் காலியாக இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட நேரம் வரை நீங்கள் முன் பதிவு செய்த சீட்டில் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள். வேறு சீட்டுக்கு மாறி செல்ல அனுமதிக்க பட மாட்டீர்கள். பலர் இதை விமான விதிமுறை என கருத்திக் கொள்வார்கள். ஆனால் இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கிறது அதைப்பற்றி காணலாம் வாருங்கள்.
விமானங்களில் பயணம் செய்த பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசை ஜன்னல் பக்கத்தில் சீட்டில் அமர்ந்து நாம் செல்ல வேண்டும் என்பது தான். அப்பொழுதுதான் விமானத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களை எல்லாம் நம்மால் பார்க்க முடியும். பலருக்கு இது வாழ்நாள் கனவாககூட இருக்கும்.

ஆனால் விமானங்களில் நீங்கள் பயணிக்கும் போது முழு விமானமும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டால் நீங்கள் முன்பதிவு செய்து இருக்கையில் தான் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் பயணம் செய்யும் விமானம் முழுமையாக முன்பதிவு செய்யப்படவில்லை என்றால் நீங்கள் வேறு சீட்டில் அமர்ந்து பயணம் செய்யலாம்.
ஆனால் நீங்கள் பயணிக்கும் விமானத்தில் பெரும்பாலான சீட்டுகள் காலியாக இருந்தால் விமானிகள் நீங்கள் முன் பதிவு செய்த சீட்டில் மட்டுமே அமர்ந்து கொள்ளும்படி உங்களுக்கு அறிவுறுத்துவார்கள். நீங்கள் காலியாக தானே இருக்கிறது என வேறு சீட்டுக்கு சென்று அமர உங்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் வெயிட் மட்டும் பேலன்ஸிங் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
விமானிகள் விமானத்தை டேக் ஆப் செய்யும்போது விமானம் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும்? எவ்வளவு வேகத்தில் செல்லும்போது எவ்வளவு தூரம் விமானத்தையும் முன் பகுதியை தூக்கி விமானத்தை டேக் ஆப் செய்ய வேண்டும்? என ஒரு கணக்கு இருக்கிறது அந்த கணக்கீடை விமானிகள் விமானத்தில் ஏறியவுடன் செய்யத் துவங்குவார்கள். இந்த கணக்கீடுக்கு சிஜி எனப்படும் ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்பது உதவுகிறது.
இந்த சிஜி தொழில்நுட்பத்தின் படி அந்த விமானத்தில் சீட்டுகளில் எத்தனை பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள் எந்தெந்த சீட்டுகளில் எல்லாம் காலியாக இருக்கிறது இந்த தகவலை வைத்து அதற்கு தகுந்தார் போல் டேக் ஆப் செய்ய தரவுகளை தயார் செய்து கொடுக்கும். இந்த விபரங்கள் எல்லாம் புக்கிங் செய்த தரவுகளிலிருந்து எடுக்கப்படும். இதனால் முன்பதிவு செய்யப்பட்ட சீட்டுகளில் பயணிகள் அமர்ந்து இருந்தால் மட்டுமே இந்த தரவுகள் எல்லாம் சரியாக இருக்கும்.
முன்பதிவு செய்த பயணிகள் வேறு சீட்டில் அமர்ந்து விட்டால் இந்த தரவுகள் மாறிவிட வாய்ப்புள்ளது. ஓரிரு பயணிகள் மாறி அமர்வதனால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் பாதிக்கும் அதிகமான சீட்டுகள் காலியாக இருக்கும் நிலையில் பயணிகள் வேறு வேறு சீட்டிற்கு மாறிவிட்டால் இந்த தரவுகள் மாறி போக வாய்ப்புள்ளது. இதனால் விமானம் விபத்தில் சிக்ககூட வாய்ப்பு உள்ளது.
இதனால் பெரும்பாலும் காலியாக செல்லும் விமானங்களில் பயணிகள் டேக் ஆப் செய்யும் வரை அவர்கள் முன்பதிவு செய்த சீட்டுகளிலேயே அமர அறிவுறுத்தப்படுகிறார்கள். டேக் ஆப் செய்த பின்பு அவர்கள் வேறு சீட்டுக்கு மாறிக்கொள்ள அனுமதி உள்ளது. அதை அவர்கள் விமான பணியில் இருக்கும் ஊழியர்களிடம் அனுமதி பெற்று மாறிக்கொள்ள முடியும்.
இந்த பிரச்சனை என்பது விமானம் டேக்ஆஃப் ஆகும்போது மட்டும் தான். விமானம் லேண்ட் ஆகும் போது இந்த பிரச்சனை எதுவும் இருக்காது. பல நேரங்களில் விமானங்கள் காலியாக செல்லும் போது இப்படியாக பயணிகள் சீட் மாதிரி அமர அனுமதி கேட்கும் போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். இதை விமான நிறுவனங்கள் அதிக கட்டுப்பாடுடன் இருப்பதாக சிலர் கருதி கொள்வார்கள் ஆனால் அதற்குப் பின்னால் இப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.
நீங்கள் அடுத்தமுறை விமானத்தில் பயணம் செய்யும்போது பாதி விமானத்திற்கு மேல் காலியாக இருந்தால் நீங்கள் உங்கள் இருக்கையிலேயே அமருங்கள். உங்கள் இருக்கையில் இருந்து வேறு இருக்கைக்கு மாறி அமர வேண்டாம். விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு நீங்கள் வேறு இருக்கையில் அமர்வதற்கான அனுமதியை கோருங்கள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். விமானம் காலியாக இருந்தால் இயற்கையை உங்களுக்கு தருவதற்கு விமான நிறுவனம் எந்த விதத்திலும் யோசிக்காதே பாதுகாப்பு மட்டுமே யோசிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் பயணம் செய்யும்போது இப்படியான ஏகப்பட்ட அறிவியல் சிக்கல்கள் இருக்கிறதே விமானம் என்பது பல்வேறு அறிவியல் கணக்கீடுகளை வைத்து செயல்படும் ஒரு போக்குவரத்து வாகனமாகும். இது அபாயங்கள் நிறைந்தது என்பதால் இதில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








