விமானங்களில் இந்த விஷயம் சின்னதா தான் இருக்கும்! பெருசா வைக்கவே மாட்டாங்க... ஏன் தெரியுமா?
நாம் விமானத்தில் பயணிக்கும் போது ஜன்னல் ஓர சீட்டுகளை விரும்பி வாங்கி அதில் அமர்ந்து பயணம் செய்ய விரும்புவோம். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டே பயணிப்பது என்பது புதுவிதமான அனுபவத்தை தரும். ஆனால் விமானங்களில் ஜன்னல்கள் என்பது சிறியதாக தான் இருக்கும். பஸ் ரயில்கள் போல பெரிதாக இருக்காது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கிறது அதைப் பற்றி காண்போம்.
நாம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசை இருப்போம். சிலர் பயணத்து இருப்பார்கள். சிலர் அந்த கனவை நிறைவேற்றுவதற்காக பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படியாக விமானத்தில் பயணித்த பலருக்கும் தெரியும் விமானத்தில் ஜன்னல் பகுதி என்பது சிறிதாக தான் இருக்கும் என்று.

நான் விமானத்தை எப்படி வெளியிலிருந்து பார்க்கிறோமோ அதே போல தான் உள்ளிருந்தும் ஜன்னல் பகுதி சிறிதாக தான் இருக்கும். ஒவ்வொரு சீட்டுக்கு அடியிலேயும் விமானத்தின் ஜன்னல் பகுதி நீள் வட்ட வடிவில் இருக்கும். ஒவ்வொரு சீட்டிற்கும் அருகே ஜன்னல்கள் என்பது இருக்கும். முன்பகுதியில் பைலட்டுகளுக்கு தெரியும் வகையில் விண்ட் ஸ்கிரீன் இருக்கும்
இது தவிர வேறு எந்த விதமான கண்ணாடிகளும் நீங்கள் விமானத்தில் பார்க்க முடியாது. விமானத்திலிருந்து வெளியே பார்ப்பது பலருக்கும் விருப்பமான விஷயம் என்பதால் விமான தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய ஜன்னல்களை வடிவமைப்பதில்லை. பெரிய ஜனங்களை வடிவமைத்தால் அதற்கு ஏற்றார் போல் டிக்கெட்டுகளை வசூல் செய்ய முடியும் என்றாலும் அதை விமான தயாரிப்பு நிறுவனங்கள் செய்வதில்லை.

விமானங்களில் பெரிய ஜன்னல்களை பொருத்துவதால் வியூ மட்டும் அல்லாமல் வெளியில் இருந்து வெளிச்சமும் விமானத்திற்கு உள்ளே நன்றாக கிடைக்கும். ஆனால் இது எல்லாம் தவிர்த்துவிட்டு சிறிய ரக ஜன்னல்களை மட்டுமே பொருத்துகிறார்கள். இதற்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. பலருக்கும் இப்படி ஒரு காரணம் இருப்பதை தெரியாது
பொதுவாக விமானம் என்பது ஆகாயத்தில் பறக்க வேண்டிய வாகனம் என்பதால் அதில் பாதுகாப்பு என்பது மிக அவசியமாக இருக்கிறது. அது பல்வேறு விதமான வெப்ப நிலைகள், காற்று மண்டலங்கள், மற்றும் பல்வேறு விதமான வானிலைகளை கடந்து செல்ல வேண்டிய வாகனமாக இருப்பதால் விமானங்களின் பாதுகாப்பு மிக முக்கியமாக இருக்கிறது.
விமானங்களில் இது போன்ற ஜன்னல்கள் அமைப்பது என்பது இந்த பாதுகாப்பை குறைப்பதற்கான ஒரு விஷயமாக மாறிவிடுகிறது. கண்ணாடி மூலம் ஜன்னல்கள் அமைத்தால் விமானத்தின் அடிப்படை கட்டமைப்பு பாதுகாப்பில்லாத ஒரு விஷயமாக மாறிவிடும். அதனால் எல்லா சூழ்நிலைகளிலும் இந்த ஜன்னல்களால் தாக்கு பிடிக்க முடியாது. அதிக வெப்பம், அதிக காற்று, அதிக குளிர் வரும்போது இந்த கண்ணாடி ஜன்னல்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது
இதன் காரணமாக தான் விமானங்களில் ஜன்னல்களை பெரிய அளவில் வைப்பதை விமான தயாரிப்பு நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றனர். சிறிய அளவில் இருக்கும் ஜன்னல்கள் கூட வெளியே நடக்கும் விஷயங்களை உள்ளே இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக விமானிகளுக்கு இன்ஜினை நேரடியாக பார்ப்பதற்கு இந்த ஜன்னல்கள் உதவுகின்றன.
இதன் காரணமாக தான் விமானங்களில் ஜன்னல்களை பொருத்தப்படுகிறது. மற்றபடி விமானங்களில் ஜன்னல் என்பது ஒரு பாதுகாப்பு குறைவான ஒரு விஷயம் தான். இருந்தாலும் தற்போது விமானங்களில் உள்ள ஜன்னல்கள் சிறிய அளவில் இருப்பதால் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த படி அதிக செலவு செய்து இந்த ஜன்னல்களை வடிவமைத்து வருகின்றனர். பெரிய அளவில் பாதுகாப்பான ஜன்னல்களை அமைக்க அதிக அளவில் பொருட்செலவு தேவைப்படும்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் ஜன்னல் என்பது பயணிகளுக்கு பிடித்தமான விஷயம் என்றாலும் விமானத்தை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய தலைவலியான விஷயமாக தான் இருக்கிறது. இருந்தாலும் விமானத்தின் பாதுகாப்பிற்காக ஜன்னல்களை சிறிதாக வடிவமைத்து இருக்கிறார்கள். இதனால் விமானங்கள் எந்த காலத்திலும் இனி பெரிய ஜன்னல்கள் உடன் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை.


Click it and Unblock the Notifications








