நல்ல மைலேஜ் வேணும்ன்னு விமான நிறுவனங்கள் இப்படிப்பட்ட வேலையெல்லாம் கூட பாக்குறாங்களா?
விமான நிறுவனங்கள் எல்லாம் நல்ல மைலேஜ் வேண்டும் என விமானச் செயல்பாட்டில் ஒரு முக்கியமான விஷயத்தை மாற்றியுள்ளனர். ஒரு சின்ன மாற்றம் பெரிய அளவில் அவர்களுக்கு உதவியுள்ளது. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அந்நிறுவனங்கள் சேமித்துள்ளன. இது குறித்த முழுமையான தெளிவான விபரங்களைக் காணலாம்.

போக்குவரத்து வசதிகளிலேயே மிக வித்தியாசமானது விமானப் போக்குவரத்து தான். ஒரு விமானம் பறப்பதற்கு ஏராளமான தொழிற்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் அதிகச் செலவும் ஆகிறது. இவ்வளவு செய்தும் ஏன் ஒரு விமானம் ஏன் பறக்க வேண்டும் என்றால் இந்த உலகிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக செல்லும் ஒரு வாகனம் என்றால் அது விமானம் தான்.

பல ஆயிரம் கி.மீ தொலைவையும் விமானங்கள் சில மணி நேரங்களில் கடந்து சென்று விடுகிறது. இந்த வேகத்திற்காகத் தான் பலம் விமானப் பயணங்களைத் தேர்வு செய்கின்றனர். ஒரு விமானம் டேக் ஆஃப்
ஆனதும் அது வானில் வேகமாக பயணிக்கும் உள்ளிருந்து பார்க்கும் பலருக்கு விமானம் மெதுவாக செல்வது போலத் தான் இருக்கும்.

ஆனால் உண்மையில் தரையில் உள்ளத் தூரத்தைக் கணக்கிட்ட விரைவாகவே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தைக் கடந்துவிடும். இது தான் விமானத்தை பற்றி நாம் அறிந்தது. ஆனால் தற்போது உள்ள விமானங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டிலிருந்த விமானங்களை விட மெதுவாக செல்கிறது எனச் சொன்னால் நம்புவீர்களா?

அது தான் உண்மை விமான நிறுவனங்கள் எல்லாம் கடந்த 20 ஆண்டுகளில் தங்களின் விமானத்தின் வேகத்தை மெல்ல மெல்லக் குறைத்து விட்டனர். தற்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு விமானம் என்ன வேகத்தில் பறந்ததோ அதை விடத் தற்போது குறைந்த வேகத்தில் தான் பறந்து வருகிறது.

இதனால் விமானங்கள் முன்பைவிட இலக்கை சற்று தாமதமாகத் தான் சென்றடைகிறது.ஆம் தற்போது விமானங்கள் தன் முழு வேகத்தில் பயணிப்பதில்லை. பலருக்கு இதைக் கேட்டதும் சந்தேகம் வரும் ஏன் விமானங்கள் வேகமாக பயணிப்பதில்லை. விரைவாக பயணித்தால் இன்னும் விரைவாக இலக்கை சென்றடையலாமே எனத் தோன்றும்.

சிலர் விமானம் வேகம் குறைவாக பயணிப்பதற்குப் பாதுகாப்பு காரணமாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல விமானங்கள் வேகம் குறைவாக பயணிப்பதற்குக் காரணம் பெட்ரோல் செலவுகளை மிச்சப்படுத்தத்தான். அட ஆமாங்க உண்மையில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்த விமானங்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

1960 களில் போயீங் 707 ரக விமானங்கள் 525 நாட்ஸ் வேகத்தில் பயணித்தது. தற்போது அதே ரக விமானங்கள் 510 நாட்ஸ் வேகத்தில் தான் பணிக்கிறது. 15 நாட்ஸ் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ஏகப்பட்ட எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என விமான நிறுவனங்கள் கருதுகிறது. இதனால் இப்படியாக வேகத்தைக் குறைத்துள்ளது.

கடந்த 2008ம்
ஆண்டு ஜெட் ப்ளு நிறுவனம் தனது விமானங்களின் வேகத்தைச் சற்று குறைத்து ஒவ்வொரு விமானத்திற்குள் பயண நேரத்தை வெறும் 2 நிமிடங்கள் அதிகரித்ததன் மூலம் அந்நிறுவனம் ஆண்டிற்கு 13.6 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான எரிபொருளை மிச்சப்படுத்தியுள்ளது.

இதே போல நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பாரீஸிலிருந்து மின்னேபோலீஸ் பகுதிக்குச் செல்லும் விமானத்தில் ஒரு முறைக்குப் பறக்கும் நேரத்தை 8 நிமிடங்கள் அதிகப்படுத்துவது மூலம் 162 கேலன் எரிபொருளை மிச்சப்படுத்துகிறது அதாவது ஒரு முறைக்கு 535 அமெரிக்க டாலர் செலவு மிச்சமாகியுள்ளது.

இதனால் தற்போது உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள் தங்கள் விமானத்தின் சிறப்பான மைலேஜ் தரும் வேகம் எது என்பதை அறிந்து கொண்ட அந்த வேகத்தில் மட்டுமே விமானத்தை இயக்குகின்றனர். அதை விட அதிக வேகத்தில் விமானம் செல்லும் என்றாலும் எரிபொருள் செலவை மனதில் கொண்டு விமானத்தின் வேகத்தை அதிகப்படுத்துவதில்லை.

இது மட்டுமல்ல விமான நிறுவனங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் ரூட்டில் எந்த ரூட்டில் சென்றால் எரிபொருள் செலவு குறைவு என்பதையும் கணக்கிட்டு அந்த ரூட்டையே எப்பொழுதும் தாங்கள் பறப்பதற்கான ரூட்டாக தேர்வு செய்கின்றனர். பலருக்கு இந்தத் தகவல் தெரிவதில்லை.


Click it and Unblock the Notifications








