ஊபருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க..!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட், கால் டாக்ஸி சேவை நிறுவனமான ஊபருடன் இணைந்திருக்கின்றது. இதற்கான காரணம் மற்றும் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

கொரோனா பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு நாடு முழவதும் நிலவி வருகின்றது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. அரசு பொது போக்குவரத்து வாகனங்கள் மட்டுமின்றி தனியார் வாடகை வாகனங்களின் போக்குவரத்திற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால், கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

இத்தகையோருக்கு உதவியளிக்கும் வதமாக டெல்லி அரசு, வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ. 5 ஆயிரம் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், தமிழகம் போன்ற சில மாநிலங்களில் மிக சொற்பளவிலான நிதியுதவியே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, போக்குவரத்துத்துறைக்கு நிகழ்ந்திருக்கும் இதே நிலைதான் டூர் டெலிவரி சேவைக்கும் ஏற்பட்டுள்ளது.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

ஆனால், இந்த சேவையை ஊபர் நிறுவனத்துடன் இணைந்து ஃப்ளிப்காட் நிறுவனம் மீண்டும் புணரமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுவும், தேசியளவிலான ஊரடங்கு உத்தரவு நிலுவையில் இருக்கின்ற நிலையிலேயே இத்திட்டத்தை செயல்பாட்டுக் கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

இது எப்படி சாத்தியம்? என்று தானே கேட்கிறீங்க, ஆம் இது சாத்தியம்தான். ஏனென்றால், அரசு அத்தியாவசிய பொருட்களின் டெலிவரிக்கு சில வழிகாட்டுதல்களுடன் அனுமதி வழங்கி வருகன்றது. இதன்படி, சில ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அன்றாட அத்தியாவசிய பொருட்களை டூர் டெலிவரி செய்து வருகின்றன.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

அதாவது மருத்துவ பொருட்கள், காய்-கறி போன்ற உணவு பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்றவற்றை அவை டெலிவரி செய்து வருகின்றன.

இந்நிலையிலேயே ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஊபர் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களை அதன் வாடிக்கையாளர்களுக் வழங்க திட்டமிட்டுள்ளது.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

ஆனால், இந்த சேவையை நாட்டின் சில நகரங்களில் மட்டுமே செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக, தலைநகர் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

இந்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே ஃப்ளிப்கார்ட் அத்தியாவசிய பொருட்களை டூர் டெலிவிரி செய்ய இருக்கின்றது. தற்போது கொரோனா வைரசின் பரவலின் காரணமாக பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால், ஊபர் கால் டாக்ஸி சேவையைப் பயன்படுத்தி உணவு மற்றும் அன்றாட அவசிய பொருட்களை அது டெலிவரி செய்ய இருக்கின்றது.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

இந்த சிறப்பு சேவைக்காக எந்தவொரு கூடுதல் கட்டணத்தையும் ஊபர் வசூலிக்காது என அறவித்துள்ளது. கேஷ் ஆன் டெலிவரியாக இருப்பின் பில் தொகை எவ்வளவோ அதை மட்டுமே வசூலிக்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. துவே ஆன்லைன் பேமெண்டாக இருந்தால் ஆர்டர் செய்யப்பட்ட பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நன்றியை மட்டும் கூறிவிட்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

மேலும், இந்த டெலிவரி சேவையின் போது தங்களுக்கும், தங்களை நாடும் வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பணியாளர்கள் முகமூடி, கையுறை மற்றும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் தொற்று ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்கு பரவுவது முழுமையாக தவிர்க்கப்படும்.

பருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க!

ஃப்ளிப்கார்ட் மற்றும் ஊபர் இணைவில் மேற்கொள்ளப்படும் இந்த சேவை உடல் நலம் குன்றிய மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், யாரெல்லாம் வெளியே சென்று பொருட்களை வாங்க தயங்கி வருகின்றார்களோ அவர்கக்கும் இந்த சேவை அதிகளவில் பயன்பாட்டை வழங்கும் என அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Flipkart Partners With Uber To Deliver Essential Products. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X