டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!!!

பிளிப்கார்ட் நிறுவனம் அதன் டெலிவரி வாகனங்களில் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முன்னணி நிறுவங்களாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இ-காமர்ஸில் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும், இந்த இரு நிறுவனங்களே இந்தியாவின் பிரபலமான நிறுவனங்களாக இருக்கின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், அவர்களின் வீட்டின் வாசலுக்கே கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகின்றன.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் அதன் டெலிவரி வாகனத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்நிறுவனம் பயன்படுத்தி வருகம் டெலிவரி வாகனங்களில், 40 சதவிகிதம் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக் கொண்டு வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகயை வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யவிருப்பதாக அது இலக்கு நிர்ணயித்துள்ளது.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்தியாவில் அண்மைக் காலங்களாக, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களைப் பயன்பாட்டுக் கொண்டு வரும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இந்திய அரசு பல அதிரடி திட்டங்களையும், அறிவிப்புகளையும் சமீபகாலமாக வெளியிட்டு வருகின்றது.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

அந்தவகையில், சமீபத்தில் வர்த்தக ரீதியாக இயங்கும் வாகனங்கள், அதாவது கால் டாக்ஸி, பார்சல் சர்வீஸ், டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள், அதன் வாகனங்களை வருகின்ற 2025ம் ஆண்டிற்குள் 40 சதவிகிதம் மின் வாகனங்களாக மாற்ற உத்தரவிடப்பட்டது. அதிலும், மிக முக்கியமாக, நாட்டின் முன்னணி கால் டாக்ஸி நிறுவனங்களான ஓலா மற்றும் ஊபர் ஆகிய இரு நிறுவனங்களும் இதை நடைமுறையில் கொண்டு உத்தரவிடப்பட்டது.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம், சுற்றுபுறச்சூழலைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதன் டெலிவரி வாகனங்களை மின்சார மயமாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மின் வானங்களுக்கு மாறுவதன் மூலம், தற்போது தனது டெலிவரி வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு குறைக்கப்படும் என்ற நோக்கிலும் இந்த முயற்சியை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

மேலும், இதனால் ஏற்படும் செலவீணங்களும் தவிர்க்கப்பட உள்ளது. இத்துடன், மின் வாகனங்களுக்கு மாறுவதனால், தன் நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் மாசு குறையும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. பிளிப்கார்டின் இந்த முயற்சியானது, சுற்றுப்புச்சூழல் பாதுகாப்பு மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களையும் மின்வாகன பயன்பாட்டிற்கு ஊக்குவிக்கும் வகையில், முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

பிளிப்கார்ட் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சோதனையோட்டமாக, டெல்லியில் 10 மின்சார வேன்கள், ஹைதராபாத்திரத்தில் 8 மின்சார வாகனங்கள் மற்றும் பெங்களூருவில் 30 மின்சார இருசக்கர வாகனங்கள் என குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தி வந்தது. இதில், நல்ல பலன் எட்டியதை அடுத்து, அது தற்போது பயன்படுத்திவரும் டெலிவரி வாகனங்களில் 40 சதவிகிதம் மின் வாகனங்களை திணிக்க முடிவு செய்துள்ளது.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்த பரிசோதனை காலத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் ஓர் பொதுவான பிரச்னையைச் சந்தித்துள்ளது. அது மின்வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதில்தான், சிக்கலைச் சந்தித்துள்ளது. இதன்காரணமாக, நாட்டில் இயங்கும், பிளிப்கார்ட் நிறுவனத்தின் அனைத்து டெலிவரி ஹப்பிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதியை ஏற்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த முயற்சியால், எரிபொருளுக்காக செய்யப்பட்ட பெரும் தொகை சேமிப்புக்குள்ளாக இருக்கின்றது.

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம்... தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

மேலும், அதன் வாகனங்களால் ஏற்படும் மாசு 50 சதவீதம் குறைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. பிளிப்கார்டின் இந்த முதற்கட்ட பணி வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக 160க்கும் மேற்பட்ட மின்சார வேன்கள் வாங்கப்பட உள்ளன. இவை நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Flipkart To Replace 40% Of Its Delivery Fleet With Electric Vehicles By March 2020. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X