பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
ரயில் ஒன்று மின்சாரம் இல்லாமல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் (hydrogen fuel cell)லில் 3 ஆயிரம் கிமீ ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதன் விளைவாக அந்த ரயில் தற்போது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றது.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ரயில் உற்பத்தி நிறுவனம் ஸ்டாட்லர் (Stadler). இந்த நிறுவனம் ஃப்ளர்ட் எச்2 (Flirt H2) எனும் புதுமுக ரயில் மாடலை உருவாக்கி இருக்கின்றது. வழக்கமான ரயில்களில் இருந்து இந்த ரயில் பலநிலைகளில் மாறுபட்டுக் காட்சியளிக்கிறது. மிக முக்கியமாக இது ஓர் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் ரயில் ஆகும்.

ஒரே ஒரு முறை இதில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை முழுமையாக நிரப்பினால் சுமார் 1,741 மைல் (2,803 கிமீ) தூரம் வரை அது நிற்காமல் டிராவல் செய்யும். இந்த திறனையே சமீபத்தில் ஸ்டாட்ளர் சோதனைச் செய்து பார்த்தது. இந்த சோதனையில் அது தற்போது வெற்றியும் கண்டிருக்கின்றது.
மேலும், இது ஓர் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்பதால் அந்த ஃப்ளிர்ட் எச்2 ரயிலின் இந்த சாதனை உலக கின்னஸ் சாதனைச் (Guinness World Records) சான்று அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. சுமார் 46 மணி நேரம் இந்த ரயில் நிற்காமல் இயங்கி இருக்கின்றது.

அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அமைந்துள்ள சோதனை டிராக்கில் வைத்தே இந்த ரயில் சாதனை சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கின்றது. மார்ச் 20ம் தேதி அன்றே ரயிலின் சோதனையோட்ட பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, மறு நாள் வரை நிற்காமல் அந்த ரயில் இயங்கி இருக்கின்றது.
குறிப்பாக மீண்டும் ஹைட்ரஜன் நிரப்பப்படாமலேயே அது இயங்கி இருக்கின்றது. இந்த திறன் காரணமாக ரயிலுக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டு இருக்கின்றது. ரயிலின் ஹைட்ரஜன் ஃப்வூல் செல் சிலிண்டரை நிரப்ப வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகியிருக்கின்றது. அவ்வாறு ஒரே ஒரு முறை நிரப்பிய நிலையிலேயே சுமார் 2,803 கிமீ தூரம் அந்த ரயில் இயங்கி இருக்கின்றது.

இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இதேபோல் ஓர் சாதனையை கோரடியா ஐலின்ட் (Coradia iLint) எனும் ஹைட்ரஜன் பவர்டு ரயில் செய்திருந்தது. இது ஓர் ஜெர்மனைச் சேர்ந்த அல்ஸ்டாம் எனும் நிறுவனமே செய்திருந்தது. அதுவும் மறுமுறை எரிபொருளை நிரப்பாமல் சுமார் 1,175 கிமீ தூரம் வரை இயங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் உலக சாதனையையே புதிய ஸ்டாட்ளர் ஃப்ளிர்டு எச்2 முறியடித்து இருக்கின்றது. ஸ்டாட்ளர் ஃப்ளிர்டு எச்2 ஓர் பன்முக கோச்களைக் கொண்ட பயணிகள் ரயில் (multi-car passenger train) ஆகும். இதில், என்ன அளவிலான ஃப்யூவல் செல் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரத்தை ஸ்டாட்ளர் அறிவிக்கவில்லை.
அதேவேளையில், இந்த ரயில்கள் விரைவில் சேன் பெர்னேடினோ கவுண்டி டிரான்ஸ்போர்ட் கழகத்திற்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே இந்த நிகழ்வு அரங்கேறிவிடும் என தெரிகின்றது. இந்த ரயிலில் 12 ஃப்யூல் செல்கள் ஒவ்வொன்றும் 100kW திறன் வெளியேற்றக் கூடியதே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிகப் பெரிய வலையமைப்பைக் கொண்டதாக இந்தியன் ரயில்வேஸ் இருக்கின்றது. இப்போதே, நமது இந்தியன் ரயில்வேஸ் 100 சதவீதம் மின்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. விரைவில் இந்த இலக்கை அது எட்டவும் இருக்கின்றது. எனவே, விரைவில் இதுபோன்ற ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் வசதிக் கொண்ட ரயில்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு இந்தியா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









