இந்த ஏசி ஸ்லீப்பர் பஸ் டிக்கெட் கட்டணம் வெறும் 99 ரூபாதானா! மத்த ஆம்னி பஸ்கள் பொழப்புல மண்ண அள்ளி போட போறாங்க!

ஜெர்மனியை (Germany) சேர்ந்த நிறுவனங்களில் ஒன்று ஃப்ளிக்ஸ் பஸ் (FlixBus). இந்த நிறுவனம் ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பஸ் சேவையை வழங்கி வருகிறது. குறைவான கட்டணத்தில் பஸ் சேவையை வழங்குவதுதான், ஃப்ளிக்ஸ் பஸ் நிறுவனத்தின் சிறப்பம்சம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரையில், வட இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான பஸ் நிறுவனங்களில் ஒன்றாக ஃப்ளிக்ஸ் பஸ் திகழ்கிறது. ஆனால் தென் இந்தியாவில் இந்த நிறுவனத்தின் சேவை கிடையாது.

ஆனால் இந்த குறை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம், ஃப்ளிக்ஸ் பஸ் நிறுவனம் தற்போது தென் இந்திய சந்தையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. தென் இந்தியாவில் முதற்கட்டமாக பெங்களூர் (Bangalore) நகரை ஃப்ளிக்ஸ் பஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இங்கிருந்து சென்னை (Chennai) மற்றும் ஐதராபாத் (Hyderabad) ஆகிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

FlixBus

பெங்களூரில் இருந்து ஃப்ளிக்ஸ் பஸ் நிறுவனத்தின் சேவைகள், வரும் செப்டம்பர் 10ம் (September 10) தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. கூடிய விரைவில் கோவை (Coimbatore), மதுரை (Madurai), திருப்பதி (Tirupati), விஜயவாடா (Vijayawada) மற்றும் பெலகாவி (Belagavi) ஆகிய நகரங்களுக்கும் சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

ஃப்ளிக்ஸ் பஸ் நிறுவனம் ஏசி ஸ்லீப்பர் (AC Sleeper) சேவைகளை பயணிகளுக்கு வழங்குகிறது. இந்த பஸ்களில் செல்போன் சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் பஸ் எங்கே வந்து கொண்டுள்ளது? என்பதை 'டிராக்' செய்வதற்கான வசதியும், பயணிகளுக்கு வழங்கப்படும்.

FlixBus Enters South India

சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக, பிஎஸ்6 இன்ஜின்கள் மூலம், ஃப்ளிக்ஸ் பஸ் நிறுவனத்தின் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (Electronic Stability Control - ESC) மற்றும் 2 பாயிண்ட் சீட் பெல்ட்கள் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டிருக்கும்.

தென் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததை மிக பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வழித்தடங்களில், வெறும் 99 ரூபாய் கட்டணத்தில் (Ticket Fare), ஃப்ளிக்ஸ் பஸ் நிறுவனம் பயணிகளுக்கு டிக்கெட்களை வழங்குகிறது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

செப்டம்பர் 3ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15ம் தேதி வரை பஸ்களை முன்பதிவு செய்து, செப்டம்பர் 10ம் தேதியில் இருந்து அக்டோபர் 6ம் தேதி வரை பயணம் செய்ய கூடியவர்கள், இந்த சலுகை கட்டணத்தை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால் இது குறிப்பிட்ட கால சலுகை (Limited-time Offer) ஆகும். எனவே இந்த சலுகையில் கூடிய விரைவில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூர் நகரில் சமீபத்தில்தான் வீர மஹாசாம்ராட் (Veera Mahasamrat) என்ற எலெக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் பஸ்ஸின் பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். இதன் மூலம் உலகிலேயே மிகவும் வேகமாக சார்ஜ் ஆக கூடிய எலெக்ட்ரிக் பஸ் என்ற பெருமைய இது பெற்றுள்ளது.

இந்த வரிசையில் தற்போது குறைவான கட்டணத்தில் ஃப்ளிக்ஸ் பஸ் சேவையை பெங்களூர் நகரம் பெற்றுள்ளது. இந்த ஃப்ளிக்ஸ் பஸ் சேவையானது, பெங்களூர் மற்றும் அங்கிருந்து சேவை வழங்கப்படவுள்ள சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களை சேர்ந்த பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 13:30 [IST]
English summary
Flixbus enters south india all you need to know
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+