தங்க நிறத்தில் தகதகக்கும் புகாட்டி வேரோன்!
ரசிக பட்டாளத்தையும், மீடியாவையும் தங்கள் பக்கம் இழுப்பதற்காக தங்களுக்கென பிரத்யேக அடையாளம் வைத்துக் கொள்வது பாப் பாடகர்களின் வழக்கம். அதிலும் குறிப்பாக, பல பாப் பாடகர்கள் எளிதான யுக்தியாக தங்களது கார்களை பிரத்யேக வண்ணங்களில் வாங்குகின்றனர்.
இதற்கு விதி விலக்கு இல்லாத வகையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகரான ஃப்ளோ ரிடா என்று அன்போடு அழைக்கப்படும் ட்ராமர் தில்லார்டு தனது வெள்ளை நிற புகாட்டி வேரோன் காரை தங்க நிற பூச்சுடன் மாற்றியுள்ளார். தங்க நிற முலாம் பூசப்பட்டிருக்கும் இந்த காரின் வீல்கள் மட்டும் 24 காரட் தங்கத்தில் முலாம் பூசப்பட்டிருக்கிறது. மீத பகுதிகள் அனைத்தும் தங்க நிற பூச்சு மட்டுமே கொண்டது.
பல நட்சத்திரங்களின் கார்களை இதுபோன்ற முலாம் பூசிக் கொடுத்த மெட்ரோ ராப்ஸ் என்ற நிறுவனம்தான் இந்த காரையும் தங்க நிற வண்ணத்தை பூசிக் கொடுத்துள்ளது. இந்த காருக்கு ப்ளோ ரிடா செல்லமாக கோல்டு காட்டி என்று பெயரிடப்பட்டுள்ளார். பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வகையில் தங்க நிறத்தில் தகதகக்கும் அந்த காரை ஸ்லைடரில் காணலாம்.














Click it and Unblock the Notifications








