ரூ.16 கோடிக்கு புதிய காரை வாங்கிய உலகின் பணக்கார விளையாட்டு வீரர் மேவெதர்!
உலகின் பணக்கார விளையாட்டு வீரரான ஃப்ளாயிட் மேவெதர் கார், பைக்குகள் மீது தீராத பற்றுக் கொண்டவர் என்பது தெரிந்த விஷயம்தான். ஒரு புகாட்டி வாங்குவதற்கே பல பெரும் கோடீஸ்வரர்கள் அல்லாடும் நிலையில், இவர் பல புகாட்டி சூப்பர் கார்களை தனது கராஜில் வரிசை கட்டி நிறுத்தி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், இவரின் பிரம்மாண்ட கார் கராஜில் அடுத்து மிகவும் பிரத்யேகமான கார் ஒன்று இடம்பெற இருக்கிறது. ரூ.17 கோடி மதிப்பு கொண்ட அந்த காரை பற்றிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பிரபல டிசைனர்
தற்போது மஹிந்திரா வசம் இருக்கும் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா டிசைன் நிறுவனத்திற்கு பல கார்களை டிசைன் செய்து கொடுத்த ஒகுயமாதான் இந்த காரை டிசைன் செய்து கொடுத்திருக்கிறார்.

பிரபலம்
ஜப்பானியரான ஒகுயமா ஃபெராரி நிறுவனத்திற்கு பல மாடல்களை டிசைன் செய்து கொடுத்தவர். ஃபெராரி என்ஸோ, ஃபெராரி 599 மற்றும் ஃபெராரி பி4/5 உள்ளிட்ட கார்களை டிசைன் செய்து கொடுத்தவர் இவர்தான். இந்த நிலையில், மிகவும் பிரத்யேகமான மாடல் ஒன்றை தற்போது வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

மாடல் விபரம்
Code57 என்ற பெயரில் ஒகுயமா டிசைன் செய்து உருவாக்கப்பட்டிருக்கும் காரையே மேவெதர் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.16.80 கோடி விலையில் இந்த Code57 காரை வாங்கியிருக்கிறார்.

ஃபெராரி அடிச்சட்டம்
ஃபெராரி 599ஜிடிபி கார் மாடலின் சேஸீயில்தான் இந்த Code57 காரை தயாரித்துள்ளனர். ஆனால், டிசைன் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. ஒரேயொரு ஒற்றுமை என்னவெனில், ஃபெராரி கார்களின் ஸ்பெஷலாக குறிப்பிடப்படும் அந்த சிவப்பு வண்ணம்தான் இந்த காரிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டைல்
இந்த காரை படு ஸ்டைலாக மாற்றியிருக்கிறார் ஒகுயமா. இருக்கை அமைப்பு, விண்ட்ஷீல்டு, முகப்பு போன்றவை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சிசர் டோர் கதவு அமைப்பு கொண்டது.

எஞ்சின்
இந்த காரில் 611 எச்பி பவரை அளிக்க வல்ல 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

சஸ்பென்ஷன்
இந்த காரின் சஸ்பென்ஷன் மற்றும் எஞ்சினை உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்து கொள்ள முடியும் என்று ஒகுயமா தெரிவித்துள்ளார். இந்த மாறுதல்களை ஃபெராரி கார்களை டியூனிங் செய்து தருவதில் புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த டியூனிங் ஸ்பெஷலிஸ்ட் நோவிடெக் ராஸோ மூலமாக செய்து தரப்படும் என்று ஒகுயமா கூறியிருக்கிறார்.

பிரம்மிப்பில் ஆழ்த்தும் பணக்கார விளையாட்டு வீரர் மேவெதரின் மோட்டார் உலகம்!


Click it and Unblock the Notifications