பறக்கும் காருக்கு புக்கிங் குவிந்தது! விலை இவ்வளவு கம்மின்னா ஆளுக்கு ஒன்னு வாங்குவாங்களே!
சீனாவில் நடந்து வரும் ஏர் ஷோ கண்காட்சியில் எக்ஸ்பெங் நிறுவனம் தனது பறக்கும் காரை காட்சிப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தின் பறக்கும் காரை இதுவரை 2000த்திற்கும் அதிகமான நபர்கள் புக்கிங் செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தும் செய்தியாக இருக்கிறது. விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடையப்போகிறது. இன்று எல்லாம் நாம் கார்களை சாலையில் போட்டி வருகிறோம். வருங்காலத்தில் கார்கள் என்றாலே வானில் பறக்கக்கூடிய ஒரு வாகனமாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது டுரோன் டாக்ஸிகள் பறக்கும் கார்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் உள்ள எக்ஸ்பெங்க் என்ற நிறுவனம்தான் பறக்கும் கார்களை தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது சீனாவில் நடந்து வரும் 15-வது சீன சர்வதேச ஏவிஎஸ் மற்றும் ஏரோஸ்பைஸ் கண்காட்சியில் தனது புதிய பறக்கும் காரை காட்சிப்படுத்தியுள்ளது. எக்ஸ்பெங்க் ஏரோஹெட் என்ற நிறுவனத்தின் பெயரில் இந்த பறக்கும் கார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ள இந்த காருக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 2.36 கோடியை நிர்ணயம் செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கிய நிலையில், இதுவரை 2008 வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பறக்கும் காருக்கான ஆர்டரில் இதுவே அதிகபட்ச ஆர்டராக பார்க்கப்படுகிறது.

இந்த பறக்கும் கார்களை போக்குவரத்து, டூரிஸம், ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பமாக நிறுவனங்களில் பயன்படுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் காரின் விலையை பொறுத்தவரை மார்க்கெட்டில் விற்பனையாகும் பிரிமியம் கார்களான மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ, ஜாக்குவார், லேண்ட்ரோவர் போன்ற காஸ்ட்லியான கார்களின் விலையை விட அதிகமாக இருக்கிறது.
இந்த பறக்கும் கார் முற்றிலும் எலெக்ட்ரிக் முறையில் சார்ஜ் செய்து பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இருந்த இடத்திலிருந்து ரன்வே இல்லாமல் நேரடியாக மேலே பறக்கும். வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் தொழிற்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு மல்டி காப்டர் பறக்கும் வாகனமாகும் இதற்காக ஆறு எலெக்ட்ரிக் புரொபலர்களும் இரண்டு எலெக்ட்ரிக் டாக்டெட் பேன்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் உள்ள புரொபலர் மற்றும் பேன்களை இயக்குவதற்காக இந்த வாகனத்தில் மொத்தம் 8 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் எல்லாம் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் காரில் மொத்தம் இரண்டு பேர் பயணம் செய்ய முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து முதல் ஆறு சிறிய தூர பயணத்திற்கு இதை பயன்படுத்த முடியும்.
இதில் உள்ள பேட்டரியை பொருத்தவரை 30 முதல் 80 சதவீதமான பேட்டரியை வெறும் 18 நிமிடத்தில் சார்ஜ் செய்து விடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்து வரும் ஏர் ஷோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சி கடந்த நவம்பர் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது.
இந்த பறக்கும் கார் வரும் 2026ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்காக தீவிரமாக நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. தற்போது நிறுவனம் நடத்தி வரும் ஆலையில் ஆண்டுக்கு பத்தாயிரம் பறக்கும் கார்களை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் சாலையில் போகும் கார்களை விட பறக்கும் கார்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பறக்கும் கார்கள் எல்லாம் டாக்ஸி முறையில் தான் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இது குறித்த அப்டேட்டுகள் அதிகரித்து வந்து கொண்டே இருக்கின்றன. சீன நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









