குறைப்பாங்கனு பார்த்த ரூ. 2 வர விலையை ஏத்த போறாங்களாம்! கலக்கப்படாத எரிபொருள் கலால் வரியை உயர்த்த திட்டம்!
கலக்கப்படாத எரிபொருளின் கலால் வரியை உயர்த்த இருப்பதாக பட்ஜெட் 2022 தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கின்றார். இதன் விளைவாக கலக்கப்படாத எரிபொருளின் விலை உயர இருக்கின்றது. இந்த விலை உயர்வு எப்போதில் இருந்து அமலுக்கு வரும் என்ற முக்கிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசு மிக தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசு ஓர் புதிய அறிவிப்பை 2022 பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

கலக்கப்படாத எரிபொருளின் விலையை உயர்த்தி, கலக்கப்பட்ட எரிபொருளின் விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கலப்படமற்ற எரிபொருள் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 2 வரை கலால் வரியை உயர்த்த இருப்பதாக தெரிவித்தார்.

நடப்பாண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் ஏற்கனவே ஃப்ளெக்ஸ்-ஃப்யூவல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் இயக்கம் தொடங்கிவிட்டன.

இந்த மாதிரியான வாகனங்களின் பயன்பாட்டை நம் இந்திய நாட்டிலும் ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மிக விரைவில் ஃப்ளெக்ஸ்-ஃப்யூவல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களை கட்டாயமாக்கவும் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

பெட்ரோலிய பொருட்களை மிக அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டே ஃப்ளெக்ஸ்-ஃப்யூவலால் இயங்கும் வாகனங்களைக் கட்டாயமாக்கப்பட இருக்கின்றன. பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி செலவு 2016-17 மற்றும் 2020-21 நிதியாண்டுகளில் 39.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனால், 10.6 பில்லியன் டாலர்களிலிருந்து 14.8 பில்லியன் டாலர்களாக செலவு அதிகரித்திருக்கின்றது. இத்தகைய செலவுகளை குறைக்கும் பொருட்டே கலக்கப்படாத எரிபொருட்களின் விலையை உயர்த்த இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. விலை அதிகரித்தால் நிச்சயம் மக்கள் கலப்படமற்ற எரிபொருளின் பயன்பாட்டை தவிர்ப்பர் என அரசு நம்புகின்றது.

கலப்பு எரிபொருள் என்றால் என்ன?
பெட்ரோல், டீசல் ஆகியவற்றையே கலப்பு எரிபொருள் என குறிப்பிடுகின்றனர். இவற்றில், எத்தனால் போன்ற வேறு திரவ பொருட்களை கலப்பதையேகலக்கப்பட்ட எரிபொருள் என்கின்றனர்.

கலக்கப்பட்ட எரிபொருள் பயன்பாட்டின் நன்மைகள் என்ன?
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பதனால் வாகனங்கள் வெளிப்படுத்தும் மாசின் அளவு குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வழக்கமான பெட்ரோலைக் கொண்டு இயங்கும் வாகனங்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவான மாசையே அது வெளியேற்றுமாம்.

கலக்கப்பட்ட எரிபொருளில் ஆக்டேன் மதீப்பு அதிகமாக காணப்படுகின்றது. இது வாகனத்தின் எஞ்ஜினை சிறந்த முறையில் பராமரிக்க உதவும். மேலும், எத்தனாலை உள்-நாட்டிலேயே வைத்து உற்பத்தி செய்ய முடியும். சர்க்கரை கரும்பு கழிவுகளில் இருந்து இது தயாரிக்கப்படும். நம் நாட்டில் அதிகளவில் கரும்புகள் விளைவிக்கப்படுகின்றன.

ஆகையால், விவசாயிகளும் இதன் வாயிலாக பலனடைவர் என கூறப்படுகின்றது. எத்தனால், புளித்த சர்க்கரை அல்லது சர்க்கரை நிறைந்த பயிர்களில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றது. எனவே நிச்சயம் எத்தனால் பயன்பாடு விவசாயிகளின் வருமானத்தை ஊக்குவிக்கும் என நம்பப்படுகின்றது.

இதுமட்டுமின்றி சோளம், அரிசி, சேதமடைந்த உணவு தானியங்கள், கம்பு மற்றும் கோதுமை போன்றவற்றில் இருந்தும் எத்தனால் தயாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அனுமதியளித்திருக்கின்றார். ஆகையால், எதிர்காலத்தில் இந்தியாவில் எத்தனால் அதிகளவில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக பல மடங்கு எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications