வாகன ஓட்டிகளுக்கு 50% தள்ளுபடி கூப்பன்... போலீஸாரின் அசத்தல் திட்டம்...!

சுவிக்கி, சொமேட்டோ ஃபுட் டெலிவரியின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் வழங்கியுள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கின்றது. இதன்காரணமாக, நாட்டின் பொதுச்சாலைகள் பலருக்கு பயங்கரமான அனுபவத்தை வழங்குகின்றது. இதற்கு, வாகன சந்தையில் இந்தியா திறந்தவெளி வர்த்தக மையமாக இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

இந்தியர்கள் பெரும்பாலானோர் வாகன விரும்பிகளாகவே இருக்கின்றனர். இதன்காரணமாக, மக்கள் தொகைக்கு இணையான எண்ணிக்கையை, வாகனங்கள் பெற்று வருகின்றன. இதன்காரணமாகவே இந்தியச் சாலைகள் தற்போது பெரும் சிக்கிலில் தவித்து வருகின்றது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், போக்குவரத்து விதிமீறல்களை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளாலும், இந்தியச் சாலைகள் தினம் தினம் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களிலே இதுபோன்ற இக்கட்டான சூழல் அதிகமாக காணப்படுகின்றது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

ஆகையால், இதுபோன்ற சூழலை தவிர்க்கும் விதமாக, பல்வேறு புதிய விதிமுறைகளையும், சட்டங்களையும் போக்குவரத்துத்துறை போலீஸார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், அதில் பெரியளவில் பலன் எதுவும் எட்டவில்லை. அதேசமயம், முன்னதாக காணப்பட்ட விதிமீறல்களின் அளவைக்காட்டிலும் தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்க மஹாராஷ்டிரா மாநிலத்தின் போக்குவரத்து போலீஸார், முற்றிலும் வித்தியாசமான நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளனர்.

அந்வகையில், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி மற்றும் சொமேட்டோ ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனங்களுடன் இணைந்து, வெகுமதி வழங்க திட்டம் வகுப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

'ஆப்ஹர் யோஜனா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ், புனே நகர போலீஸாரும், சொமேட்டோ மற்றும் சுவிக்கி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்துள்ளன.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

மேலும், இத்திட்டத்தின்மூலம், முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 50 சதவிகித தள்ளுபடி கூப்பன் வழங்கப்பட உள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஆன்லைன் புட் டெலிவரியில் அவர்கள் 50 சதவீதம் கேஷ் தள்ளுபடியைப் பெற்றுக்கொள்ளலாம். அதேசமயம், இந்த தள்ளுபடியை சுவிக்கி மற்றும் சொமோட்டோ ஆகிய இரு நிறுவனங்களின் ஃபுட் டெலிவரியில் மட்டுமே பெற முடியும்.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

இத்திட்டமானது, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதியிலிருந்து சோதனையோட்டமாக பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இத்திட்டம் ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

குறிப்பிட்ட, இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார், வாகன ஓட்டிகளிடம் ஆவணங்கள் குறித்த தரவுகளை கேட்கும்போது, அனைத்தையும் இல்லையென்று கூறாமல் காண்பிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வெகுமதி வழங்கப்படுகின்றது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

அவ்வாறு, அனைத்து பதிவுகளையும் வெற்றிகரமாக காண்பித்த பின்னர், 10 இலக்க கூப்பன் குறியீட்டு எண்ணை அந்த வாகன ஓட்டிக்கு போலீஸார் வழங்குகின்றனர். மேலும், அந்த குறியீட்டு எண்ணை வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கே நேரடியாகவும் அனுப்பி வைக்கின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

இத்திட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆகையால், இத்திட்டத்தைத் தொடர போலீஸார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், சில மாற்றங்களையும் அதில் மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்யதுள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

அதேசமயம், இத்திட்டத்தின்மூலம் ஏராளமானோர் பயனடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தள்ளுபடி கூப்பனைப் பெற்றிருப்பதாக புனே மிர்ரர்ஸ் எனும் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

இந்த திட்டம் முழுக்க முழுக்க சுவிக்கி மற்றும் சொமேட்டோ நிறுவனங்களால் நிதியளிக்கப்படுவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து தள்ளுபடிகளின் செலவீனங்களையும் அவர்களே ஏற்றிருப்பதாகவும் புனே நகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

இந்த விநோதமான முயற்சியானது, வாகன ஓட்டிகளை விதிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்கவும், விதிமீறல்களை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முன்னதாக, இதேபோன்று ஓர் வித்தியாசமான முயற்சியை டெல்லி நகர போலீஸார் மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கியவர்களுக்கு, இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

இவ்வாறு, வித்தியாசமான சில சம்பவங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும், உணவிற்கு தள்ளுபடி கூப்பன் வழங்குவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும். இத்திட்டம், எதிர்காலத்தில் மிகவும் பிரபலமடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பிற மாநிலங்களும் இதனை பின்பற்றலாம் என கூறப்படுகின்றது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

முன்னதாக, இதேபோன்று, விதிமுறையில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்கும் விதமாக, மத்திய அரசு அபராதத்தொகையை பத்து மடங்கு உயர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

அந்தவகையில், புதிய விதிகளின்படி, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குகின்றவர்களிடம் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. முன்னதாக இதற்கு ரூ. 500 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோன்று, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட உளளது.

வாகன ஓட்டிகளுக்கு சுவிக்கி, சொமேட்டோவின் 50 சதவீத தள்ளுபடி கூப்பனை வழங்கிய போலீஸார்... எதற்கு தெரியுமா...?

இதேபோன்று, ஹெல்மெட் அணியமால் இருசக்கர வாகனத்தை இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவ் செய்தல் உள்ளிட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதத் தொகை பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Follow Traffic Rules Get 50% Discount On Swiggy & Zomato Orders. Read In Tamil.
Story first published: Thursday, July 18, 2019, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X