சாப்பாடு வீடியோ போட்டே நல்லா சம்பாதிச்சுட்டாரு... அவரா இது... உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் அடையாளமே தெரியுது

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக் நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு (Royal Enfield). சாதாரண பொதுமக்கள் மட்டுமல்லாது, பிரபலங்கள் பலரும் கூட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை சொந்தமாக வைத்துள்ளனர். இதற்கு உதாரணமாக பலரையும் இங்கே குறிப்பிட முடியும்.

பிரபல நடிகர்களான மோகன்லால் (Mohanlal), ஜான் ஆபிரஹாம் (John Abraham), வருண் தவான் (Varun Dhawan), நானா படேகர் (Nana Patekar), ஜாக்கி ஷெராஃப் (Jackie Shroff) மற்றும் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் (Jonty Rhodes) போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த ராயல் என்பீல்டு பைக் உரிமையாளர்கள் ஆவர்.

Karan Dua Buys Royal Enfield Shotgun 650

இந்த வரிசையில் ராயல் என்பீல்டு பைக் வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியலில் மற்றொருவர் இணைந்துள்ளார். அவர் கரன் துவா (Karan Dua) ஆவார். யூடியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கரன் துவா மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்.

இர்ஃபானை (Irfan) போன்று, பல்வேறு ஹோட்டல்களுக்கும் சென்று ஃபுட் ரிவியூ (Food Review) செய்வதுதான் கரன் துவாவின் வேலை. Dilsefoodie என்ற பெயரில் இவரது யூடியூப் சேனல் இயங்கி வருகிறது. யூடியூப்பில் மட்டும் இவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். மறுபக்கம் இன்ஸ்டாகிராமில் இவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

Royal Enfield Shotgun 650

இந்த சூழலில், புத்தம் புதிய ராயல் என்பீல்டு சூட்கன் 650 (Royal Enfield Shotgun 650) பைக்கை கரன் துவா தற்போது வாங்கியுள்ளார். இந்த பைக்கை அவர் டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம்தான் சூட்கன் 650 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

கரன் துவா வாங்கியிருப்பது ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக்கின் ஸ்டென்சில் ஒயிட் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 3.73 லட்ச ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 4.70 லட்ச ரூபாய் வரும். இதன் மூலம் மிகவும் விலை உயர்ந்த ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாக இது திகழ்கிறது.

ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 648 சிசி, பேரலல் ட்வின், ஏர் கூல்டு இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 46 பிஹெச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக்கில் சென்று ஃபுட் ரிவியூ செய்வது, இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்வது போன்ற விஷயங்களை கரன் துவா விரைவில் செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம். அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அனேகமாக இதுவாகதான் இருக்கும் என்பது எங்கள் கருத்து. செய்வீங்களா கரன் துவா?

More from DriveSpark

Article Published On: Monday, March 4, 2024, 14:10 [IST]
English summary
Food review youtuber karan dua buys royal enfield shotgun 650 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+