மஹிந்திராவுக்கு பதில் மாருதி காரை வாங்கியது இந்த பிரபலமா!! காரணத்தை கேட்டால் நீங்களும் மனசு மாறிடுவீங்க!

கிருபால் அமன்னா (Kripal Amanna), வெவ்வேறான உணவுகளை ருசி பார்த்து வீடியோ வெளியிடும் பிரபல வீலாகர் (Vlogger). கர்நாடகாவை சேர்ந்த இவர் புதியதாக மாருதி சுஸுகி ஜிம்னி வாகனத்தை வாங்கி உள்ளார். மஹிந்திரா தார் வாகனமும் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும்போது, அதற்கு பதிலாக ஜிம்னியை வாங்கியது ஏன் என்பதை புதிய வீடியோ ஒன்றில் கிருபால் அமன்னா தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் பல்வேறு உணவு வகைகளை ருசித்து அந்த உணவுகளை சமைக்கும் மக்களின் கலாச்சாரத்தை பற்றி தெரிந்துக் கொள்வதில் ஒரு சிலர் ஆர்வமாக இருப்பர். இதற்காக, கடல்கடந்து சென்று உணவுகளை ருசி பார்க்க கூட அத்தகையவர்கள் தயாராக இருப்பார்கள். இத்தகைய உணவு பிரியர்களை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமே பல்வேறு தேசங்களில் காண முடியும்.

food vlogger bought maruti jimny

அத்தகையவர்களுள் ஒருவர் தான் கிருபால் அமன்னா. கர்நாடகா மாநிலம், பெங்களூரில் வசிக்கும் இவர் பல்வேறு வகையான உணவுகளை ருசித்து அதன் சுவையை விரிவாகவும், தெளிவாகவும் வீடியோக்களில் கூறுவதால் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக விளங்குகிறார். இத்தகையவர் மஹிந்திரா தாருக்கு பதிலாக மாருதி சுஸுகியின் ஜிம்னியை தேர்வு செய்திருப்பதற்கு கட்டாயம் ஒரு காரணம் இருக்கும் அல்லவா...

அதன் என்ன என்பதை வீடியோ ஒன்றின் வாயிலாக கிருபால் அமன்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது வீடியோவில் அவர் தெரிவித்து இருப்பதாவது, கிருபால் அமன்னாவிடம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் ஒன்று உள்ளது. இருப்பினும், கரடு முரடான அட்வென்ச்சர் பயணங்களுக்காக ஒரு வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார். ஆரம்பத்தில் இவரது யோசனையில் இருந்தது ஒரு அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

food vlogger bought maruti jimny

ஆனால், கிருபால் அமன்னாவிடம் ஏற்கனவே ஒரு பைக் இருந்த காரணத்தினால், பைக்கை விட பெரிய அட்வென்ச்சர் வாகனத்தை வாங்கும் முயற்சியில் மாருதி சுஸுகி ஜிம்னியை வாங்கி உள்ளார். இருப்பினும், உடனடியாக இவர் ஜிம்னியை வாங்கிவிடவில்லை. அந்த சமயத்தில் இவரது யோசனையில் ஜிம்னி, மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்கள் இருந்தன.

இவை மூன்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கான 4X4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட எஸ்யூவி வாகனங்கள் ஆகும். இதில் ஃபோர்ஸ் குர்கா வாகனத்தின் அளவு மிக பெரியதாக இருப்பதால் அதனை தனது ஃபேவரட் லிஸ்ட்டில் இருந்து கிருபால் நீக்கியுள்ளார். மீதம் இருப்பது ஜிம்னி மற்றும் தார் மட்டும்தான். இதில் மஹிந்திரா தாரை இவர் நிராகரித்ததற்கும் இந்த வாகனத்தின் அளவுதான் காரணம் ஆகும்.

food vlogger bought maruti jimny

மஹிந்திரா தாரில் வெறும் 3 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால், ஜிம்னியில் 5 கதவுகல் கிடைக்கின்றன. இருப்பினும், அளவில் ஜிம்னியை காட்டிலும் தார் பெரியதாக உள்ளது. கிருபால் அமன்னா அளவில் சிறிய வாகனத்தை எதிர்பார்த்ததால் ஜிம்னியின் பக்கம் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, 5 கதவுகள் இருப்பதால், ஜிம்னியின் பின் இருக்கைகளில் அமர்வதும், வெளியே வருவதும் எளிதாக இருந்ததால் ஜிம்னியை தேர்வு செய்துள்ளதாக கிருபால் தெரிவித்துள்ளார்.

மேலும், வாகனத்தின் பூட் ஸ்பேஸ் அளவை பற்றியும் இவர் ஆழமாக யோசித்துள்ளார். தார் வாகனத்துடன் ஒப்பிடுகையில், ஜிம்னியில் கொஞ்சம் பெரிய பூட்ஸ்பேஸ் கிடைக்கிறது. பின்னர், டிரைவிங் செய்வதை பற்றி பேசிய கிருபால், பயணத்தின்போது தாரில் குலுக்கல்கள் கொஞ்சம் அதிகமாக ஏற்பட்டதாகவும், ஜிம்னியில் இந்த பிரச்சனையை தான் உணரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். என்ஜின் பவரை பற்றி பெரியதாக யோசிக்கவில்லை என்பதால், பவர் அவுட்-புட் தனக்கு பெரியதாக தெரியவில்லை என கிருபால் அமன்னா தெரிவித்துள்ளார்.

food vlogger bought maruti jimny

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் உடனான போட்டியில் மாருதி சுஸுகி ஜிம்னி மண்ணை கவ்வியுள்ளது என சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் புள்ளி விபரங்களுடன் தெரிவித்து இருந்தோம். அதாவது, ஜிம்னியை காட்டிலும் மக்கள் தார் வாகனத்தை தான் அதிகம் வாங்குகின்றனர். ஆனால், உணவு வீலாகர் கிருபால் அமன்னா எதிர்மாறாக முடிவெடுத்து ஜிம்னியை வாங்கி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2024, 23:12 [IST]
English summary
Food vlogger bought maruti suzuki jimny over mahindra thar here the reasons
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X