பஸ் படிக்கட்டுல தொங்கிட்டு போறத பத்தி தான் ஊரே பேசுது, இதுல இவ்வளவு ஆபத்து இருக்குதா?
இன்று தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் செய்தி பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணித்த பள்ளி மாணவர்களை நடிகை ஒருவர் அடித்த வீடியோ வைரல் ஆகியது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது? இதனால் என்னென்ன மாதிரியான விளைவுகள் எல்லாம் ஏற்படும்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
தமிழக முழுவதும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அதன் மூலம் பள்ளி மாணவர்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து பள்ளிக்கும், பஸ் மூலம் பயணிக்க கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய தேவையில்லை. அவர்கள் பஸ் பாஸை கொண்டே இலவசமாக பயணிக்க முடியும். தமிழக அரசால் இந்த இலவச பஸ் பாஸ் என்பது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பஸ் பாஸ் இருப்பதால் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் அரசு டவுன் பஸ் களில் பயணிக்கவே விரும்புகின்றனர். இந்த பஸ்களில் பயணித்தால் மட்டுமே டிக்கெட் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் பள்ளி துவங்கும் நேரத்திலும் பள்ளி முடியும் நேரத்திலும் குறைவான எண்ணிக்கையிலான டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் அந்த ஒரே பஸ்ஸில் அனைத்து மாணவர்களும் ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதனால் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வார்கள். சிலர் அதையும் மீறி பஸ் பின்னால் உள்ள ஏணிகளிலும் பஸ் மேற்கூரையிலும் ஏரி கூட பயணம் செய்வதை நாம் பார்த்திருப்போம். இது பள்ளி மாணவர்களிடம் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களிடமும் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் இது பஸ் உள்ளே செல்ல இடமில்லாமல் படியில் தொங்குகிறார்கள் என்ற நிலைமை மாறி இன்று படியில் தொங்குவதை ஒரு வீர சாகசமாக மாணவர்கள் நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால் வேண்டுமென்றே பல மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.
இப்படி படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் செயலாகும். பஸ் என்பது மோட்டார் இன்ஜினில் நகரும் வாகனம் என்பதால் இது எந்த நேரத்திலும் பிரேக் பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிரேக் பிடிக்கும்போது படியில் தொங்கும் மாணவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் பிடி வழுகி அவர்கள் சாலையில் விழ வாய்ப்புகள் உள்ளது.

இதனால் படியில் தொங்கிக் கொண்டே பயணிப்பது என்பது மோட்டார் வாகன சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும். படிக்கட்டும் தூங்கிக்கொண்டே பயணம் செய்யும் சிலர் படியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமோ அல்லது உயிரிழப்பு ஏற்பட கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தகப் பையை போட்டுக் கொண்டே படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வார்கள்.
இப்படியாக அவர்கள் பயணிக்கும் போது அவர்கள் புத்தகப்பை அதிக எடை இருப்பதால் அதனால் கூட அவர்கள் கீழே விழ வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. படியில் தொங்கிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும்போது அந்த பஸ்ஸிற்கு பின்னால் வேறு ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். இதனால் இவர்கள் பஸ்ஸிலிருந்து தவறி கீழே விழும்போது பின்னால் வரும் வாகனத்தின் டயரில் விழுந்து அந்த வாகனம் ஏறி இவர்கள் உயிரிழக்கக்கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும்போது அவர்கள் தங்களது உடைமைகளில் கவனம் செலுத்த முடியாது. இதனால் அவர்கள் பின்னால் தொங்கிக் கொண்டிருக்கும் பை அவர்களிடம் உள்ள பர்ஸ் உள்ளிட்ட உடமைகளை திருடர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடிக் கொண்டு செல்லவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் பஸ்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்களிடம் இந்த பழக்கம் அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டே பயணித்தால் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் பஸ்ஸை தொடர்ந்து இயக்க கூடாது. அவர்கள் பஸ்ஸில் உள்ளே ஏறினால் மட்டுமே பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும். இப்படியாக நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பவர் சாலையில் செல்லும்போது பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவர் உடனடியாக அந்த பஸ்சை நிறுத்தி அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் சண்டையிட்டு பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே அந்த மாணவர்களை அடித்தார். அவர் பஸ்சை நிறுத்தியதும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருடன் இது குறித்து வாக்குவாதம் செய்ததும் சரியே. ஆனால் பஸ் படிக்கட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது வன்முறையை செலுத்தும் படி அடித்தது என்பது தவறான செயலாகும். அதற்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஸ் படிக்கட்டுகளில் தொங்கிய படியே பயணம் செய்வது மிகவும் ஆபத்தான பயணம் ஆகும். எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் இப்படியாக படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யவும் பழக்கம் அதிகமாக இருக்கிறது இதை தடுக்க அரசும் அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









