இந்திய ஆட்டோமொபைல் துறையின் டாப்- 9 பெரும் பணக்காரர்கள்: ஃபோர்ப்ஸ் பட்டியல்

Written By:

ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில், இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில், ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும் மிக முக்கியமான துறையாக விளங்கி வருகின்றது. மேலும், இத்துறை மூலம் நாட்டிற்கு அதிக அளவிலான வருவாயும், முதலீடுகளும் கிடைக்கின்றது.

ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த ஜாம்பவான்கள், யார் யார் எந்த எந்த மதிப்பீடுகளுடன் உள்ளனர் என்பதை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்வோம்.

9) ஆனந்த் மஹிந்திரா;

9) ஆனந்த் மஹிந்திரா;

ஆனந்த் மஹிந்திரா இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கிய புள்ளியாக விளங்குகின்றார்.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலில், 1.28 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 74-வது இடத்தில் இருந்தார்.

தற்போது, ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலில், 74-வது இடத்தில் இருந்து 99-வது இடத்திற்கு இறங்கிவிட்டார். மதிப்பீட்டில் கடும் இறக்கத்தை கண்ட இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார்.

கடந்த ஆண்டில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுனத்தின் பங்குகளின் மதிப்பு 10 சதவிகிதம் சரிந்ததே இதற்கு காரணமாக கருதப்படுவது.

ஆனந்த் மஹிந்திரா பற்றிய அரிய தகவல்கள்

8) அபேஹ் ஃபிரோதியா;

8) அபேஹ் ஃபிரோதியா;

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்மேனாக உள்ள அபேஹ் ஃபிரோதியா தற்போது 1.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 88-வது இடத்தில் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் தற்போதைய பட்டியலில் , 88-வது இடத்தில் உள்ள அபேஹ் ஃபிரோதியா, கடந்த ஆண்டு 91-வது இடத்தில் இருந்தார்.

பஜாஜ் குழும கம்பெனியுடன் அவர் கொண்டிருந்த தனது பங்குகளால் அவர் நல்ல பயனடைந்துள்ளார்.

இவர் இந்த ஆண்டின் புதிய ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலில், 3 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

7) லச்சுமண் தாஸ் மிட்டல்;

7) லச்சுமண் தாஸ் மிட்டல்;

இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனராக விளங்கும் லச்மன் தாஸ் மிட்டல், 2 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 52-வது இடத்தில் உள்ளார்.

84 வயதாகும் லச்மன் தாஸ் மிட்டல், கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 65 இடத்தில் இருந்தார்.

கடந்த ஆண்டை காட்டிலும், ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் தற்போதைய பட்டியலில், இவர் 13 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 1.5 பில்லியன் டாலர்களில் இருந்து 2 பில்லியன் டாலர்களாக, தனது சொத்து மதிப்பில் இவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

6) பாபா கல்யாணி;

6) பாபா கல்யாணி;

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் பாபா கல்யாணி, 2.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 41-வது இடத்தில் உள்ளார்.

பாபா கல்யாணி சொத்து மதிப்பு, அதே நிலையில் இறக்கம் காணாமல் இருந்த போதும், அவர் இரண்டு இடங்கள் நழுவிவிட்டார்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் கடந்த பட்டியலில் இவர் 39-வது இடத்தில் இருந்தார்.

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் துறையில் உள்ள பாரத் ஃபோர்ஜ் நிறுவனம், டிபன்ஸ் துறையிலும் தங்களின் தடம் பதித்து, விரிவாக்கம் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

5) அமால்கமேஷன்ஸ் குடும்பம்;

5) அமால்கமேஷன்ஸ் குடும்பம்;

அமால்கமேஷன்ஸ் குழுமம் என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்திருக்காவிட்டாலும், டாஃபே டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யுப்மண்ட்ஸ் என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

2.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் டாஃபே நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் மல்லிகா ஸ்ரீனிவாசன் 37 இடத்தில் உள்ளார்.

டாஃபே நிறுவனம் தான், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் கடந்த பட்டியலில், இவர் 47-வது இடத்தில் இருந்தார்.

சொத்து மதிப்பில் எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல், அதே நிலையில் இருந்தாலும், இவர் தற்போதைய ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலில் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

4) விவேக் சாந்த் சேஹ்கல்;

4) விவேக் சாந்த் சேஹ்கல்;

மதர்சன் சுமி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் விவேக் சாந்த் சேஹ்கல், தற்போது 36-வது இடத்தில் உள்ளார்.

2.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன், விவேக் சாந்த சேஹ்கல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் துறையில் வளரும் நட்சத்திரமாக கருதப்படுகிறார்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் கடந்த பட்டியலிலும், 2.35 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 36-வது இடத்தில் இருந்தார்.

2.35 பில்லியன் டாலர்களில் இருந்து, 2.5 பில்லியன் டாலர்கள் என சொத்து மதிப்பில் ஏற்றம் கண்ட போதும், தற்போதைய ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிலும், அதே 36-வது இடத்தில் நீடித்து வருகிறார்.

3) பிரிஜ்மோஹன் லால் முஞ்ஜால்;

3) பிரிஜ்மோஹன் லால் முஞ்ஜால்;

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிறுவனராக இருந்து, சமீபத்தில் மறைந்த பிரிஜ்மோஹன் லால் முஞ்ஜால், 3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன், 27-வது இடம் பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் கடந்த பட்டியலில், 3.7 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன், பிரிஜ்மோஹன் லால் முஞ்ஜால் 23-வது இடத்தில் இருந்தார்.

ஆட்டோமொபைல் துறையில், தங்களுக்கு இருந்த ஆளுமையை இழந்த மூன்று பெரும்புள்ளிகளில், பிரிஜ்மோஹன் லால் முஞ்ஜாலும் ஒருவராக உள்ளார்.

ஹீரோ மோடோகார்ப் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள், கடந்த ஒரு ஆண்டில் 16 % சதவிகிதம் குறைந்ததே இதற்கு காரணமாக விளங்குகிறது.

2) விக்ரம் லால்;

2) விக்ரம் லால்;

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.ஈ.ஓ-வாக இருந்த விக்ரம் லால், 4.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் கடந்த ஆண்டின் பட்டியலில், 2.95 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் விக்ரம் லால் 29-ஆம் இடத்தில் இருந்தார்.

ஒரு ஆண்டு காலத்திற்குள், ராயல் என்ஃபீல்ட்டின் அபாரமான மற்றும் திறன்மிக்க ஆளுமையால், விக்ரம் லால் தற்போதைய ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலில் 9 இடங்கள் முன்னேறி, இந்தியாவின் 20-வது பெரிய பணக்காரராக விளங்குகின்றார்.

1) பஜாஜ் குடும்பம்;

1) பஜாஜ் குடும்பம்;

ஆட்டோமொபைல் துறையை பொறுத்த வரை, பஜாஜ் குடும்பம் தான் முடி சூடா மன்னர்கள் போல் உள்ளனர் என்றால் அது மிகையாகாது.

மோட்டார்சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்களில், உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், அதிக பணக்கார நிறுவனமாகவும், பஜாஜ் குடும்பம் விளங்குகின்றது.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் தற்போதைய பட்டியலில், 4.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் பஜாஜ் குடும்பம் 19-வது இடத்தில் உள்ளது.

ஃபோர்ப்ஸ் இதழின் கடந்த ஆண்டு பட்டியலில், 4.1 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 20-வது இடத்தில் இருந்து, .3 பில்லியன் டாலர்கள் முன்னேற்றம் அடைந்து, பஜாஜ் குடும்பம் நிறுவனம் 19-வது இடத்தை தற்போது பிடித்துள்ளது.

English summary
Forbes Magazine has listed the Top most wealthiest entities in Indian auto industry. Forbes Magazine has come up with the recent list of Top 100 richest Indians. There are some 9 Automobile domain Giants who have carved their names into this List. This is a presentation of those Automobile Domain Giants.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark