ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!

டாடா நிறுவனம் உலகளவில் பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, தரமான தயாரிப்புகளை வெளியிடுவதில் 5 இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

இந்திய வாகன உலகின் ஜாம்பவனாக செயல்பட்டு வரும் டாடா நிறுவனம், உலகளவில் புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது, அந்த நிறுவனத்திற்கான அங்கீகாரமாக மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பெருமையான தருனமாக பார்க்கப்படுகின்றது.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம், உலகின் சிறந்த வாகனம் மற்றும் நிறுவனங்கள் குறித்த தகவலை ஆண்டு ஒன்றிற்கு வெளியிடும். அந்தவகையில், 2019ம் ஆண்டிற்கான சிறந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

இதில், உலகளாவிய அளவில் தரமான வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால், டாடா நிறுவனம் தற்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

இந்த புதிய உச்சத்தின்மூலம், உலகளவில் இந்திய தயாரிப்புகள் தரம் வாய்ந்தவை என்பதை வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் பாதுகாப்பு சிறந்தது என்பதை விளக்கும் வகையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருந்தது. இதன்மூலம், இந்தியாவிலும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் தயாரிக்க முடியும் என்பதை வெளியுலகிற்கு டாடா நிறுவனம் நிரூபித்திருந்தது.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

இந்நிலையில், தரமான வாகனங்களைத் தயாரிப்பதில் உலகளவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து டாடா நிறுவனம் சாதனைப் படைத்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

அதேசமயம், டாடாவின் மற்ற அனைத்து தயாரிப்புகளும் ஒட்டுமொத்தமான பார்வையில் 31 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 31வது இடம் என்பது உலகளாவிய 2,000 நிறுவனங்களைப் பின்னுக்கு தள்ளி அது பெற்றிருக்கின்றது.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

கடந்த வருடம் டாடா 70வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அது மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக தற்போது 31 வது இடத்தைப் பிடித்துள்ளது.

டாடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த மதிப்பானது, 50 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சர்வேவின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

இந்த சர்வேவானது, டாடா நிறுவனத்தின் ஒட்டுமொத்த சேவையைக் கணக்கில் கொண்டு கொடுக்கப்பட்டதாகும்.

டாடாவிற்கு கிடைத்த இந்த அங்கீகாரம்குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் குவேந்தர் பத்சோக் கூறியதாவது, "ஃபோர்ப் பத்திரிக்கை உலக சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக எங்களை அறிவித்ததைக் கண்டு நாங்கள் மகிழ்கின்றோம். அதிலும், 2,000 நிறுவனங்களில் டாப் 50 இடத்திற்குள் இருப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் பெறுமை கொள்கின்றோம்" என்றார்.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

தொடர்ந்து பேசிய அவர், "உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இந்திய கொடியை உயர்த்துவது நாங்கள் பெறுமையுடன் உணர்கின்றோம். தற்போது கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் எங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அதேபோன்று, டாடா தயாரிப்புகள் தரமானவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மதிப்பாய்வு உள்ளது" என தெரிவித்தார்.

பட்ஜெட் ஜாம்பவான் டாடாவுக்கு உலக அரங்கில் கிடைத்த கௌரவம்... பன்னாட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!!

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த மதிப்புக்கூட்டப்பட்ட பட்டியலில், டாடா நிறுவனத்தின் மேலும் சில தயாரிப்புகளான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவையும் உள்ளடங்கும்.

மேலும், டாடா நிறுவனத்தைப் போன்று கூடுதலாக 16 இந்திய நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2019, 20:13 [IST]
English summary
Forbes Says Tata Is The 5th Best Global Automaker In The World. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+