15 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிட்டு, டிராக்டரில் இழுக்க வேண்டியதாகி விட்டதே!! இன்னும் பயிற்சி வேண்டுமோ...
முந்தைய காலங்களில் எல்லாம், வாழ்க்கையில் மன நிம்மதியை தேடி அழைவோர் பைக்கை எடுத்து கொண்டு லடாக் போன்ற இடங்களுக்கு லாங்-டிரைவ் சென்றிவிடுவர். ஆனால் இப்போது நிறைய பேர் கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களில் இறங்கி விடுகின்றனர். சாலையில் ஓர் சிறிய பள்ளம் கிடந்தாலே அதில் வாகனத்தை எப்படி ஏற்றி இறக்குவது என யோசித்த காலம்போய், தற்போது எத்தகைய காலத்தில் வந்து நிற்கிறோம் என்று பாருங்கள்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த காலங்களில் இருந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழிற்நுட்பத்திலும், இயந்திர நுட்பத்திலும் அடைந்துள்ள வளர்ச்சி ஆகும். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வாகனங்களில் டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி-லாக் பிரேக்குகள் போன்ற அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன், 4x4 டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின் & கியர்பாக்ஸினால் ஆஃப்-ரோடு பயணங்கள் இன்னும் எளிமையாகி உள்ளன.

இருப்பினும் சில காரணிகளினால், சகதி மற்றும் மணல் மிகுந்த பாதைகளில் ஆஃப்-ரோடு வாகனங்களாக இருப்பினும் சிக்கி கொள்ளவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், மணல் மற்றும் கற்கள் மிகுந்த ஆஃப்-ரோடில் சென்ற ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி வாகனம் ஒன்று மணலில் சிக்கி கொண்டுள்ளது.
சுட்டெரிக்கும் மதிய வேளை, கடற்கரை மணல் அளவிற்கெல்லாம் இல்லை, ஆனால் இந்த ஃபோர்ஸ் குர்காவின் பின் சக்கரங்கள் புதைவதற்கு போதுமானதாக இருந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே இறுதியாக காணலாம். வீடியோவின் துவக்கத்தில், ஃபோர்ஸ் குர்கா வாகனம் ஒன்றினுள் ஓட்டுனர் மற்றும் பயணிகள் அமர்ந்திருக்கின்றனர். இதில் ஒருவர்தான் இந்த வீடியோவையும் காட்சிப்படுத்தி உள்ளார்.

மணற்பரப்பில் நல்லப்படியாக சென்று கொண்டிருந்த இந்த குர்கா வாகனத்தை டிரைவர் ஒரு குன்றின் மீது ஏற்ற முயல்கிறார். ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது குர்கா எஸ்யூவி வாகனத்தை ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற வாகனம் என்று சொல்லித்தான் விற்பனை செய்கிறது. இருப்பினும், இந்த குன்றின் மீது குர்காவை ஏற்ற முடியவில்லை. இத்தனைக்கும் அந்த குன்று ஒன்றும் அவ்வளவு பெரியது கிடையாது. அல்லது ஓட்டுனரின் டிரைவிங் திறமை போதவில்லையா என தெரியவில்லை.
இருப்பினும், ரிவர்ஸில் வந்து தொடர்ந்து முயற்சி செய்த இந்த குர்கா டிரைவர், ஒரு கட்டத்தில் வாகனத்தை பின்னோக்கியும் இயக்க முடியவில்லை. அதாவது, முன்னோக்கியும் செல்ல முடியவில்லை, ரிவர்ஸிலும் வர முடியவில்லை. ஏறுமுகமான அந்த மணற்குன்றில் சிக்கி கொண்டுள்ளது. வாகனத்தின் ஆஃப்-ரோடு மோட்கள் பலவற்றை முயற்சி செய்து பார்த்தும் பலனில்லை. காருக்கு வெளியே வந்து தள்ள முயன்றும் நகரவில்லை. காரின் டயர்கள் மென்மையான அந்த மணலில் நன்கு புதைந்துவிட்டன.

இதனால் வேறு வழியின்றி டிராக்டரை அழைக்க வேண்டியதாகி விட்டது. குர்காவின் முன்பக்க பம்பரையும், டிராக்டரையும் இணைத்தவாறு ஒரு கயிற்றை கட்டினர். குர்கா வாகனத்தில் இதற்காகவே ஒரு கொக்கி முன்பகுதியில் வழங்கப்படுகிறது. கயிற்றை கட்டியவுடன், வீடியோவை காட்சிப்படுத்தியவர் உள்ளே அமர்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறார். அப்போதுதான் ஓடோமீட்டரில் அவரது கவனத்திற்கு வாகனம் சூடாகியுள்ளது தெரிய வருகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மணற்குன்றின் மீது ஏற அதிக முறை முயற்சி செய்ததினால்தான் அந்த குறிப்பிட்ட இடத்தில் மணல் இலகுவாகியுள்ளது. என்ஜின் அதிகம் உழைத்ததால் ஓடோமீட்டர் ஹீட் சிக்னல் காட்டியதை மறந்துவிட வேண்டாம். ஏனெனில் இந்த குறிப்பிட்ட குர்கா வாகனத்தில் ஓவர் ஹீட்டிங் மிக பெரிய பிரச்சனையாக உள்ளதாக இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைதான் கீழே காண்கிறீர்கள்.


Click it and Unblock the Notifications
