ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா- 1 பந்தய காரின் ஸ்டீயரிங் வீல் திருடு போனது!

By Saravana

ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் அதிவேகத்தையும், சாதனைகளையும் மட்டுமல்ல, பல விந்தையான சம்பவங்களையும் பதிவு செய்து வருகிறது. ஆம், இத்தாலியில் நடந்த ஃபார்முலா - 1 போட்டியின்போது, ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா - 1 பந்தய காரின் விலை மதிப்புமிக்க ஸ்டீயரிங் வீல் திருடு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வார இறுதியில் இத்தாலியின் மோன்ஸா நகரில் நடந்த ஃபார்முலா -1 கார் பந்தயத்தின்போது, இந்த திருட்டு சம்பவம் நடந்தது அணியினரையும், அமைப்பாளர்களையும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருட்டு

திருட்டு

மோன்ஸா நகரின் ஃபார்முலா 1 பந்தய களத்தில், ஃபோர்ஸ் இந்தியா அணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில், அந்த அணியின் ஃபார்முலா 1 பந்தய காருக்கான ஸ்டீயரிங் வீல் வைக்கப்பட்டு இருந்தது. போட்டி துவங்குவதற்கு முன் அந்த அணியின் பணியாளர்கள், அறையில் சென்றபோது, காரின் ஸ்டீயரிங் வீல் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டனர்.

 புகார்

புகார்

எங்கு தேடியும் கிடைக்காததால், மோன்ஸா நகர போலீசில் ஃபோர்ஸ் இந்தியா அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுதொடர்பாக, தீவிர விசாரணையும் நடக்கிறது.

மதிப்பு

மதிப்பு

திருடு போன ஸ்டீயரிங் வீல் 1,00,000 யூரோ விலை மதிப்பு கொண்டது.

கழற்றி முடியும்

கழற்றி முடியும்

ஃபார்முலா - 1 கார்களில் ஸ்டீயரிங் வீலை தனியாக கழற்றிவிட முடியும். அப்படி, கழற்றி வைத்திருந்தபோதே, இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

அவசியம்...

அவசியம்...

விலை மதிப்புமிக்க பொருள் மட்டுமின்றி, ஃபார்முலா - 1 காரை இயக்குவதற்கான பல்வேறு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை அந்த ஸ்டீயரிங் வீல் கொண்டிருக்கிறது. எனவே, திருடிச் சென்றவர்கள் அந்த ஸ்டீயரிங் வீல் தொழில்நுட்பத்தை கண்டறிந்துவிடுவார்கள் என்பதும் ஃபோர்ஸ் இந்தியா அணியின் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

தொடர்பான செய்திகள்...

தொடர்பான செய்திகள்...

More from DriveSpark

Article Published On: Tuesday, September 8, 2015, 15:09 [IST]
English summary
The world of Formula One is packed with high adrenalin action. It is also packed with the weirdest incidences like how Force India experienced one. At Monza, the team managed to fall prey to a thief who has stolen a spare steering wheel that belonged to the team. The team has lodged a complaint with the police.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+