கஸ்டமரின் விலை உயர்ந்த காரை சில்லு சில்லாக நொறுக்கிய மெக்கானிக்... நடந்தது தெரிஞ்சா கோவப்படுவீங்க
வாடிக்கையாளரின் விலை உயர்ந்த காரை மெக்கானிக் சில்லு சில்லாக நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார் ஆர்வலர்கள் பெரும்பாலானோர், தங்கள் வாகனங்களை தேவைக்கு ஏற்ற வகையில், மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். இந்த வகையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த மார்க் கிராஜ் என்பவர் தனது காரை மாடிஃபிகேஷன் செய்தார். இவர் வெகு சமீபத்தில்தான் 6ம் தலைமுறை ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang) காரை வாங்கினார்.

ஃபோர்டு மஸ்டாங் காரை பற்றி யாருக்கும் அறிமுகமே தேவைப்படாது. உலகம் முழுவதும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக ஃபோர்டு மஸ்டாங் திகழ்கிறது. இந்த காரை வெறும் 428 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓட்டிய நிலையில், இதற்கு இன்னும் அதிக பவர் தேவை என்று அதன் உரிமையாளரான மார்க் கிராஜ் நினைத்தார்.

இதனால் லவ்லேண்ட் ஃபோர்டு டீலரிடம் சென்ற மார்க் கிராஜ், தனது காரில் சூப்பர் சார்ஜரை இன்ஸ்டால் செய்யும்படி கேட்டு கொண்டார். இதன் பேரில், மார்க் கிராஜின் காரில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி சூப்பர் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டது. ஆனால் டீலர்ஷிப்பை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் அதனை டெஸ்ட் டிரைவிற்கு எடுத்து சென்றார்.

சூப்பர் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதால், உரிமையாளருக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக அவர் டெஸ்ட் டிரைவ் சென்றார். ஆனால் தனது நண்பர் ஒருவரையும் அவர் உடன் அழைத்து சென்றார். அதே சமயம் டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனால் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய அந்த டீலர்ஷிப்பின் பொது மேலாளர் ஹாரி ஜான்ஸ்டன், சம்பந்தப்பட்ட மெக்கானிக் பொறுப்பற்ற முறையில் கார் ஓட்டியதாகவும், இதனால் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இதற்கு முரண்பாடான கருத்தை மார்க் கிராஜ் கூறியுள்ளார்.

அதாவது அந்த மெக்கானிக் இன்னமும் அங்குதான் வேலை செய்து கொண்டிருப்பதாக மார்க் கிராஜ் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். இது போன்ற காரணங்களால் இனி லவ்லேண்ட் ஃபோர்டு டீலரிடம் மீண்டும் செல்ல மாட்டேன் எனவும் மார்க் கிராஜ் சபதம் செய்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான பெர்ஃபார்மென்ஸ் கார்களில், ஃபோர்டு மஸ்டாங் மாடலும் ஒன்றாக உள்ளது. அந்த காரின் பெர்ஃபார்மென்ஸை மேலும் அதிகரிக்க விரும்பிய உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள அவலம் ஃபோர்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நேர்ந்த நிகழ்வுகளை பேஸ்புக் வாயிலாக மார்க் கிராஜ் தெரிவித்தார்.

தற்போது அவரது பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ஃபோர்டு நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஃபோர்டு மஸ்டாங் மிகவும் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








