கடன் வாங்கி கார் வாங்க நினைப்பவர்கள் கவனத்திற்கு! உங்க காரை தூக்கிட்டுப் போக இப்படி ஒரு வழி வரப்போகுதா?

இன்று வாகனம் வாங்கும் பலர் அந்த வாகனத்தை பைனான்ஸ் மூலம் தான் வாங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்தி மீதம் உள்ள தொகையை மாதம் மாதம் இஎம்ஐஆக செலுத்தி வாகனங்களை வாங்கி வருகின்றனர்.

இப்படியாக பைனான்ஸ் மூலம் வாகனம் வாங்கும் போது அந்த வாகனத்தின் ஒரு சாவி பைனான்ஸ் நிறுவனத்திடம் இருக்கும். ஒரு வேளை நாம் இஎம்ஐயை சரியாகச் செலுத்தவில்லை என்றால் குறிப்பிட்ட நபரின் வாகனத்தை அந்த சாவியை வைத்து பைனான்ஸ் நிறுவனம் ஜப்தி செய்துவிடும்.

கடன் வாங்கி கார் வாங்க நினைப்பவர்கள் கவனத்திற்கு! உங்க காரை தூக்கிட்டுப் போக இப்படி ஒரு வழி வரப்போகுதா?

தற்போது கனெக்டெட் கார்கள் வந்த பின்பு கார்களை ஓனருக்கு தெரியாமல் ஜப்தி செய்வது எல்லாம் முடியாமல் போகிறது. ஆனால் ஒரு வேளை காரின் உரிமையாளர் சரியாக இஎம்ஐ செலுத்தவில்லை என்றால் பைனான்ஸ் நிறுவனம் காரை லாக் செய்துவிட்டால் எப்படி இருக்கும்? அதாவது கார் ஒனரே காரை பயன்படுத்த முடியாத படி லாக் செய்தால் எப்படி இருக்கும்?

இப்படியான ஒரு தொழிற்நுட்பத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான காப்புரிமைக்காக அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அதன்படி ஒரு காரின் உள்ள ஏசி, இன்ஜின் டோர் ஆகியவற்றைச் செயல்படவிடாமல் ஆன்லைன் மூலமே லாக் செய்யும் தொழிற்நுட்பத்திற்கான காப்புரிமைக்காகக் கோரியுள்ளனர்.

அதாவது ஒனர் காரை ஓட்டிக் கொண்டிருந்தால் காரின் ஏசியை ஆஃப் செய்வது, அதுவே காரை ஒரு இடத்தில் பார்க் செய்திருந்தால் இன்ஜின் மற்றும் டோரை இயக்க விடாமல் ஆஃப் செய்வது ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய முடியும். இப்பொழுது கடன் வாங்கி கார் வாங்கினால் பைனான்ஸ் நிறுவனத்திடம் இதற்கான அதிகாரம் இருக்கும்.

இதைக் கேட்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? ஃபோர்டு நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்திற்கான காப்புரிமைக்காக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. இதை கார்களில் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

இந்த தொழிற்நுட்பத்தில் முக்கியமாக இன்ஜின், டோர், ஏசி உள்ளிட்ட பொருட்கள் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இது போக க்ரூஸ் கண்டரோல், எலெக்ட்ரானிக் ஜன்னல் கண்ணாடி கண்ட்ரோலர், கார் சாவி, ஆக்ஸிலரேட்டர் உள்ளிட்டவற்றையும் லாக் செய்ய முடியும். காரின் உரிமையாளர் இஎம்ஐ செலுத்த வில்லை என்றால் இதில் எதை வேண்டுமானாலும் பைனான்ஸ் நிறுவனத்தால் லாக் செய்ய முடியும்.

ஆனால் ஃபோர்டு நிறுவனம் இது குறித்து விளக்கமளித்த போது இப்படியாக தொழிற்நுட்பத்தை காருக்கு கொண்டு வர முடிவு செய்யவில்லை காப்புரிமைக்காக சில தொழிற்நுட்பங்களை பதிவு செய்வது வழக்கம் அதன் அடிப்படையில் தான் இதைப் பதிவு செய்துள்ளோம். இதைப் பற்றி மக்கள் பயன்பட வேண்டிய அவசியம் இல்லை.

இதற்காக ஃபோர்டு நிறுவனத்திற்குக் காப்புரிமை கிடைத்ததா என் தகவல் இல்லை. இந்த தொழிற்நுட்பத்தை பைனான்ஸ் நிறுவனங்கள் தவறாகக் கையாளும் என்ற அச்சம் இருப்பதால் இப்படியான தொழிற்நுட்பத்தை அனுமதிப்பது பற்றி அந்நாட்டு அரசு யோசித்து வருகிறது. இந்த தொழிற்நுட்பம் இந்தியாவிற்கு வந்தால் என்ன நடக்கும்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, March 3, 2023, 18:30 [IST]
English summary
Ford develops technology to shut down the car if the owner has not paid emi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+