ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவில் விபத்து: டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் உயிர் தப்பினார்

கோவாவில் கடந்த இரு வாரங்களாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் மீடியா டிரைவ் நடந்து வருகிறது. ஆன்லைன் மீடியா, பிரின்ட் மீடியா, டிவி மீடியாவுக்காக தனித்தனியாக டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த வாரங்களாக நடந்து வரும் இந்த டெஸ்ட் டிரைவ் இந்த வாரத்துடன் முடிவடைகிறது.

இந்த டெஸ்ட் டிரைவில் ஃபோர்டு நிறுவனத்தின் அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்ட் சார்பில் ஆங்கில எடிட்டர் ஜோபோ குருவில்லா கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் வடநாட்டு பத்திரிக்கையாளர் ஒருவரும், எமது எடிட்டரும் சென்றுள்ளனர்.

ஈக்கோஸ்போர்ட் விபத்து

ஈக்கோஸ்போர்ட் விபத்து

குறிப்பிட்ட தூரத்துக்கு ஒருவர் என்ற முறையில், முதலில் காரை வடநாட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் ஓட்டியுள்ளார். எமது எடிட்டர் சக பயணியாக அமர்ந்து சென்றுள்ளார்.

ஈக்கோஸ்போர்ட் விபத்து

ஈக்கோஸ்போர்ட் விபத்து

அப்போது, அதிவேகமாக காரை செலுத்தி டெஸ்ட் டிரைவ் செய்யும்போது ஒரு வளைவில் திரும்புகையில், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈக்கோஸ்போர்ட் விபத்து

ஈக்கோஸ்போர்ட் விபத்து

காற்றுப் பைகள் உரிய நேரத்தில் விரிவடைந்தது மட்டுமின்றி, தானியங்கி அவசர கால பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சரியான நேரத்தில் வேலை செயதுள்ளன. இதனால், இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

ஈக்கோஸ்போர்ட் விபத்து

ஈக்கோஸ்போர்ட் விபத்து

காரை ஓட்டியவரின் மொபைல்போன் ஃபோர்டு அவசர கால உதவி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் போயுள்ளது.

ஈக்கோஸ்போர்ட் விபத்து

ஈக்கோஸ்போர்ட் விபத்து

அடுத்த 10 நிமிடங்களுக்குள் அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் உதவி கிடைத்துள்ளது. காரை ஓட்டியவருக்கு காற்றுப் பை விரிவடைந்ததால், கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தொலைபேசி மூலம் எம்மிடம் தெரிவித்தார்.

ஈக்கோஸ்போர்ட் விபத்து

ஈக்கோஸ்போர்ட் விபத்து

இந்த பயங்கர விபத்திலிருந்து மீண்ட எமது ஆங்கில எடிட்டர் நாளை பெங்களூர் திரும்புகிறார்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2013, 16:03 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+